போகர் சப்தகாண்டம் 3256 - 3260 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3256. ஆமென்ற மணியெடுத்து சொல்லக்கேளு வப்பனே சூதமது நேரேயாகும்
காமென்ற பாஷாணம் நேரேயாகும் கருவாக யிரண்டஐயுந்தான் வரைத்துமல்லோ
நாமென்ற வங்கத்துக் கங்கிபூட்டி நாயகனே சுண்ணாம்புச் சீலைசெய்து
தாமென்ற ரவிதனிலே காயவைத்து சட்டமுடன் குழல்தனிலே வுருக்கிடாயே

விளக்கவுரை :


3257. உருக்கியே மூசைதனை யுடைத்துப்பாரு உத்தமனே களங்கமது என்னசொல்வேன்
நருக்கியே பின்னுமதை மூசையிட்டு நயமுடனே வுருக்கிப்பார் களங்குமாகும்
பெருக்கியே களங்கெடுத்து பின்னுங்கேளு பேரான மூசைதனை யுருக்கப்பாரு
செருக்கமுடன் களங்கதுவும் என்னசொல்வேன் சிறப்பான போகரது பாகந்தானே

விளக்கவுரை :

[ads-post]

3258. பாகமா மின்னமொரு கருமானங்கேள் பாலகனே மாணாக்கள் பிழைக்கவென்று
யூகமாம் தாம்பரத்தின் சத்துசொல்வேன் யுரப்பனமால் அதின்சுத்தி பின்னுங்கேளு
நாகமென்ற சிலவிஷத்தை நீக்குதற்கு நலமாகப் பூநீரில் சுத்திசெய்து
சாகமுடன் தாம்பரத்தை சுத்திசெய்ய சார்பான முறையொடு கதைசொல்வேனே

விளக்கவுரை :


3259. சொல்லவென்றால் தாம்பரமாம் கொடியகாலன் தொல்லுலகில் ஊரலதுபோவதற்கு
வெல்லுகின்ற பூநீரு சேர்தானொன்று வினோதமுடன் செம்பதுவுஞ் சேர்தானொன்று
கொல்லுகின்ற வீரமது சேர்தான்காலாம் குணமான சீனமது சேர்தான்காலாம்
புல்லுகின்ற கருங்குன்றி சேர்தான்காலாம் புகழான சிற்றண்டம் சேர்தான் காலே

விளக்கவுரை :


3260. காலான சரக்கெல்லா மொன்றாய்க்கூட்டி காட்சிபெற கல்வமதில் இட்டுமைந்தா
பாலான செயநீராம் சாரநீராம் பக்குவமாய் தானரைப்பாய் சரக்கெல்லாம்
மேலான செயநீராம் சாமம்நாலு மேன்மையுடன் தானரைப்பாய் மைந்தாகேளு
கோலான மாத்திரைபோல் செய்துகொண்டு கொற்றவனே நிம்பழத்தின் சாற்றாலாட்டே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 3251 - 3255 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3251. ஆமேதான் நாகமது ஈயமானால் அப்பனே கோடான கோடிவித்தை
நாமெதான் சொன்னபடி இந்தமார்க்கம் நலமுடனே பத்துமுறை செய்யவேண்டும்
தாமேதான் சத்தெடுத்து பதனம்பண்ணு சாங்கமுடன் இன்னமொரு கருமானங்கேள்
வேமேதான் வங்கத்தின் சத்துசொல்வோம் விபரமுடன் மாணாக்கள் பிழைக்கவென்றே

விளக்கவுரை :


3252. பிழைக்கவே வங்கமது சேர்தானொன்று பேரான சிங்கியது சேர்தானொன்று
வழக்கமுடன் மனோசிலையும் சேர்தான்பாதி வாகுடனே தானுருக்கி கல்வமிட்டு
பழக்கமுடன் தேனதுவை விட்டுவாட்டி பளிங்குடனே வஜ்ஜிரமாம் குகையிலேந்தி
தழைத்திடவே சில்லிட்டுச் சீலைசெய்து தகமையுடன் ரவிதனிலே காயவையே

