3371. கிழங்கென்றால் கிழங்கதுவும்
கொல்லன்கோவை கெடியான சாரதனை பிழிந்துகொண்டு
பழக்கமுடன் தானரைத்து
பில்லைதட்டி பாகமுடன் ரவிதனிலே காயவைத்து
மழங்கவே வோட்டிலிட்டுச்
சீலைசெய்து புகழாக கெஜபுடத்தில் போட்டாயானால்
விழங்கவே பற்பநிறம்
கோக்குபோலாம் விண்ணுலகில் செய்பவரும் அருமைதானே
விளக்கவுரை :
3372. அருமையாம் பற்பமதை
எடுத்துக்கொண்டு அப்பனே சிமிழ்தனிலே பதனம்பண்ணு
பெறுமையுடன் பணவிடைதான்
சர்க்கரையில்கொள்ள பேரான நவமூல மொன்பதும்போம்
சிறுமைபட
செயரோகமெல்லாம்போகும் சேர்மான மானதொரு கசரோகம்போம்
ஒருமையுடன் தேகமது
கற்றூணாகும் வுத்தமனே வுனக்கீடு சொல்வாருண்டோ
விளக்கவுரை :
[ads-post]
3373. உண்டோதான் வையகத்தில் வுனக்கீடுண்டோ வுத்தமனே ராஜாதிராஜபதியும்நீதான்
கண்டபடி பலபலவாஞ்
சாத்திரத்தை கருத்திலே சற்றேனும் நினையாமற்றான்
விண்டபொருள் ஒன்றிருக்க
ஒன்றைக்கொண்டு விட்டகுறை தொட்டகுறை யில்லையென்று
சண்டியென்னும்
மானிடரைப்போலேநீயும் சதாகாலமிருப்பது நன்கல்லதாமே
விளக்கவுரை :
3374. நன்கல்லா சாத்திரத்தை
தாறுமாறாய் நலமுடனே பாராமற்கெட்டலைந்து
புன்கவிகளொன்றிருக்க
வொன்றைப்பார்த்து புராதனத்தின் பொருளறியார் மட்டிமாண்பர்
வன்கொடுமை செய்பவரோடு
இணங்கிச்சென்று வாதாடி பலகாலும் வார்த்தைபேசி
தென்பொதிகை தனிலிருக்கும்
சித்தர்நூலைத் தெளிவாகப் பாராத மட்டிமாடே
விளக்கவுரை :
3375. மாடான மாடிதுதான் சென்மமாடு
மானிலத்தில் நூலறியா மட்டிமாடு
கூடான கூடழியுஞ் சண்டிமாடு
குவலயத்தில் மெத்தவுண்டு கூறப்போமோ
தேடான பாக்கியமும்
இங்கிருக்க தேசத்தில் சுட்டலைந்தோர் கோடாகோடி
பாடான வழியறிந்து காணமற்றான்
பாரினிலே விட்டகுறைக்காளாவாரே
விளக்கவுரை :