போகர் சப்தகாண்டம் 3156 - 3160 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3156 - 3160 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3156. வித்தான கரிமிரட்டி வேறுங்கூட்டி விதமான கரும்பசளை செம்பசளையுமாகும்
முத்தான வெள்ளையென்ற குன்றிதானும் முனையான வாசனிட வித்துதானும்
சித்தான குறிஞ்சாவின் வித்துகூட்டி சிறப்புடனே எட்டியென்ற வித்துமாகும் 
சத்தான வித்தாதி சரக்கையெல்லாம் சூட்சமுடன் களஞ்சியது வெடுத்துக்கொள்ளே

விளக்கவுரை :


3157. எடுக்கவென்றால் சரக்கையெல்லாம் ஒன்றாய்கூட்டி எழிலான சூரணமாய் செய்துகொண்டு
தொடுக்கவே முன்சொன்ன சரக்கோடொக்க துறையோடும் முறையோடும் சேர்வைகண்டு
கொடுக்கவே சீனியது பாவுசெய்து கொற்றவனே சூரணத்தைப் போட்டுமேதான்
விடுக்கவே நெய்தேனும் விட்டுக்கூட்டி விருப்பமுடன் மெழுகுபதந் தன்னிற்கிண்டே

விளக்கவுரை :

[ads-post]

3158. கிண்டையிலே மதுரமாம் திராட்சிதானும் சிளையான கதலியிட தேனுமாகும்
பாண்டுடனே கொடிமுந்திரி ரசமுமாகும் பாங்கான குங்குமப்பூ கஸ்தூரிதானும்
விண்டிடவே வாலுகையாம் அடுப்பிலேற்று வீரான ஜலமதுவும் போகக்கிண்டி
கண்டுமே மெழுகு பதந்தனிலிறக்கி கணபதியைதான்நினைத்து கருத்தில்நில்லே

விளக்கவுரை :


3159. நிற்கையிலே கணபதியஞ் கந்தன்தானும் நிருவாணி மஹேஸ்பரியும் எதிரில்நிற்பாள்
துற்கையெனும் பத்ரகாளியம்மன் துரைமுகமாய் நின்றுகொண்டு காட்சியீவாள்
பற்குணனாம் அர்ச்சுனனர்க்கு தந்தகாட்சி பாலகனே யுந்தனுக்கு மீவாள்பாரு
விற்பிடித்த மன்னரெல்லாம் காளிக்கல்லோ விண்ணுலகில் தான்நடுங்கி விடுபட்டாரே

விளக்கவுரை :


3160. பட்டாரே ராஜர்முடி மன்னரெல்லாம் பத்திரகாளியம்மன் சாபத்தாலே
கெட்டலைந்து மாண்டதொரு வேந்தரெல்லாம் கெடியான எந்தனது குருவினாலே
விட்டகுறை இருந்ததொரு நேர்மையாலே வேதாந்த காலாங்கி நாதர்தம்மால்
பட்டமுடி மன்னரெல்லாம் மீண்டுதாம் பாரினிலே நெடுங்காலம் வாழ்ந்திட்டாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar