3251. ஆமேதான் நாகமது ஈயமானால்
அப்பனே கோடான கோடிவித்தை
நாமெதான் சொன்னபடி
இந்தமார்க்கம் நலமுடனே பத்துமுறை செய்யவேண்டும்
தாமேதான் சத்தெடுத்து
பதனம்பண்ணு சாங்கமுடன் இன்னமொரு கருமானங்கேள்
வேமேதான் வங்கத்தின்
சத்துசொல்வோம் விபரமுடன் மாணாக்கள் பிழைக்கவென்றே
விளக்கவுரை :
3252. பிழைக்கவே வங்கமது
சேர்தானொன்று பேரான சிங்கியது சேர்தானொன்று
வழக்கமுடன் மனோசிலையும்
சேர்தான்பாதி வாகுடனே தானுருக்கி கல்வமிட்டு
பழக்கமுடன் தேனதுவை
விட்டுவாட்டி பளிங்குடனே வஜ்ஜிரமாம் குகையிலேந்தி
தழைத்திடவே சில்லிட்டுச்
சீலைசெய்து தகமையுடன் ரவிதனிலே காயவையே
விளக்கவுரை :
[ads-post]
3253. காய்ந்தபின்பு வஜ்ஜிரமாங்
குகையைத்தானும் கனமுடனே சரவுலையில் வைத்துவூது
தீய்ந்திடவே குகையதுவும்
கழுகியேதான் திறமான வங்கமது வுருகிநிற்கும்
பாய்ந்திடவே வங்கமது
களங்குமாகும் பாரினிலே சித்தர்செய்யும் வேதையாச்சு
தோய்ந்திடவே வேதைமுகம்
யாருங்காணார் தொல்லுலகில் கருவாளி காண்பான்பாரே
விளக்கவுரை :
3254. பார்க்கவே வங்கமதை
எடுத்துக்கொண்டு பரிவாக கல்வமதில் பொடியாய் செய்து
தீர்க்கமுடன் முப்பூவுமங்
காலதாக திறமுடனே தேன்விட்டு யரைத்தாயானால்
மார்க்கமுடன் மெழுகதுவும்
வெண்ணைபோலாம் மயங்காமல் வஜ்ஜிரமாங் குகையில்வைத்து
ஏர்க்கவே மேல்மூடி
சீலைசெய்து எழிலாக ரவிதனிலே காயவையே
விளக்கவுரை :
3255. காயவே முசைதனை
எடுத்துக்கொண்டு கவனமுடன் சுண்ணாம்புச்சீலைபின்னும்
தோயவே ஏழுசீலை
யின்னுஞ்செய்து தோராமல் ரவிதனிலே காயவைத்து
நேயமுடன் சரவுலையில்
வைத்துவூது நேர்மையுடன் சத்ததுவும் மணியாய்ப்போகும்
உபாயமுடன் மூசைதனை
யுடைத்துப்பாரு உத்தமனே வெள்ளியென்ற மணிபோலாமே
விளக்கவுரை :