3246. மன்னாநீ மயங்காதே
யின்னுங்கேளு மதிப்புடனே தானரைப்பாய் நாலுசாமம்
தென்னாநீ திறமுடனே
மெழுகதாக்கி தீரமுடன் வஜ்ஜிரமாங்குகையில்வைத்து
பொன்னாநீ சீலையது
வலுவாய்ச்செய்து பொங்கமுடன் ரவிதனிலே காயவைத்து
என்னாநீ சொன்னபடி
முன்போலப்பா எழிலுடனே சரவுலையிலேத்திடாயே
விளக்கவுரை :
3247. ஏத்தியே நடுமையம் தானிறுத்தி
எழிலுடனே சரவுலையை வூதும்போது
சாத்திரத்தி லுள்ளபடி
தப்பாகாது தகைமையுடன் சத்ததுவும் யீயமாகும்
கூத்தனுமே தான்நடுங்கும்
வேதைமார்க்கம் குவலயத்தில் ஒருவரால் கூறப்போமோ
நேத்தியுடன் சத்ததுவை
எடுத்துப்பாரு என்னசொல்வேன் மக்களா யின்னுங்கேளே
விளக்கவுரை :
[ads-post]
3248. கேளேதான் நாகமது சத்துவாங்கி
கெவனமுடன் முன்போல வரைப்பாய்நீயும்
கோளேதான் வாராமல் குற்றம்நீங்கி
கொற்றவனே நாகமது சத்துவாங்கி
பாளேதான் போகாமல்
பின்னுங்கேளு பாகமுடன் முன்சொன்ன சரக்கையெல்லாம்
தூளேதான் பொடிபண்ணி
கல்வமிட்டு துப்புறவாய் செயநீரில் அரைத்திடாயே
விளக்கவுரை :
3249. அறைத்துமே யாறுவகை செயநீர்தன்னால் அப்பனே மயினம்போல் மெழுகதாக்கி
குறைத்துமே வஜ்ஜிரமாங்
குகையில்வைத்து கொற்றவனே சில்லிட்டுச் சீலைசெய்து
திறைத்துமே ரவிதனிலே
காயவைத்து தீரமுடன் வாலுகையா மேந்திரத்தில்
முறைத்திடவே நடுமையம்
தானிருத்தி முசியாமல் கரியதனைக் கொட்டிடாயே
விளக்கவுரை :
3250. கொட்டியே சத்துதனை
யூதும்போது குறிப்புடனே துருத்தியது ரெண்டதாகும்
திட்டமுடன் நாற்சாம்
ஊதித்தீரு திறமான குகைதனையே யுடைத்துப்பாரு
வட்டமென்ற பில்லையதாம்
வுருகிநிற்கும் வளமான சத்ததுவும் சொல்லப்போமோ
நட்டமில்லை
நாகத்தின்சத்துதானும் நலமான தாரத்தினீயமாமே
விளக்கவுரை :