விளக்கவுரை :

[ads-post]

3253. காய்ந்தபின்பு வஜ்ஜிரமாங் குகையைத்தானும் கனமுடனே சரவுலையில் வைத்துவூது
தீய்ந்திடவே குகையதுவும் கழுகியேதான் திறமான வங்கமது வுருகிநிற்கும்
பாய்ந்திடவே வங்கமது களங்குமாகும் பாரினிலே சித்தர்செய்யும் வேதையாச்சு
தோய்ந்திடவே வேதைமுகம் யாருங்காணார் தொல்லுலகில் கருவாளி காண்பான்பாரே

விளக்கவுரை :


3254. பார்க்கவே வங்கமதை எடுத்துக்கொண்டு பரிவாக கல்வமதில் பொடியாய் செய்து
தீர்க்கமுடன் முப்பூவுமங் காலதாக திறமுடனே தேன்விட்டு யரைத்தாயானால்
மார்க்கமுடன் மெழுகதுவும் வெண்ணைபோலாம் மயங்காமல் வஜ்ஜிரமாங் குகையில்வைத்து
ஏர்க்கவே மேல்மூடி சீலைசெய்து எழிலாக ரவிதனிலே காயவையே

விளக்கவுரை :


3255. காயவே முசைதனை எடுத்துக்கொண்டு கவனமுடன் சுண்ணாம்புச்சீலைபின்னும்
தோயவே ஏழுசீலை யின்னுஞ்செய்து தோராமல் ரவிதனிலே காயவைத்து
நேயமுடன் சரவுலையில் வைத்துவூது நேர்மையுடன் சத்ததுவும் மணியாய்ப்போகும்
உபாயமுடன் மூசைதனை யுடைத்துப்பாரு உத்தமனே வெள்ளியென்ற மணிபோலாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3246 - 3250 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3246. மன்னாநீ மயங்காதே யின்னுங்கேளு மதிப்புடனே தானரைப்பாய் நாலுசாமம்
தென்னாநீ திறமுடனே மெழுகதாக்கி தீரமுடன் வஜ்ஜிரமாங்குகையில்வைத்து
பொன்னாநீ சீலையது வலுவாய்ச்செய்து பொங்கமுடன் ரவிதனிலே காயவைத்து
என்னாநீ சொன்னபடி முன்போலப்பா எழிலுடனே சரவுலையிலேத்திடாயே 

விளக்கவுரை :


3247. ஏத்தியே நடுமையம் தானிறுத்தி எழிலுடனே சரவுலையை வூதும்போது
சாத்திரத்தி லுள்ளபடி தப்பாகாது தகைமையுடன் சத்ததுவும் யீயமாகும்
கூத்தனுமே தான்நடுங்கும் வேதைமார்க்கம் குவலயத்தில் ஒருவரால் கூறப்போமோ
நேத்தியுடன் சத்ததுவை எடுத்துப்பாரு என்னசொல்வேன் மக்களா யின்னுங்கேளே

விளக்கவுரை :

[ads-post]

3248. கேளேதான் நாகமது சத்துவாங்கி கெவனமுடன் முன்போல வரைப்பாய்நீயும்
கோளேதான் வாராமல் குற்றம்நீங்கி கொற்றவனே நாகமது சத்துவாங்கி
பாளேதான் போகாமல் பின்னுங்கேளு பாகமுடன் முன்சொன்ன சரக்கையெல்லாம்
தூளேதான் பொடிபண்ணி கல்வமிட்டு துப்புறவாய் செயநீரில் அரைத்திடாயே

விளக்கவுரை :


