3141. உண்டோதான் வையகத்தில் சித்தனுண்டோ ஓகோகோயுந்தனையும் ரிஷிதானென்பார்
திண்டான தேவமுனி
யுன்னையென்பார் திறமையுள்ள நாதாக்கள் குருவேயென்பார்
சண்டாளமானதொரு கருமிமாண்பர்
சட்டமுடன் பொய்நாத னென்பார்கண்டீர்
கண்டாலும் விடுவாரோ
சித்துரூபம் காசினியில் சபித்திடுவார் உண்மைபாரே
விளக்கவுரை :
3142. பார்க்கவென்றால் நாதாக்கள்
சித்துரூபம் பட்சமுடன் உந்தனிட அருகில்வந்து
தீர்க்கமுடன் வருந்தியல்லோ
முப்புகேட்பார் திகழுடனே குருவெனக்கு வேண்டுமென்பார்
கார்க்கவென்று மன்றாடி
குருகேட்டாலும் கர்த்தனே யந்தனிட கடாட்சமென்று
மூர்க்கமது வாராமல்
முன்னேநின்று முடிவணங்கி யடிபணிந்து மொழரசொல்வீரே
விளக்கவுரை :
[ads-post]
3143. மொழியான வார்த்தைக்கு முன்னேநின்று
மோசமது வாராமல் முடிவுசொல்லி
வழியான துரையோடு
மார்க்கஞ்சொல்லி வகையுடனே யவர்தமக்கு தொண்டுசெய்து
பழியான வார்த்தைக்கு
இடங்கொடாமல் பட்சமுட னவர்மீதில் கிருபைவைத்து
சுழியான வாசிமுனை
தன்னைநோக்கி சூட்சாதிசூட்சமத்தைக் கேட்டிடீரே
விளக்கவுரை :
3144. கேட்டளவில் வுன்மீதில்
கிருபைவைத்து கேள்விக்குத்தாரவிடையுஞ்சொல்லி
நாட்டமுடன் பரிபோகம்
மிகவுஞ்செய்து நயமுடனே சரசமுறைதானுரைத்து
தேட்டமுடன் மனதிறங்கி
செய்துகொண்டு தெளிவான குருவதனை யடைந்துகொள்ள
வாட்டமுடன் லகுவுடனே
பின்னுங்கேட்பார் வகைமோசம்போகாதே மன்னாகேளே
விளக்கவுரை :
3145. கேட்கவே யவர்தமக்கு
களிப்புகொள்ள கெவனமுடன் குளிகையென்ற லேகியங்கேள்
சூட்சமுடன் மாணாக்கள்
பிழைக்கவென்று தொல்லுலகில் அடியேனுங் கருணைகூர்ந்து
நீட்டமுடன் கோரக்கர்மூலி
தன்னைநேர்மையுடன் தானெடுப்பாய் சேர்தான்ரெண்டு
வாட்கமல வட்டமென்ற பாண்டந்தன்னில்
வகையுடனே காலாங்கி சொற்படிக்கே
விளக்கவுரை :