போகர் சப்தகாண்டம் 3236 - 3240 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3236. காண்டமேழாயிரத்தில் நடுக்காண்டம்தான் காசினியில் மாண்பர்கள் பிழைப்பதற்கு
தூண்டுகோல் போலவே யிந்நூல்தன்னை துறையோடும் முறையோடும் சொன்னேன்யானும்
வேண்டியதோர் கருமானம் இந்நூல்தன்னில் விருப்பமுடன் பாடிவைத்தேன் நான்காம் காண்டம்
ஆண்டகையாம் எனதையர் காலாங்கிநாதர் அருளிருந்தால் பொருள்வாய்க்கு மன்பாய்த்தானே

விளக்கவுரை :


3237. அன்பான கெந்தியது சத்துதன்னையப்பனே யாமுரைப்போம் இன்னங்கேளு
தென்பான பிரிதிவியின் விளைவுமார்க்கம் தேசமுடன் செம்மண்ணாம் பூனாகந்தான்
முன்பாக முன்சொன்ன முறையாற்றோனும் முக்கியமாய் கெந்தியிட சத்தைத்தானும்
சன்பாக பூநாகஞ் சரியாச்சேர்த்து சட்டமுடன் தானரைப்பாய் சாமம்நாலே

விளக்கவுரை :

[ads-post]

3238. நாலான எரிகாலன் பாலினாலே நயமுடனே தானரைக்கும் போதுமங்கே
பாலான பாலதுவுங் கூடச்சேர்த்து பாகமுடன் சத்துதனை வுறவுதாக்கி
சேலான செம்பினுட சத்துதன்னால் செம்பையென்ற பூநாகங்கெந்திசத்து
மாலான கெந்தியது சத்துமார்க்கம் வையகத்தி லாரெடுப்பார் வதிதந்தானே

விளக்கவுரை :


3239. அதிகமாய் கெந்தியது சத்துதன்னை வப்பனே வஜ்ஜரமாங் குகையில்வைத்து
கதிதமுள்ள மூசைதனி லடைத்துமைந்தா கவனமுடன் சில்லிட்டுச் சீலைசெய்து
பதிதமுள்ள ரவிதனிலே காயவைத்து பளிங்குபெற சரவுலையில் நடுமையத்தில்
துதிதமுடன் கரிபோட்டு வூதும்போது துடியான துருத்தியது நாலுமாமே

விளக்கவுரை :


3240. மாட்டடா நாற்சாமம் உருக்கித்தீரு மன்னவனே சத்தாரி யெடுத்துப்பாரு
நீட்டடா மூசைதனை யுடைத்துப்பாரு நிலையான கெந்தியது சத்துமாச்சு
கூட்டடா யிப்படியே பத்துமுறைதீரு குணமான பாகமிது சத்துபாகம்
தீட்டடா கெந்தியுட சத்துதன்னை திறமுடனே பீங்கானிற் பதனம்பண்ணே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3231 - 3235 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3231. வேகமா மின்னமொரு கருமானங்கேள் விருப்பமுடன் கெந்தியென்ற சத்துசொல்வேன்
பாகமாங் கெந்தியது சேர்தானொன்று பாங்கான பூநாகஞ் சேர்தானொன்று
சாகமுடன் பூநாகம் மண்ணைப்போக்கி சட்டமுடன் எரிகாலன் பாலாலாட்டு
மேகமென்ற வர்ணம்போலிருக்கும்பாரு மேன்மையுடன் காரமது காலாய்க்கூட்டே

விளக்கவுரை :


3232. கூட்டியே தானரைப்பாய் நாலுசாமம் குமுறவே வஜ்ஜிரமாங்குகையில் வைத்து
மாட்டியே சில்லிட்டுச் சீலைசெய்து மயங்காமல் ரவிதனிலே காயப்போடு
சூட்டியே வாலுகையா மேந்திரத்தில் சூட்சமுடன் நடுமையம் மூசைவைத்து
நாட்டமுடன் சத்துக்குத் துருத்திநாலு நயம்பெறவே யூதிடவே சத்துமாமே

விளக்கவுரை :

[ads-post]

3233. சத்தான மூசைதனை யுடைத்துப்பார்க்க சார்பான கெந்தியது சத்துமாகி
வித்தான பூநாகச் சத்துனாலே வீறான கெந்தியது சத்துமாச்சு
சத்தான கெந்தியதூ சத்துமானால் சிந்தரனே வெகுகோடி வித்தையாடும்
யுத்தான பூநாகந் தன்னிலப்பா பொன்னவனே கெந்தியது சத்துமாச்சே

விளக்கவுரை :


3234. ஆச்சென்று விடுகாதே யின்னங்கேளு வப்பனே காலாங்கி நாதர்வாக்கு
போச்சென்று வுலகத்தில் பொய்யாதப்பா பொலிவாக சஇத்தர்முனி ரிஷிகள்தாமும்
நீச்சென்ற பூநாகம் மறந்தாரப்பா நீணிலத்தில் காலாங்கி தானாராய்ந்து
மாச்சலுடன் இப்பாகஞ்சொன்னாரையா மண்டலத்தில் கண்டவர்களில்லைதானே

விளக்கவுரை :


3235. தானான வேதமுனி ரிஷிகள்தாமும் திரிணியில் அனேகவிதஞ்சொன்னாரையா
கோனான எனதையர் காலாங்கிநாதர் குருசொன்னபடியளவா யானுஞ்சொன்னேன்
பானான சத்துவகை சாத்திரத்தில் பாடினார் பலபேத வண்ணமாக
தேனான யிந்நூல் போல் ஆருஞ்சொல்லார் தெளிவாகப் பாடிவைத்தேன் காண்டம்நாலே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3226 - 3230 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3226. ஏத்தியே தீமூட்டி வுருக்கும்போது எழிலான மூசையது வழுகியேதான்
நாத்தமுடன் நவநீதவாசம்வீசும் நலமான சரக்கதுவும் வுருகிப்போச்சு  
காத்திரமாம் குகைதனையே யுடைத்துப்பாரு கருவான வப்ரேக சத்துமாச்சு
சூத்திரமாம் இப்பாகம் கண்டறிந்து சுளுக்குடனே பாடிவைத்தேன் காண்டம்நாலே

விளக்கவுரை :


3227.  நாலான காண்டமது யின்னங்கேளு நலமான சத்ததுவும் முன்போலேதான்
காலான குழிக்கல்லி லிட்டுமைந்தா கருத்துடனே தென்விட்டு யரைப்பாய்நீயும்
பாலான வஜ்ஜிரமாம் குகையிலிட்டு பாலகனே சீலையது வலுவாய்ச்செய்து
மேலான ரவிதனிலே காயவைத்து மேன்மையுடன் தானெடுத்து செப்பக்கேளே

விளக்கவுரை :

[ads-post]

3228. செப்பவென்றால் சரவுலையில் வைத்துவூது செம்மையுடன் நவநீதம் சத்துவாகும்
ஒப்பில்லை யுனக்கீடு ஒருவருண்டோ வுத்தமனே நீயுமொரு சித்தனல்லோ
தப்பிதங்கள் வாராது சத்துதன்னால் தகமையுடன் மூசைதனை யுடைத்துப்பாரு
மெப்புடனே சத்துமது வெளியே வீசும் மேன்மையுடன் இப்பாகம் பத்துமுறை தீரே

விளக்கவுரை :


3229. தீரவென்றால் நவநீதச்சத்துமாகும் திறமையுடன் சத்துதனை யெடுத்துக்கொண்டு
காரமுடன் பூநீரு சரியாய்ச் சேர்த்து கருத்துடனே தேன்விட்டு அரைப்பாய்பின்னும்
சாரமுடன் வஜ்ஜிரமாங் குகையில்வைத்து பாலகனே சிஃல்லிட்டுச் சீலைசெய்து
ஈரமது போவதற்கு ரவியில்வைத்து என்மகனே காய்ந்தபின்பு எடுத்துக்கொள்ளே

விளக்கவுரை :


3230. கொள்ளவே சரவுலையில் வைத்துவூது கொற்றவனே சத்ததுவை என்னசொல்வேன்
மெல்லவே மூசைதனை யுடைத்துப்பாரு மேலான சத்ததுதான் என்னசொல்வேன்
விள்ளவே சத்துதனை எடுத்துக்கொண்டு விருப்பமுடன் பீங்கானிற் பதனம்பண்ணு
எள்ளளவுங் குறையொன்று நேராதப்பா எழிலான சத்தினுட வேகந்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3221 - 3225 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3221. சத்தான சத்ததுவும் இன்னஞ்சொல்வேன் தாரிணியில் நாதாக்கள் முனிவர்தாமும்
சித்தான ரிஷிதேவர் சொன்னதில்லை சீர்பெறவே தொகுப்புடனே வடியேன்தானும்
முத்தான நூலெல்லாம் கண்டாராய்ந்து மூதுலகில் கீர்த்தியுடன் சொன்னேன்யானும்
புத்தான கிருஷ்ணாதி ரேகர்தன்னை புகலுகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்றே

விளக்கவுரை :


3222. பிழைக்கவே நவநீதஞ் சேர்தான்ரெண்டு பிழைமோசம் வாராமல் எடுத்துக்கொண்டு
தழைக்கவே முன்சொன்ன காரமப்பா சாங்கமுடன் நாலுக்கு ஒருபாகந்தான் 
கழைக்கவே குழிக்கல்லு தன்னிலிட்டு கருவான தேனதினி லாட்டிமைந்தா  
உழைக்கவே வஜ்ஜிரமாங் குகையில்வைத்து உத்தமனே குகையில்வைத்து சீலைசெய்யே

விளக்கவுரை :

[ads-post]

3223. சீலையென்றால் சீலையது காரச்சீலை சீரான சுண்ணாம்புச்சீலையப்பா
வேலையெனும் ரவிதனிலே காயவைத்து விருப்பமுடன் சரவுலையில் வைத்துவூது
காலையது சாமமது தான்துவக்கி கருவுடனே சத்துதனை வூதித்தீரு  
மாலையிலே மூசைதனை உடைத்துப்பாரு மன்னவனே சத்தென்ன வருணனாமே

விளக்கவுரை :


3224. அருணனாம் ஆதித்தன் இதற்கொவ்வாது வப்பனே வப்ரேகச் சத்துமாச்சு
தருணமது தப்பாமல் பின்னுங்கேளு தகைமையுடன் சத்துதனை யெடுத்துக்கொண்டு
கருணையுடன் முன்சொன்ன சத்துதானும் களிப்புடனே தானெடுத்து கல்வமிட்டு
வருணனுப்பு கரியுப்பு பொட்டிலுப்பு வகையுடனே தான்போட்டு வரைத்திடாயே

விளக்கவுரை :


3225. அரைக்கையிலே ஆறுவகை செயநீர்தன்னால் அப்பனே தானரைப்பாய் நாலுசாமம்
திரைக்கையிலே மெழுகுபதந்தன்னிலாட்டி திறமையுடன் வஜ்ஜிரமாங்குகையில்வைத்து
குறைக்கையிலே சில்லிட்டுச்சீலைசெய்து கொற்றவனே ரவிதனிலே காயப்போடு
முறைப்படியே ரவிதனிலே காயவைத்து முன்போல சரவுலையிலேத்திடாயே
விளக்கவுரை :


Powered by Blogger.