3376. ஆவாரே யின்னமொரு
கருமானங்கேள் அப்பனே சூதமென்ற ராசன்தன்னை
சாவான கள்ளியென்ற
மரத்தில்தானும் சட்டமுடன் தான்குடைந்து சொல்லக்கேளும்
பூவான சூதமதை வதனில்விட்டு
துப்புரவாய் அதின்நூலை மேலேகொட்டி
நாவான சீலையது
வலுவாய்ச்செய்து நலமாக வாறுதினங்கள் கழித்துப்பாரே
விளக்கவுரை :
3377. பார்க்கையிலே சூதமது காரமேறி
பாலகனே வெண்ணையது போலேயாகும்
தீர்க்கமுடன் வெண்ணையது
எடுத்துக்கொண்டு திறமுடனே கல்வமதிலிட்டுக்கேளு
ஏர்க்கவே முன்சொன்ன
முப்பூதானும் எழிலாகக் களஞ்சியது கூடப்போட்டு
நீக்கவே சூதமென்ற
வெண்ணைதன்னில் நிலையான துருசுபலந் தன்னைப்போடே
விளக்கவுரை :
[ads-post]
3378. போடவே பற்பமது கூடச்சேர்த்து
பொங்கமுடன் கெந்தியென்ற செயநீர்தன்னால்
நீடவே தானரைப்பாய் சாமம்நாலு
நீட்கமுடன் வெண்ணையது போலேமைந்தா
கூடவே பில்லையது தெல்லுபோலே
குணமாகத்தான்செய்து ரவியில்வைத்து
தேடவே வோட்டிலிட்டுச்
சீலைசெய்து தெளிவுடனே புடம்போடப் பற்பமாமே
விளக்கவுரை :
3379. பற்பமாங் கெஜபுடத்தில்
நீறும்பாரு பாலகனே சிமில்தனிலே பதனம்பண்ணு
அற்பமென்று விடுகாதே
புண்யவானே வன்புடனே வெண்ணைதனில் குன்றியுண்ண
கெற்பமே
ரோகமதிலிருக்கும்நோய்கள் குலையோடே போகுமடா பின்னுங்கேளு
துற்பலத்தை நீக்கியல்லோ
வலுவைக்காட்டும் துடியான பற்பத்தின் நேர்மைதானே
விளக்கவுரை :
3380. நேர்மையாம் மேகமென்ற
ரோகம்போகும் மேனியது பளபளக்கும் சிவந்துகாட்டும்
கூர்மையாம் கபரோகம்
சில்விஷங்கள் கொடிதான வயிற்றுவலி மேலிளைப்பு
தீர்மையாம் பௌத்திரமாம்
முளைமூலங்கள் தீமைசெய்யும் கண்டத்தின் மாலைபோகும்
வார்மையுடன் கைன்னோசை
கன்னக்குத்து தனமான கிரந்திமுத லற்றுப்போமே
விளக்கவுரை :