போகர் சப்தகாண்டம் 3136 - 3140 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3136 - 3140 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3136. தாக்கவென்றால் கிரதங்கள் லேகியங்கள் தகமையுள்ள செந்தூரம் பற்பம்யாவும்
நோக்கமுடன் குளிகைகள் பாடம்யாவும் நுணுக்கமுடன் மாத்திரைகள் கட்டுவகையாகும்
சூட்சமுடன் தயிலங்கள் எண்ணைமுதல்யாவும் சுளுவான சூரணங்கள் முதலாய்
தூக்கமுடன் கடுகளவு பட்டால்போதும் துரையான மருந்தெல்லாம் வீறுமாமே

விளக்கவுரை :


3137. வீறான வவுஷதங்கள் முப்பூபட்டால் விடுபட்டுப்போகுமடா பிணிகளேது
கூறான வவுஷதங்கள் காரமெத்த குடிலமுடன் நோயெல்லாஞ் சுன்னம்பாரு
நீரான நேத்திரங்கள் சிவந்துகாட்டும் நெடிதான மேனியது கறுப்புமாகும்
தூரான நோயெல்லாங் காடேபோகும் துப்புறவாய் முப்பூவின் மகிமைதானே

விளக்கவுரை :

[ads-post]

3138. தானான முப்பூவின் மகிமையாலே சட்டமுடன் சரக்கெல்லாங் கட்டும்பாரு
பானான சூதமது துள்ளியோடும் பாங்கான கெந்தியது நீறிப்போகும்
தேனான லிங்கமது செந்தூரிக்கும் தேற்றமுடன் பூரமதை பொருமிக்கொல்லும்
கோனான வீரமது பற்பமாகும் கெடிதான பாஷாணம் சாகும்பாரே

விளக்கவுரை :


3139. பாரேதான் நவதாது முப்பத்திரண்டும் படுமுன்னே சரக்கெல்லாம் மடிந்துகொல்லும்
நேரேதான் லவணவகை இருபத்தைந்தும் நேரான கற்பவகை முன்னூற்றுச்சொச்சம்
கூரேதான் சொன்னபடி சூட்சமுப்பு குன்றியிடை பட்டாக்கால் எல்லாமாளும்
வீரேதான் சரக்குக்கு நெடுங்காலனாகும் மிக்கான துருசுக்கு குருவுமாமே

விளக்கவுரை :


3140. குருவான கண்ரது குருவுமானால் குவலயத்தில் கோடிவித்தை யாடலாகும்
திரிவான வாமியவள் முன்னேநிற்பாள் திக்கெல்லா மெச்சுதற்கு சித்தனாவாய்
மருவான நாதாக்கள் ரிஷிகள்தாமும் மதிப்புடனே யுந்தனுக்கு வரமுமீவார்
கருவான வுளவறிந்த சித்தனாவாய் காசினியில் உன்னைப்போல் சித்தனுண்டோ

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar