போகர் சப்தகாண்டம் 3396 - 3400 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 3396 - 3400 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3396. பார்க்கவென்றால் தாம்பரத்தின் பற்பந்தன்னை பாங்குடனே நெல்லிடைதான் கொண்டபோது
தீர்க்கமுடன் அனுபான மறிந்துகொண்டால் திறமுடனே தேகமது கற்றுணாகும்
சேர்க்கமுடன் வாயுவென்ற தென்பதும்போம் செயலான பித்தமது நாற்பதும்போம்
மூர்க்கமுடன் சேத்துமங்கள் தொண்ணூற்றாறும் முட்டோடே போகுமடா முடிவுதானே

விளக்கவுரை :


3397. தானேகேள் பற்பமது கொண்டபோது தாக்கான வாசியது கீழ்நோக்காகும்
மானேகேள் சிவராஜ யோகங்கிட்டும் மன்னவனே நீயுமொரு சித்தனாவாய்
வேமேதான் சொன்னபடி யோகமார்க்கம் வெளிப்படையாய் எப்போதுங்காணலாகும்
நாமேதான் உரைத்தபடி ஏழுகாண்டம் நடுகாண்மிதிலதிகங் காணலாமே

விளக்கவுரை :

[ads-post]

3398. காணலாம் இன்னமொரு மார்க்கம்பாரு கருமான மாணாக்கள் பிழைக்கவென்று
பூணலாம் தங்கமென்ற காசுதன்னை புகழாகத் தானெடுத்து செப்பக்கேளு
தோணவே மூலியது கவுதும்பைத்தான் தோற்றமுடன் முன்சொன்ன முப்புசேர்த்து
வேணவே தானரைத்து மூசைசெய்து விருப்பமுடன் காசுதனை யுள்ளேவையே

விளக்கவுரை :


3399. வைத்துமே சீலையது வலுவாய்ச்செய்து வளமைபெற ரவிதனிலே காயவைத்து
தைத்தமுடன் குழிவெட்டி புடமேபோடு தாக்குடனே கெஜபுடத்தில் வெந்துநீறும்
பைத்தவிழா மூசைதனை எடுத்துப்பாரு பாலகனே தங்கமென்ற காசுதானும்
கைத்தவமாய் பொருமியது நொறுங்கிநிற்கும் காவலே தானெடுத்து செப்பக்கேளே

விளக்கவுரை :


3400. செப்பவென்றால் நாவில்லை பாவுமில்லை செயலான பாக்கியமும் இதனாலாகும்
ஒப்பமுடன் தானெடுத்து கல்வமிட்டு வுத்தமனே கவுதும்பைச் சாற்றினாலே
கொப்பெனவே தானரைப்பாய் நாலுசாமம் கொற்றவனே வெண்ணையது போலேயாகும்
எப்படியும் வெண்ணையது போலேயானால் எழிலான பற்பத்துக்குறுதியாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar