3221. சத்தான சத்ததுவும்
இன்னஞ்சொல்வேன் தாரிணியில் நாதாக்கள் முனிவர்தாமும்
சித்தான ரிஷிதேவர்
சொன்னதில்லை சீர்பெறவே தொகுப்புடனே வடியேன்தானும்
முத்தான நூலெல்லாம்
கண்டாராய்ந்து மூதுலகில் கீர்த்தியுடன் சொன்னேன்யானும்
புத்தான கிருஷ்ணாதி
ரேகர்தன்னை புகலுகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்றே
விளக்கவுரை :
3222. பிழைக்கவே நவநீதஞ்
சேர்தான்ரெண்டு பிழைமோசம் வாராமல் எடுத்துக்கொண்டு
தழைக்கவே முன்சொன்ன காரமப்பா
சாங்கமுடன் நாலுக்கு ஒருபாகந்தான்
கழைக்கவே குழிக்கல்லு
தன்னிலிட்டு கருவான தேனதினி லாட்டிமைந்தா
உழைக்கவே வஜ்ஜிரமாங்
குகையில்வைத்து உத்தமனே குகையில்வைத்து சீலைசெய்யே
விளக்கவுரை :
[ads-post]
3223. சீலையென்றால் சீலையது
காரச்சீலை சீரான சுண்ணாம்புச்சீலையப்பா
வேலையெனும் ரவிதனிலே
காயவைத்து விருப்பமுடன் சரவுலையில் வைத்துவூது
காலையது சாமமது தான்துவக்கி
கருவுடனே சத்துதனை வூதித்தீரு
மாலையிலே மூசைதனை
உடைத்துப்பாரு மன்னவனே சத்தென்ன வருணனாமே
விளக்கவுரை :
3224. அருணனாம் ஆதித்தன்
இதற்கொவ்வாது வப்பனே வப்ரேகச் சத்துமாச்சு
தருணமது தப்பாமல்
பின்னுங்கேளு தகைமையுடன் சத்துதனை யெடுத்துக்கொண்டு
கருணையுடன் முன்சொன்ன
சத்துதானும் களிப்புடனே தானெடுத்து கல்வமிட்டு
வருணனுப்பு கரியுப்பு
பொட்டிலுப்பு வகையுடனே தான்போட்டு வரைத்திடாயே
விளக்கவுரை :
3225. அரைக்கையிலே ஆறுவகை செயநீர்தன்னால் அப்பனே தானரைப்பாய் நாலுசாமம்
திரைக்கையிலே
மெழுகுபதந்தன்னிலாட்டி திறமையுடன் வஜ்ஜிரமாங்குகையில்வைத்து
குறைக்கையிலே
சில்லிட்டுச்சீலைசெய்து கொற்றவனே ரவிதனிலே காயப்போடு
முறைப்படியே ரவிதனிலே
காயவைத்து முன்போல சரவுலையிலேத்திடாயே
விளக்கவுரை :