போகர் சப்தகாண்டம் 3151 - 3155 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3151. தானான பட்டையுடன் யிம்புராவும் தாக்கான மாசிக்காய் தான்றிக்காயும்
மானான கடுக்காயும் மகரப்பூவும் மாசற்ற ஏலமுடன் நெல்லிக்காயும் 
கோனான குமட்டியின் விரையினோடு கொடிதான வூமத்தின் விரையுந்தானும்
பானான கெஞ்சாவின் விரையுந்தானும் பளிங்கான கொடிவேலிமஊலியாமே

விளக்கவுரை :


3152. ஆமேதான் மூலியொடு சூரைவித்து அப்பனே வேலியென்ற பருத்திதானும்
தாமேதான் வலம்புரியு மிடம்புரியுமாகும் தாக்கான வவமுக்கராவின் தோல்தானும்
வேமேதான் தாதுமாதுளையின்வேறும் மிக்கான வாத்தலரிசரளிதானும்
நாமேதான் சொன்னபடி யிருவேலிகூட்டி நயம்பெறவே சூரணமாய் செய்துகொள்ளே

விளக்கவுரை :

[ads-post]

3153. கொள்ளவே கற்கவகை யின்னஞ்சொல்வேன் கோளாறுநேராமல் குருபதத்தால்
விள்ளவே தக்கோலம் பரங்கிப்பட்டை விருப்பமுடன் வாலுளுவை திப்பிலியுமாகும்
மெள்ளவே யிருசீரங் காட்ச்சீரம் மேலானவாய்விளங்கம் ஓமந்தானும்
அள்ளவே ரோஜனையும் பூவாலாகும் அப்பனே பூமிசக்கரையுமாமே

விளக்கவுரை :


3154. சக்கரையுந் சீந்தியொடு சதாவேலிதானும் தாக்கான பெருவாகை சிறுவாகையாகும்
ஒக்கவே தண்ணீரின் மிட்டானாகும் உற்பனமாம் தம்பலப்பூச்சிதானும்
சிக்கவே பாதிரிமுல்லைத்தானும் சீராவாஞ் செங்கழுநீர் பூண்டுமாகும்
தக்கவே சிவகரந்தை விஷ்ணுகரந்தை சட்டமுடன் சாட்டாணைக் கூடச்சேரே

விளக்கவுரை :


3155. சேரவே வசுவாசி மிளகுதானும் சிறப்பான வேரமுடன் ரேவல்சின்னி
தீறவே விச்சியுடன் ஆலம்வித்து திறமான பேயத்தி விரையுமாகும் 
பாரமுடன் கடலாஞ்சி யட்டைதானும் பாங்கான நடுவன்னாகள் பட்டைகூட்டி
வாரவே விளாம்பழத்தின் வித்துகூட்டி வகுப்பான எலுமிச்சைவித்துமாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3146 - 3150 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3146. சொல்லான சொல்லுக்குக் குறைநேராமல் தோற்றமுடன் ஆவின்பால் படிதான்கொண்டு
புல்லான சீலைதனைவேடுகட்டி புகழான கெஞ்சாவை மேலேவைத்து
கல்லான பாண்டமதை மேலேமூடி கடியான வாலுகையா மேலேவைத்து
மெல்லவே தீயெரிப்பாய் சாமம்ரெண்டு விருப்பமுடன் கண்டமட்டும் எரித்திடாயே

விளக்கவுரை :


3147. எரிக்கவே இப்படியே பத்துமுறைதானும் எழிலான கெஞ்சாவை சுத்திசெய்து
வெரிக்கவசம் போவதற்கு பின்னுஞ்சுத்தி வேகமுடன் சொல்லுகிறேன் மைந்தாகேளு
பொரிக்கவசம் நிம்பழத்தின் சாற்றினாலே பொருந்தவே பத்துமுறை முன்போற்றீட்சை
சரியுமே செய்யுகையில் கெஞ்சாசுத்தி சட்டமுடன் காலாங்கி உரைத்ததாமே

விளக்கவுரை :

[ads-post]

3148. தாமான கெஞ்சாவை எடுத்துக்கொண்டு சட்டமுடன் ரவிதனிலே காயப்போடு
காமான கல்லுரலில் போட்டுமைந்தா கருவாகத் தூளிடித்துப் பொடியாய்ச்செய்து
வேமானமானதொரு வபினிதன்னை வேகமட்போவதற்கு பின்னுங்கேளு
சாமானமாகவேதான் எளநீர்தன்னால் சட்டமுடன் தீட்சையது பத்துசெய்யே

விளக்கவுரை :


3149. செய்யவே யபினுக்கு தீட்சையப்பா செப்புகிறேன் வருண்மைந்தா யின்னம்பாரு
துயஃயவே பசும்பாலாம் பசுமோராகும் துப்புரவாய் சுத்தியது நன்றாய்ச்செய்து
செய்யவே பத்துமுறை தீட்சைதானும் பேரான வபினுக்குச் செய்யவேண்டும்
உய்யவே தீட்சையது வானபின்பு உத்தமனே கடைசரக்கு செப்பக்கேளே  

விளக்கவுரை :


3150. கேளேதான் சுக்குடனேவாள்மிளகுதானும் கெடியான கெசகெசா மராட்டிமொக்கு
வேளேதான் லவங்கமுடன் லவங்கப்பட்டை வேகமுடன் சாதிக்காய் சாதிபத்திரி
கோளேதான் நேராமல் ஜீராவும் குணமான ரூமஸ்திபாஜிபந்து
பாளேதான் போகாமல் பேதானாவும் பாங்குபெற லவங்கமென்ற பட்டைதானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3141 - 3145 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3141. உண்டோதான் வையகத்தில் சித்தனுண்டோ ஓகோகோயுந்தனையும் ரிஷிதானென்பார்
திண்டான தேவமுனி யுன்னையென்பார் திறமையுள்ள நாதாக்கள் குருவேயென்பார்
சண்டாளமானதொரு கருமிமாண்பர் சட்டமுடன் பொய்நாத னென்பார்கண்டீர்
கண்டாலும் விடுவாரோ சித்துரூபம் காசினியில் சபித்திடுவார் உண்மைபாரே

