3391. காணவென்றா லின்னமொரு
மார்க்கம்பாரு கருவான தாம்பரத்தின் மார்க்கம்சொல்வேன்
தோணவே தாம்பரத்தின்
துட்டுவாங்கிப் துப்புரவாய் லேசாகத் தகடுகட்டி
மாணவே செய்கொடுவேலிதன்னை
மயங்காமல் தானரைத்து வுண்டைசெய்து
வேணபடி குகைபிடித்து
தாம்பரத்தை மெதுவாக வதிற்பொதிய விபரங்கேளே
விளக்கவுரை :
3392. கெட்கவென்றால் சீலையது
வலுவாய்ச்செய்து கெவனமுடன் ரவிதனிலே காயவைத்து
நீட்டமுடன் குழிவெட்டி
யெறுவடிக்கி நிஷ்களமாய் புடம்போட வெந்துநீறும்
பூட்கமுடன் புடமாறி
எடுத்துப்பாரு பொன்னவனே துட்டதுதான் பொருமிவெள்ளை
தாட்கமல நாயகியாள் பாதத்தாணை
தப்பாது பற்பத்துக்குறுதியாச்சே
விளக்கவுரை :
[ads-post]
3393. ஆச்சென்று விடுகாதே
பின்னுங்கேளு அப்பனே கல்வமதிலிட்டு மைந்தா
பேச்சென்றும் பேசாதே
பொடியதாக்கி பேரான முன்சொன்ன முப்புசேர்த்து
மாச்சலென்ற சாரத்தின்
செயநீர்தன்னால் மாளவே மூன்றுநாள் நெழுகறைத்து
பாச்சலுடன் பில்லையது
லகுவாய்த்தட்டி பாலகனே ரவிதனிலே காயவையே
விளக்கவுரை :
3394. காய்ந்தபின்பு சில்லோட்டில்
சீலைசெய்து கனமான கெஜபுடமாய் போட்டுத்தீரு
மாய்ந்துமே தாம்பரமும்
மூரலற்று மாசற்ற பற்பமது தவளம்போலாம்
தீய்ந்துமே வூரலது
மாண்டுபின்பு திரமான பற்பமது குருவுமாகி
சாய்ந்தலுடன்
வாதத்திற்குறுதியாக்க சார்பான குருபற்பமிதுவெண்பார்கள்
வேய்ந்துமே சிமிழ்தனிலே
பதனம்பண்ணு வேதாந்த தாய்தமக்கு வருள்சொல்வாளே
விளக்கவுரை :
3395. சொல்லவென்றால் வெள்ளிதனில்
எட்டுமாற்று சொர்ணமது பிறவிக்கு ஈடுமாச்சு
நல்லதொரு
பிறவியிடத்தங்கமென்பார் நாதாக்கள் செய்கின்ற வேதையாச்சு
புல்லறிவு வுடையதொரு
பத்திமான்கள் பூதலத்தில் செய்துமல்லோ யோகஞ்செய்வார்
வில்லணிந்த வேந்தர்களும்
செய்யலாகும் விருப்பமுடன் வேதத்தின் பெருமைபாரே
விளக்கவுரை :