3266. போடவே செம்புருக்கி
கிராசமீவாய் பொங்கமுடன் லகுவதாய் தாக்கிக்கொண்டு
நீடவே செம்புதனை
யாற்றிப்பின்பு நினைவாக மூசைதனையுடைத்துப்பாரு
கூடவே செம்பதுவுங்
களங்கமாகும் குணமான வூரலது யற்றப்போச்சு
வாடவே திரியாதே மைந்தாகேளு
வகுப்புடனே யிப்பாகஞ் செய்துபாரே
விளக்கவுரை :
3267. பார்க்கையிலே செம்பதுவுங்
களங்குமாகி பரிசுத்த களங்குமது என்னசொல்வேன்
தீர்க்கமுடன் களங்கதனை
எடுத்துக்கொண்டு தீரமுடன் கல்வமதில் இட்டுமைந்தா
ஏர்க்கவே பொடிசெய்து
மைபோலாக்கு எழிலான தனில்வறைந்துமேதான்
தீர்க்கமுடன்
மூசைதினிலடைத்துமைந்தா சிறப்புடனே சீலைசெய்து ரவியில்தாக்கே
விளக்கவுரை :
[ads-post]
3268. தாக்கவே மூசையது காய்ந்தபின்பு
தகமையுடன் சரவுலையில் வைத்துவூது
நோக்கமுடன் செம்பதுவும்
வூரலற்று நொடிக்குள்ளே களங்கமென்ற பேருமாச்சு
தூக்கவே செம்பென்ற
களங்குதானும் துரையான வேதைமுகம் தன்னிற்தோன்றும்
வாக்கதுதான் தப்பாது
போகர்தாமும் வரமுடனே பாடிவைத்த வண்மையாமே
விளக்கவுரை :
3269. வண்மையாம் சத்தெல்லாம்
சமனதாக வளமுடனே தானுருக்கி எடுத்துக்கொண்டு
தண்மையுடன் தங்கமது
நாலுக்கொன்று தாக்கவே களங்குடனே தங்கஞ்சேர்ந்து
திண்மையாம் களங்கதுவும்
ஒளியுவீசும் தீர்க்கமுடன் களங்குக்கு எட்டிலொன்று
உண்மையாம் கெந்தியது
கூட்டியேதான் உத்தமனே தானரைப்பாய் சாமம்நாலே
விளக்கவுரை :
3270. நாலான சாமமது வரைக்கும்போது
நலமான சூதமதை எட்டிலொன்று
வேலான பொற்றலையின்
சாற்றாலாட்டி விருப்பமுடன் பில்லையது லேசாய்தட்டி
மாலான ரவிதனிலே காயப்போடு
மார்க்கமுடன் வோட்டிலிட்டு சீலைசெய்து
தாலான கெஜபுடத்தில்
போட்டாயானால் தளிர்ச்சியுடன் வெந்ததுவும் கறுப்புமாமே
விளக்கவுரை :