3256. ஆமென்ற மணியெடுத்து
சொல்லக்கேளு வப்பனே சூதமது நேரேயாகும்
காமென்ற பாஷாணம் நேரேயாகும்
கருவாக யிரண்டஐயுந்தான் வரைத்துமல்லோ
நாமென்ற வங்கத்துக்
கங்கிபூட்டி நாயகனே சுண்ணாம்புச் சீலைசெய்து
தாமென்ற ரவிதனிலே காயவைத்து
சட்டமுடன் குழல்தனிலே வுருக்கிடாயே
விளக்கவுரை :
3257. உருக்கியே மூசைதனை யுடைத்துப்பாரு உத்தமனே களங்கமது என்னசொல்வேன்
நருக்கியே பின்னுமதை
மூசையிட்டு நயமுடனே வுருக்கிப்பார் களங்குமாகும்
பெருக்கியே களங்கெடுத்து
பின்னுங்கேளு பேரான மூசைதனை யுருக்கப்பாரு
செருக்கமுடன் களங்கதுவும்
என்னசொல்வேன் சிறப்பான போகரது பாகந்தானே
விளக்கவுரை :
[ads-post]
3258. பாகமா மின்னமொரு
கருமானங்கேள் பாலகனே மாணாக்கள் பிழைக்கவென்று
யூகமாம் தாம்பரத்தின்
சத்துசொல்வேன் யுரப்பனமால் அதின்சுத்தி பின்னுங்கேளு
நாகமென்ற சிலவிஷத்தை
நீக்குதற்கு நலமாகப் பூநீரில் சுத்திசெய்து
சாகமுடன் தாம்பரத்தை
சுத்திசெய்ய சார்பான முறையொடு கதைசொல்வேனே
விளக்கவுரை :
3259. சொல்லவென்றால் தாம்பரமாம்
கொடியகாலன் தொல்லுலகில் ஊரலதுபோவதற்கு
வெல்லுகின்ற பூநீரு
சேர்தானொன்று வினோதமுடன் செம்பதுவுஞ் சேர்தானொன்று
கொல்லுகின்ற வீரமது
சேர்தான்காலாம் குணமான சீனமது சேர்தான்காலாம்
புல்லுகின்ற கருங்குன்றி
சேர்தான்காலாம் புகழான சிற்றண்டம் சேர்தான் காலே
விளக்கவுரை :
3260. காலான சரக்கெல்லா
மொன்றாய்க்கூட்டி காட்சிபெற கல்வமதில் இட்டுமைந்தா
பாலான செயநீராம் சாரநீராம்
பக்குவமாய் தானரைப்பாய் சரக்கெல்லாம்
மேலான செயநீராம் சாமம்நாலு
மேன்மையுடன் தானரைப்பாய் மைந்தாகேளு
கோலான மாத்திரைபோல்
செய்துகொண்டு கொற்றவனே நிம்பழத்தின் சாற்றாலாட்டே
விளக்கவுரை :