விளக்கவுரை :


3142. பார்க்கவென்றால் நாதாக்கள் சித்துரூபம் பட்சமுடன் உந்தனிட அருகில்வந்து
தீர்க்கமுடன் வருந்தியல்லோ முப்புகேட்பார் திகழுடனே குருவெனக்கு வேண்டுமென்பார்
கார்க்கவென்று மன்றாடி குருகேட்டாலும் கர்த்தனே யந்தனிட கடாட்சமென்று
மூர்க்கமது வாராமல் முன்னேநின்று முடிவணங்கி யடிபணிந்து மொழரசொல்வீரே

விளக்கவுரை :

[ads-post]

3143. மொழியான வார்த்தைக்கு முன்னேநின்று மோசமது வாராமல் முடிவுசொல்லி
வழியான துரையோடு மார்க்கஞ்சொல்லி வகையுடனே யவர்தமக்கு தொண்டுசெய்து
பழியான வார்த்தைக்கு இடங்கொடாமல் பட்சமுட னவர்மீதில் கிருபைவைத்து
சுழியான வாசிமுனை தன்னைநோக்கி சூட்சாதிசூட்சமத்தைக் கேட்டிடீரே

விளக்கவுரை :


3144. கேட்டளவில் வுன்மீதில் கிருபைவைத்து கேள்விக்குத்தாரவிடையுஞ்சொல்லி
நாட்டமுடன் பரிபோகம் மிகவுஞ்செய்து நயமுடனே சரசமுறைதானுரைத்து
தேட்டமுடன் மனதிறங்கி செய்துகொண்டு தெளிவான குருவதனை யடைந்துகொள்ள
வாட்டமுடன் லகுவுடனே பின்னுங்கேட்பார் வகைமோசம்போகாதே மன்னாகேளே

விளக்கவுரை :


3145. கேட்கவே யவர்தமக்கு களிப்புகொள்ள கெவனமுடன் குளிகையென்ற லேகியங்கேள்
சூட்சமுடன் மாணாக்கள் பிழைக்கவென்று தொல்லுலகில் அடியேனுங் கருணைகூர்ந்து
நீட்டமுடன் கோரக்கர்மூலி தன்னைநேர்மையுடன் தானெடுப்பாய் சேர்தான்ரெண்டு
வாட்கமல வட்டமென்ற பாண்டந்தன்னில் வகையுடனே காலாங்கி சொற்படிக்கே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3136 - 3140 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3136. தாக்கவென்றால் கிரதங்கள் லேகியங்கள் தகமையுள்ள செந்தூரம் பற்பம்யாவும்
நோக்கமுடன் குளிகைகள் பாடம்யாவும் நுணுக்கமுடன் மாத்திரைகள் கட்டுவகையாகும்
சூட்சமுடன் தயிலங்கள் எண்ணைமுதல்யாவும் சுளுவான சூரணங்கள் முதலாய்
தூக்கமுடன் கடுகளவு பட்டால்போதும் துரையான மருந்தெல்லாம் வீறுமாமே

விளக்கவுரை :


3137. வீறான வவுஷதங்கள் முப்பூபட்டால் விடுபட்டுப்போகுமடா பிணிகளேது
கூறான வவுஷதங்கள் காரமெத்த குடிலமுடன் நோயெல்லாஞ் சுன்னம்பாரு
நீரான நேத்திரங்கள் சிவந்துகாட்டும் நெடிதான மேனியது கறுப்புமாகும்
தூரான நோயெல்லாங் காடேபோகும் துப்புறவாய் முப்பூவின் மகிமைதானே

விளக்கவுரை :

[ads-post]

3138. தானான முப்பூவின் மகிமையாலே சட்டமுடன் சரக்கெல்லாங் கட்டும்பாரு
பானான சூதமது துள்ளியோடும் பாங்கான கெந்தியது நீறிப்போகும்
தேனான லிங்கமது செந்தூரிக்கும் தேற்றமுடன் பூரமதை பொருமிக்கொல்லும்
கோனான வீரமது பற்பமாகும் கெடிதான பாஷாணம் சாகும்பாரே

விளக்கவுரை :


3139. பாரேதான் நவதாது முப்பத்திரண்டும் படுமுன்னே சரக்கெல்லாம் மடிந்துகொல்லும்
நேரேதான் லவணவகை இருபத்தைந்தும் நேரான கற்பவகை முன்னூற்றுச்சொச்சம்
கூரேதான் சொன்னபடி சூட்சமுப்பு குன்றியிடை பட்டாக்கால் எல்லாமாளும்
வீரேதான் சரக்குக்கு நெடுங்காலனாகும் மிக்கான துருசுக்கு குருவுமாமே

விளக்கவுரை :


3140. குருவான கண்ரது குருவுமானால் குவலயத்தில் கோடிவித்தை யாடலாகும்
திரிவான வாமியவள் முன்னேநிற்பாள் திக்கெல்லா மெச்சுதற்கு சித்தனாவாய்
மருவான நாதாக்கள் ரிஷிகள்தாமும் மதிப்புடனே யுந்தனுக்கு வரமுமீவார்
கருவான வுளவறிந்த சித்தனாவாய் காசினியில் உன்னைப்போல் சித்தனுண்டோ

விளக்கவுரை :


Powered by Blogger.