போகர் சப்தகாண்டம் 3401 - 3405 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3401. ஆதியாம் பூமியிட நாகத்தாலே அப்பனே தங்கமது பற்பமாகும்
ஜொதியாம் தங்கமென்ற வெண்ணைதன்னை சுருதியுடன் பில்லையது லகுவாய்த்தட்டி
வாதிகள் செய்பாகம் போல மனதிலுன்னி மயங்காமல் ரவிதனிலே காயவைத்து
சாதியாம் ஓரெருவிற் புடத்தைப்போடு தப்பாது கெஜபுடத்தில் நீறுமாமே

விளக்கவுரை :


3402. நீறியதோர் பற்பமதை பின்னுங்கேளு நேர்மையுடன் தானெடுத்து கல்வமிட்டு
கூறியதோர் வாக்கதுவும் பிசகாமற்றான் குணமாகத் தானரைப்பாய் செயநீர்தன்னால்
மாறியதோர் சாரமென்ற கெந்திநீறு மார்க்கமுடன் தானரைப்பாய் மைபோலாக 
மீறியே போகாமல் வெண்ணையாக்கி மிதியுடன் பில்லைதட்டிக் காயப்போடே

விளக்கவுரை :

[ads-post]

3403. போடேதான் ரவிதனிலே காயவைத்து பொங்கமுடன் வோட்டிலிட்டுச் சீலைசெய்து
நாடேதான் குழிவெட்டிப் புடத்தைப்போடு நலமுடனெ கெஜபுடத்தில் தீரும்பாரு
கூடேதான் புடமதுவைத் திறந்துபார்க்க குணமான பற்பமது தவளம்போலாம்
தேடேதான் பற்பமதைத் பதனம்பண்ணு தேசத்தில் கிட்டாது சிவயோகிக்கே 

விளக்கவுரை :


3404. கிட்டாது பாவிகட்கும் கருமிகட்கும் கீர்த்தியுள்ள யுத்தமர்க்குகப் பலிக்கும்பாரு
எட்டாத பொருளெல்லாம் இதிலே தேற்றும் எழிலான உடலாவிப் பொருள்களெல்லாம்
விட்டாலும் விடுகுறைகளெல்லாம் காணும் எழிலான விதியிருந்தால் லபிக்கும்பாரு
முட்டாளாயிருக்காமல் முடிமன்னாநீ முறையோடே செய்துமல்லோ முடிவுகாணே

விளக்கவுரை :


3405. காணவென்றால் பற்பமதை வுண்ணக்கேளு கருவான லேகியங்கள் கிரதமாகும்
தோணவே நெய்தேனும் வெண்ணையாகும் தோற்றமுடன் இஞ்சிரசம் முலைப்பாலாகும்
பூணவே இந்தவித வனுபானங்கள் புகட்டினால் காயகற்பமாகும்
நாணவே கைபாகம் செய்பாகங்கள் நலமுடனே தாமறிந்து வுண்ணுவீரே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 3396 - 3400 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3396. பார்க்கவென்றால் தாம்பரத்தின் பற்பந்தன்னை பாங்குடனே நெல்லிடைதான் கொண்டபோது
தீர்க்கமுடன் அனுபான மறிந்துகொண்டால் திறமுடனே தேகமது கற்றுணாகும்
சேர்க்கமுடன் வாயுவென்ற தென்பதும்போம் செயலான பித்தமது நாற்பதும்போம்
மூர்க்கமுடன் சேத்துமங்கள் தொண்ணூற்றாறும் முட்டோடே போகுமடா முடிவுதானே

விளக்கவுரை :


3397. தானேகேள் பற்பமது கொண்டபோது தாக்கான வாசியது கீழ்நோக்காகும்
மானேகேள் சிவராஜ யோகங்கிட்டும் மன்னவனே நீயுமொரு சித்தனாவாய்
வேமேதான் சொன்னபடி யோகமார்க்கம் வெளிப்படையாய் எப்போதுங்காணலாகும்
நாமேதான் உரைத்தபடி ஏழுகாண்டம் நடுகாண்மிதிலதிகங் காணலாமே

