போகர் சப்தகாண்டம் 3381 - 3385 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 3381 - 3385 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3381. அற்றுமே பீசமதினின்ற ரோகம் அப்பனே கால்வீக்கம் கைவீக்கம்போம்
முற்றுமே நரம்புகளும் முறுக்குமீறி முனையான தாதுவிர்த்தி யதிகமாகும்
பற்றாது பரையாப்பு கொறுக்குமூலம் படருமே தாமரையு மற்றப்போகும்
வற்றமே தேகமது வலுத்துகாட்டும் வண்மையுடன் மேனியது மின்னுந்தானே

விளக்கவுரை :


3382. தானான யின்னமொரு சூட்சஞ்சொல்வேன் தகமையுடன் மானிடர்கள் பிழைக்கவென்று
கோனான எனதையர் காலாங்கிநாதர் குருபதத்தை யடியேனுந் தாள்பணிந்து
பானான பராபரியை மனதிலெண்ணி பாடினேன் காண்டமேழாயிரந்தான்
தேனான இந்நூல்தான் குருநூலாகும் தேசத்தில் கிட்டாது சிவயோகிக்கே

விளக்கவுரை :

[ads-post]

3383. சிவயோகி யானவர்க்கு எல்லாங்கிட்டும் தேசத்தில் மற்றவர்க்குக் கிட்டாதப்பா
தவயோகி என்றாலே கற்பங்கொல்வான் தாரணியில் மற்றவர் கொள்ளமாட்டார்
நவயோகம் பெற்றவரும் சிவயோகியாவார் நாட்டிலே மற்றவருமாவாரோதான்
பவமகற்றும் புண்ணியற்கு எல்லாமெய்தும் பாரினிலே சித்தனைப்போல் வாழலாமே

விளக்கவுரை :


3384. வாழலாம் வெகுகோடி காலமப்பா வரிபெறத் தலைமுழுக விபரங்கேளு
நீழவே நெல்லியுன் மிளகுதானும் நெடிதான கடுக்காயும் மஞ்சள்கூட்டி
காழவே பரிசிவைந்துங்கூட்டி கருவாக சமயெடையாய் எடுத்துக்கொண்டு
தாழவே கையாஞ்சாற் பாலுங்கூட்டி சாங்கமுடன் தானரைப்பாய் சாமம்நாலே

விளக்கவுரை :


3385. நாலான சாமமது வரைத்து மைந்தா நலமுடனே ஸ்தானமது செய்யும்போது
காலான காலனுக்கு இடமேயில்லை கண்ணிரண்டுங் குளிர்ச்சியது மிகவேயாகும்
பாலான விழியிரண்டு மெரிச்சல்நீங்கி பாலகனே சிரசுவலி தானேபோகும்
மாலான மண்டையிடி கபாலத்துக்கு மார்க்கமுடன் சடலம்விட்டேகும்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar