3226. ஏத்தியே தீமூட்டி
வுருக்கும்போது எழிலான மூசையது வழுகியேதான்
நாத்தமுடன் நவநீதவாசம்வீசும்
நலமான சரக்கதுவும் வுருகிப்போச்சு
காத்திரமாம் குகைதனையே
யுடைத்துப்பாரு கருவான வப்ரேக சத்துமாச்சு
சூத்திரமாம் இப்பாகம்
கண்டறிந்து சுளுக்குடனே பாடிவைத்தேன் காண்டம்நாலே
விளக்கவுரை :
3227. நாலான காண்டமது யின்னங்கேளு நலமான சத்ததுவும் முன்போலேதான்
காலான குழிக்கல்லி
லிட்டுமைந்தா கருத்துடனே தென்விட்டு யரைப்பாய்நீயும்
பாலான வஜ்ஜிரமாம்
குகையிலிட்டு பாலகனே சீலையது வலுவாய்ச்செய்து
மேலான ரவிதனிலே காயவைத்து
மேன்மையுடன் தானெடுத்து செப்பக்கேளே
விளக்கவுரை :
[ads-post]
3228. செப்பவென்றால் சரவுலையில்
வைத்துவூது செம்மையுடன் நவநீதம் சத்துவாகும்
ஒப்பில்லை யுனக்கீடு
ஒருவருண்டோ வுத்தமனே நீயுமொரு சித்தனல்லோ
தப்பிதங்கள் வாராது
சத்துதன்னால் தகமையுடன் மூசைதனை யுடைத்துப்பாரு
மெப்புடனே சத்துமது வெளியே
வீசும் மேன்மையுடன் இப்பாகம் பத்துமுறை தீரே
விளக்கவுரை :
3229. தீரவென்றால்
நவநீதச்சத்துமாகும் திறமையுடன் சத்துதனை யெடுத்துக்கொண்டு
காரமுடன் பூநீரு சரியாய்ச்
சேர்த்து கருத்துடனே தேன்விட்டு அரைப்பாய்பின்னும்
சாரமுடன் வஜ்ஜிரமாங்
குகையில்வைத்து பாலகனே சிஃல்லிட்டுச் சீலைசெய்து
ஈரமது போவதற்கு
ரவியில்வைத்து என்மகனே காய்ந்தபின்பு எடுத்துக்கொள்ளே
விளக்கவுரை :
3230. கொள்ளவே சரவுலையில்
வைத்துவூது கொற்றவனே சத்ததுவை என்னசொல்வேன்
மெல்லவே மூசைதனை
யுடைத்துப்பாரு மேலான சத்ததுதான் என்னசொல்வேன்
விள்ளவே சத்துதனை
எடுத்துக்கொண்டு விருப்பமுடன் பீங்கானிற் பதனம்பண்ணு
எள்ளளவுங் குறையொன்று
நேராதப்பா எழிலான சத்தினுட வேகந்தானே
விளக்கவுரை :