3236. காண்டமேழாயிரத்தில்
நடுக்காண்டம்தான் காசினியில் மாண்பர்கள் பிழைப்பதற்கு
தூண்டுகோல் போலவே
யிந்நூல்தன்னை துறையோடும் முறையோடும் சொன்னேன்யானும்
வேண்டியதோர் கருமானம்
இந்நூல்தன்னில் விருப்பமுடன் பாடிவைத்தேன் நான்காம் காண்டம்
ஆண்டகையாம் எனதையர்
காலாங்கிநாதர் அருளிருந்தால் பொருள்வாய்க்கு மன்பாய்த்தானே
விளக்கவுரை :
3237. அன்பான கெந்தியது
சத்துதன்னையப்பனே யாமுரைப்போம் இன்னங்கேளு
தென்பான பிரிதிவியின்
விளைவுமார்க்கம் தேசமுடன் செம்மண்ணாம் பூனாகந்தான்
முன்பாக முன்சொன்ன
முறையாற்றோனும் முக்கியமாய் கெந்தியிட சத்தைத்தானும்
சன்பாக பூநாகஞ்
சரியாச்சேர்த்து சட்டமுடன் தானரைப்பாய் சாமம்நாலே
விளக்கவுரை :
[ads-post]
3238. நாலான எரிகாலன் பாலினாலே
நயமுடனே தானரைக்கும் போதுமங்கே
பாலான பாலதுவுங்
கூடச்சேர்த்து பாகமுடன் சத்துதனை வுறவுதாக்கி
சேலான செம்பினுட
சத்துதன்னால் செம்பையென்ற பூநாகங்கெந்திசத்து
மாலான கெந்தியது
சத்துமார்க்கம் வையகத்தி லாரெடுப்பார் வதிதந்தானே
விளக்கவுரை :
3239. அதிகமாய் கெந்தியது
சத்துதன்னை வப்பனே வஜ்ஜரமாங் குகையில்வைத்து
கதிதமுள்ள மூசைதனி
லடைத்துமைந்தா கவனமுடன் சில்லிட்டுச் சீலைசெய்து
பதிதமுள்ள ரவிதனிலே
காயவைத்து பளிங்குபெற சரவுலையில் நடுமையத்தில்
துதிதமுடன் கரிபோட்டு
வூதும்போது துடியான துருத்தியது நாலுமாமே
விளக்கவுரை :
3240. மாட்டடா நாற்சாமம்
உருக்கித்தீரு மன்னவனே சத்தாரி யெடுத்துப்பாரு
நீட்டடா மூசைதனை
யுடைத்துப்பாரு நிலையான கெந்தியது சத்துமாச்சு
கூட்டடா யிப்படியே
பத்துமுறைதீரு குணமான பாகமிது சத்துபாகம்
தீட்டடா கெந்தியுட சத்துதன்னை
திறமுடனே பீங்கானிற் பதனம்பண்ணே
விளக்கவுரை :