3249. அறைத்துமே யாறுவகை செயநீர்தன்னால் அப்பனே மயினம்போல் மெழுகதாக்கி
குறைத்துமே வஜ்ஜிரமாங் குகையில்வைத்து கொற்றவனே சில்லிட்டுச் சீலைசெய்து
திறைத்துமே ரவிதனிலே காயவைத்து தீரமுடன் வாலுகையா மேந்திரத்தில்
முறைத்திடவே நடுமையம் தானிருத்தி முசியாமல் கரியதனைக் கொட்டிடாயே

விளக்கவுரை :


3250. கொட்டியே சத்துதனை யூதும்போது குறிப்புடனே துருத்தியது ரெண்டதாகும்
திட்டமுடன் நாற்சாம் ஊதித்தீரு திறமான குகைதனையே யுடைத்துப்பாரு
வட்டமென்ற பில்லையதாம் வுருகிநிற்கும் வளமான சத்ததுவும் சொல்லப்போமோ
நட்டமில்லை நாகத்தின்சத்துதானும் நலமான தாரத்தினீயமாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3241 - 3245 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3241. பண்ணவென்றா லின்னமொரு பாகம்பாரு பாரினிலே நாதாக்கள் செய்ததில்லை
நண்ணமுடன் மானிடர்கள் பிழைக்கவென்று நயமுடனே காலாங்கிநாதர்பாதம்
எண்ணமுடன் யான்வணங்கி பணிந்துபோற்று என்மகனே உங்களுக்காய் சொன்னேன்பாரு
வண்ணமுள்ள நாகமது சேர்தானொன்று வளமையுடன் தானெடுத்து செப்பக்கேளே

விளக்கவுரை :


3242. செப்பவென்றால் நாகமது சேர்தானொன்று சிறப்பான சூதமது சேர்தானொன்று
ஒப்பமுடன் காரமது சேர்தான்பாதி ஓகோகோ பூநீர்தான் சேர்தான்பாதி
நெப்பமுடன் குழிக்கல்லில் ஒன்றாய்ப்போட்டு நேர்மையுடன் ஆறுவகைசெயநீர்தன்னால்
தப்பிதங்கள் வாராமல் அறைப்பாய்மைந்தா தகமையுடன் தானரைப்பாய் சாமம்நாலே

விளக்கவுரை :

[ads-post]

3243. நாலான சாமமது வரைக்கும்போது நாயகனே நாகமது விந்தடங்கி
மாலான மயினமது போலேயாகும் மகத்தான தாளகமுங் கூடச்சேர்த்து
சூலான நாகமது கற்பத்துள்ளே சூதமென்ற ராசாவுங் கூடச்சேர்த்து
காலான கதிர்மேகந் தன்னைப்போல கண்ணுக்குத் தோன்றிடுமே மயினமாமே

விளக்கவுரை :


3244. ஆமேதான் மயினமதை தானெடுத்து வப்பனே வஜ்ஜரமாங் குகையில்வைத்து
தாமேதான் சில்லிட்டுச் சீலைசெய்து தகமையுடன் ரவிதனிலே காயவைத்து
போமேதான் சரவுலையில் வைத்துவூது பொங்கமுடன் துருத்தியது கொண்டேயாகும்
நாமேதான் சொன்னபடி நாகசத்து ராசாக்கள் கண்டதில்லை நளினந்தானே

விளக்கவுரை :


3245. நளினமாஞ் சத்துதனை எடுத்துப்பாரு நலமான நாகத்தின்சத்தேயாகும்
பளினமுடன் சத்துதனை முன்போல்மைந்தா பாலகனே பின்னுமதை கல்வமிட்டு
குளிதமுடன் தாளகமுஞ் சூதம்சேர்த்து துகளறவே பூநீறுங் கூடச்சேர்த்து
மளினமுடன் வாறுவகை செயநீர்தன்னால் மார்க்கமுடன் தானரைப்பாய் மன்னாகேளே

விளக்கவுரை :


Powered by Blogger.