விளக்கவுரை :

[ads-post]

3398. காணலாம் இன்னமொரு மார்க்கம்பாரு கருமான மாணாக்கள் பிழைக்கவென்று
பூணலாம் தங்கமென்ற காசுதன்னை புகழாகத் தானெடுத்து செப்பக்கேளு
தோணவே மூலியது கவுதும்பைத்தான் தோற்றமுடன் முன்சொன்ன முப்புசேர்த்து
வேணவே தானரைத்து மூசைசெய்து விருப்பமுடன் காசுதனை யுள்ளேவையே

விளக்கவுரை :


3399. வைத்துமே சீலையது வலுவாய்ச்செய்து வளமைபெற ரவிதனிலே காயவைத்து
தைத்தமுடன் குழிவெட்டி புடமேபோடு தாக்குடனே கெஜபுடத்தில் வெந்துநீறும்
பைத்தவிழா மூசைதனை எடுத்துப்பாரு பாலகனே தங்கமென்ற காசுதானும்
கைத்தவமாய் பொருமியது நொறுங்கிநிற்கும் காவலே தானெடுத்து செப்பக்கேளே

விளக்கவுரை :


3400. செப்பவென்றால் நாவில்லை பாவுமில்லை செயலான பாக்கியமும் இதனாலாகும்
ஒப்பமுடன் தானெடுத்து கல்வமிட்டு வுத்தமனே கவுதும்பைச் சாற்றினாலே
கொப்பெனவே தானரைப்பாய் நாலுசாமம் கொற்றவனே வெண்ணையது போலேயாகும்
எப்படியும் வெண்ணையது போலேயானால் எழிலான பற்பத்துக்குறுதியாச்சே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 3391 - 3395 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3391. காணவென்றா லின்னமொரு மார்க்கம்பாரு கருவான தாம்பரத்தின் மார்க்கம்சொல்வேன்
தோணவே தாம்பரத்தின் துட்டுவாங்கிப் துப்புரவாய் லேசாகத் தகடுகட்டி
மாணவே செய்கொடுவேலிதன்னை மயங்காமல் தானரைத்து வுண்டைசெய்து
வேணபடி குகைபிடித்து தாம்பரத்தை மெதுவாக வதிற்பொதிய விபரங்கேளே

விளக்கவுரை :


3392. கெட்கவென்றால் சீலையது வலுவாய்ச்செய்து கெவனமுடன் ரவிதனிலே காயவைத்து
நீட்டமுடன் குழிவெட்டி யெறுவடிக்கி நிஷ்களமாய் புடம்போட வெந்துநீறும் 
பூட்கமுடன் புடமாறி எடுத்துப்பாரு பொன்னவனே துட்டதுதான் பொருமிவெள்ளை
தாட்கமல நாயகியாள் பாதத்தாணை தப்பாது பற்பத்துக்குறுதியாச்சே

விளக்கவுரை :

[ads-post]

3393. ஆச்சென்று விடுகாதே பின்னுங்கேளு அப்பனே கல்வமதிலிட்டு மைந்தா
பேச்சென்றும் பேசாதே பொடியதாக்கி பேரான முன்சொன்ன முப்புசேர்த்து
மாச்சலென்ற சாரத்தின் செயநீர்தன்னால் மாளவே மூன்றுநாள் நெழுகறைத்து
பாச்சலுடன் பில்லையது லகுவாய்த்தட்டி பாலகனே ரவிதனிலே காயவையே

விளக்கவுரை :


