3261. ஆட்டவென்றால் விதிசொல்வேன்
மதியாய்கேளு வப்பனே சுத்தித்த தாம்பரத்தை
நீட்டமுடன் மருந்தையெல்லாம்
தாம்பரத்தில் நீதியுடன் கீழ்மேலும் பூசிப்போடு
வாட்டமுடன் ரவிதனிலே
காய்ந்தபின்பு வகையுடனே வோட்டிலிட்டுச் சீலைசெய்து
தேட்டமுடன் கோழியென்ற
புடத்தைப்போடு தெளிவாக புடமாறி எடுத்துப்பாரே
விளக்கவுரை :
3262. பார்க்கையிலே செம்பதுவும்
பொருமிக்காட்டும் பதமதுதான் சரியாச்சு தாம்பரங்கள்
தீர்க்கமுடன் பனைதனிலே யடித்தபோது
திறமுடனே செம்புக்கு வதந்தான்போகும்
மூர்க்கமென்ற
வூரலதுயற்றுப்போச்சு முழுமக்கள் தாமடுயார் செம்புவூரல்
சேர்க்கையிலே இந்தமுறை
பத்துபாகம் செவ்வையுடன் புடம்போட்டு எடுத்துப்பாரே
விளக்கவுரை :
[ads-post]
3263. எடுத்துமிகப் பார்க்கையிலே
என்னசொல்வேன் யெளிதமாஞ் செம்பதுவும் ஏத்தமேத்த
அடுத்துநின்ற பேர்களுக்கு
மிந்தபாகம் அறியாமற் செய்பவனே புத்தியுள்ளான்
தொடுத்தகுறி தன்முறைபோல்
செய்யுமாசான் தோற்றாமல் கண்ணுக்கு செய்வான்பாரு
கெடுத்துமே முறைபோல
செய்துகாட்டி கெவனமுடன் வுட்கருவை காட்டான்தானே
விளக்கவுரை :
3264. தானான தாம்பரத்தை
எடுத்துக்கொண்டு தண்மையுடன் குருசொன்ன நேர்பாகந்தான்
கோனான எனதையர் காலாங்கிநாதர்
குருசொன்ன வாக்கதுபோல் தாம்பரத்தை
மானான தாம்பரத்தை
சேர்தான்கொண்டு மாட்டடா வஜ்ஜிரமாங் குகையிற்றானும்
வேனான செம்புநின்று
வுருகும்போது விருப்பமுடன் அதிற்போட சரக்குகேளே
விளக்கவுரை :
3265. சரக்கென்றால் வீரமது வெள்ளையாகும் தாக்கான பாஷாணங்கெவுரியாகும்
திரக்கமுடன் காரமது
பூரமாகும் திகழான சூதமது சரிநேராகும்
உரக்கமுடன் சரக்கெல்லாம்
சரியாய்த் தூக்கி வுத்தமனே கல்வமதில் பொடியாய்ச்செய்து
இரக்கமுடன் தாம்பரத்துக்
கிவைசேர்பாதி எழிலுடனே கிராசமது நினைவாய்ப்போடே
விளக்கவுரை :