3151. தானான பட்டையுடன்
யிம்புராவும் தாக்கான மாசிக்காய் தான்றிக்காயும்
மானான கடுக்காயும்
மகரப்பூவும் மாசற்ற ஏலமுடன் நெல்லிக்காயும்
கோனான குமட்டியின்
விரையினோடு கொடிதான வூமத்தின் விரையுந்தானும்
பானான கெஞ்சாவின்
விரையுந்தானும் பளிங்கான கொடிவேலிமஊலியாமே
விளக்கவுரை :
3152. ஆமேதான் மூலியொடு சூரைவித்து
அப்பனே வேலியென்ற பருத்திதானும்
தாமேதான் வலம்புரியு
மிடம்புரியுமாகும் தாக்கான வவமுக்கராவின் தோல்தானும்
வேமேதான்
தாதுமாதுளையின்வேறும் மிக்கான வாத்தலரிசரளிதானும்
நாமேதான் சொன்னபடி
யிருவேலிகூட்டி நயம்பெறவே சூரணமாய் செய்துகொள்ளே
விளக்கவுரை :
[ads-post]
3153. கொள்ளவே கற்கவகை
யின்னஞ்சொல்வேன் கோளாறுநேராமல் குருபதத்தால்
விள்ளவே தக்கோலம்
பரங்கிப்பட்டை விருப்பமுடன் வாலுளுவை திப்பிலியுமாகும்
மெள்ளவே யிருசீரங்
காட்ச்சீரம் மேலானவாய்விளங்கம் ஓமந்தானும்
அள்ளவே ரோஜனையும் பூவாலாகும்
அப்பனே பூமிசக்கரையுமாமே
விளக்கவுரை :
3154. சக்கரையுந் சீந்தியொடு சதாவேலிதானும்
தாக்கான பெருவாகை சிறுவாகையாகும்
ஒக்கவே தண்ணீரின்
மிட்டானாகும் உற்பனமாம் தம்பலப்பூச்சிதானும்
சிக்கவே
பாதிரிமுல்லைத்தானும் சீராவாஞ் செங்கழுநீர் பூண்டுமாகும்
தக்கவே சிவகரந்தை
விஷ்ணுகரந்தை சட்டமுடன் சாட்டாணைக் கூடச்சேரே
விளக்கவுரை :
3155. சேரவே வசுவாசி மிளகுதானும்
சிறப்பான வேரமுடன் ரேவல்சின்னி
தீறவே விச்சியுடன்
ஆலம்வித்து திறமான பேயத்தி விரையுமாகும்
பாரமுடன் கடலாஞ்சி
யட்டைதானும் பாங்கான நடுவன்னாகள் பட்டைகூட்டி
வாரவே விளாம்பழத்தின்
வித்துகூட்டி வகுப்பான எலுமிச்சைவித்துமாமே
விளக்கவுரை :