3394. காய்ந்தபின்பு சில்லோட்டில் சீலைசெய்து கனமான கெஜபுடமாய் போட்டுத்தீரு
மாய்ந்துமே தாம்பரமும் மூரலற்று மாசற்ற பற்பமது தவளம்போலாம்
தீய்ந்துமே வூரலது மாண்டுபின்பு திரமான பற்பமது குருவுமாகி
சாய்ந்தலுடன் வாதத்திற்குறுதியாக்க சார்பான குருபற்பமிதுவெண்பார்கள்
வேய்ந்துமே சிமிழ்தனிலே பதனம்பண்ணு வேதாந்த தாய்தமக்கு வருள்சொல்வாளே

விளக்கவுரை :


3395. சொல்லவென்றால் வெள்ளிதனில் எட்டுமாற்று சொர்ணமது பிறவிக்கு ஈடுமாச்சு
நல்லதொரு பிறவியிடத்தங்கமென்பார் நாதாக்கள் செய்கின்ற வேதையாச்சு
புல்லறிவு வுடையதொரு பத்திமான்கள் பூதலத்தில் செய்துமல்லோ யோகஞ்செய்வார்
வில்லணிந்த வேந்தர்களும் செய்யலாகும் விருப்பமுடன் வேதத்தின் பெருமைபாரே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 3386 - 3390 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3386. ஏகுமே கண்ணோய்கள் தொண்ணூற்றாறும் எழிலான மண்டையிடி கபாலக்குத்து
போகுமே வாதபித்தந் தலைகெட்டோடும் பொலிவான வாசியது கீழ்நோக்காகும்
வேகுமே யாவியது மயிர்கால்பற்றி வெளிதனிலே காற்றுடனே சேரும்பாரு
பாகுடனே தேகமது கற்றூணாகும் பாலகனே காயாதி கற்பமூழ்கே

விளக்கவுரை :


3387. மூழ்கினபின் பெண்ணாகா மதுபானந்தான் முக்கியமாய் மூன்றுமண்டலந்தானப்பா
மாழ்கியே சேராதே மனங்கொள்ளாதே மன்னவனே மூன்றுமுஆறை யிப்படியேகாரு
தாழவே கற்பமது கொண்டபோது தாரணியில் உன்னைப்போல் ஒருவனுண்டோ
வாழவே கற்பகோடி காலமப்பா வளமையுடன் தானிருந்து கற்பங்கொள்ளே

விளக்கவுரை :

[ads-post]

3388. கொள்ளவே யின்னமொரு கருமானங்கேள் கொற்றவனே யாம்கண்ட வரைக்கும் சொல்வோம்
மெள்ளவே சாரனையா மூலியப்பா மேன்மையுடன் சேரதுதான் கொண்டுவந்து
துள்ளவே பொடியாக்கி மைந்தாநீயும் துரையுடனே நிழல்தனிலுலர்த்திக்கொண்டு
கள்ளவே சூரணமாய் செய்துகொண்டு கற்பனையாய் சுத்தியது செய்யக்கேளே

விளக்கவுரை :


3389. கேளேதான் பிட்டாவி செய்துகொண்டு கிருபையுடன் மூன்றுமுறை சுத்திசெய்து
பாளேதான் போகாமல் சூரணத்தை பாங்குபெற ரவிதனிலே காயவைத்து
வீளேதான் திப்பிலியு மிளகுதானும் விருப்பமுடன் சீரகமு மொன்றாய்க்கூட்டி
நாளேதான் போகாமல் சீனிசேர்த்து நலமுடனே சூரணமாய்க் கொண்டுபாரே

விளக்கவுரை :


3390. கொண்டவுடன் வாயுவென்ற குன்மம்போச்சு கொடிதான சூலையொடு வாதம்போகும்
பண்டுடனே கால்குடைச்சல் பறந்துபோகும் பாரினிலே எந்நூலை வெளியிடாதே
திண்டுடனே சித்துமத்தை யறுத்துப்போடும் திறமான வுளைமாந்தை யேகும்பாரு
அண்டமுடன் காயாதி கற்பமாகும் அப்பனே மூலியிட வேகங்காணே

விளக்கவுரை :


Powered by Blogger.