3161. வாழ்ந்திட்ட காலமது
தன்னிலேதான் வாகுடனே மாந்தரெல்லா மொன்றாய்கூடி
தாழ்ந்திட்ட
ரிஷிகோடிமுனிவருக்கு தகமையுடன் லேகியத்தை செய்யவென்று
ஆழ்ந்திடவே தம்கருத்தில்
மனதிலுண்ணி அப்பனே சீனபதி மார்க்கஞ்சென்று
சூழ்ந்திட்ட போகரைதான்
அடிவணங்கி சூட்சமுடன் பாகமதை யறிந்தார்தாமே
விளக்கவுரை :
3162. அறிந்துமே காயகற்ப லேகியத்தை
அன்புடனே நாதாந்த ரிஷிகளுக்கு
செரிந்துமே பாகமுடன்
செய்துமேதான் சிறப்புடனே யுண்பதற்குக் கற்பமீந்தார்
முறிந்துமே யானந்த
கற்பந்தன்னை முப்பொழுதும் உண்டுமல்லோ களித்துமேதான்
வெறிந்துமே சினமதுவும்
ஒடுங்கியேதான் வெட்டவெளி தனிலிருந்து கும்பித்தாரே
விளக்கவுரை :
[ads-post]
3163. கும்பித்து நிற்கையிலே
சிவயோகிதானும் குவலயத்தில் மானிடர்மே லிச்சைகொண்டு
தம்பநங்கள் முதலான
வசியமார்க்கம் ஜெகத்திலே வஷ்டவித கர்மம்யாவும்
சும்பனமாம் கொக்கோக
லீலையாவும் சூட்சாதி சூட்சமெல்லாம் சுலுவாய்ச்சொல்லி
சம்போகத்தி லிருந்துகொண்டு
சதாநிஷ்டையாவும் சட்டமுடன் தாமறிந்தார் பலமாந்தர்தாமே
விளக்கவுரை :
3164. தாமான சித்தர்களும்
முனிவர்தாமும் சதகோடி சூரியர்போல் பிரகாசித்து
பூமானாங் கருவாளி
யானபேர்க்கு புகழுடனே யிப்பாகஞ் சொன்னாரல்லோ
காமானமாகவேதான் காயகற்பம்
கருத்துடனே செய்தார்கள் மனுக்கள்கோடி
நாமேதான் சொல்லிவிட்டோம்
மறைப்பையெல்லாம் நலமுடனே நாதாக்கள் செய்வார்பாரே
விளக்கவுரை :
3165. பாரேதான் லேகியத்தின் பெருமைகேளு பாருலகில் அறிந்தமட்டும் சொல்வேன்பாரு
நேரேதான் தூதுளங்காய்
பிரமானந்தான் நேர்மையுடன் உண்டவர்க்கு முறைமை சொல்வேன்
சேரேதான் ஆவின்பால்
கொள்ளவேண்டும் செம்மையுடன் அவர்தமக்கு காட்சிமெத்த
கூரேதான் கெவனமுடன்
குளிகைகொண்டு கொற்றவனே வதிசயங்கள் சொல்வார்காணே
விளக்கவுரை :