3386. ஏகுமே கண்ணோய்கள்
தொண்ணூற்றாறும் எழிலான மண்டையிடி கபாலக்குத்து
போகுமே வாதபித்தந்
தலைகெட்டோடும் பொலிவான வாசியது கீழ்நோக்காகும்
வேகுமே யாவியது
மயிர்கால்பற்றி வெளிதனிலே காற்றுடனே சேரும்பாரு
பாகுடனே தேகமது கற்றூணாகும்
பாலகனே காயாதி கற்பமூழ்கே
விளக்கவுரை :
3387. மூழ்கினபின் பெண்ணாகா
மதுபானந்தான் முக்கியமாய் மூன்றுமண்டலந்தானப்பா
மாழ்கியே சேராதே
மனங்கொள்ளாதே மன்னவனே மூன்றுமுஆறை யிப்படியேகாரு
தாழவே கற்பமது கொண்டபோது
தாரணியில் உன்னைப்போல் ஒருவனுண்டோ
வாழவே கற்பகோடி காலமப்பா
வளமையுடன் தானிருந்து கற்பங்கொள்ளே
விளக்கவுரை :
[ads-post]
3388. கொள்ளவே யின்னமொரு
கருமானங்கேள் கொற்றவனே யாம்கண்ட வரைக்கும் சொல்வோம்
மெள்ளவே சாரனையா மூலியப்பா
மேன்மையுடன் சேரதுதான் கொண்டுவந்து
துள்ளவே பொடியாக்கி
மைந்தாநீயும் துரையுடனே நிழல்தனிலுலர்த்திக்கொண்டு
கள்ளவே சூரணமாய்
செய்துகொண்டு கற்பனையாய் சுத்தியது செய்யக்கேளே
விளக்கவுரை :
3389. கேளேதான் பிட்டாவி செய்துகொண்டு கிருபையுடன் மூன்றுமுறை சுத்திசெய்து
பாளேதான் போகாமல் சூரணத்தை
பாங்குபெற ரவிதனிலே காயவைத்து
வீளேதான் திப்பிலியு
மிளகுதானும் விருப்பமுடன் சீரகமு மொன்றாய்க்கூட்டி
நாளேதான் போகாமல்
சீனிசேர்த்து நலமுடனே சூரணமாய்க் கொண்டுபாரே
விளக்கவுரை :
3390. கொண்டவுடன் வாயுவென்ற
குன்மம்போச்சு கொடிதான சூலையொடு வாதம்போகும்
பண்டுடனே கால்குடைச்சல்
பறந்துபோகும் பாரினிலே எந்நூலை வெளியிடாதே
திண்டுடனே சித்துமத்தை
யறுத்துப்போடும் திறமான வுளைமாந்தை யேகும்பாரு
அண்டமுடன் காயாதி கற்பமாகும்
அப்பனே மூலியிட வேகங்காணே
விளக்கவுரை :