3271. கறப்பான செந்தூரந்
தனையெடுத்து கருவாகக் கையானின் சாற்றினாலே
உறுப்பாக தானரைப்பாய்
நாலுசாமம் உத்தமனே முன்போல பில்லைதட்டி
தெறுப்பான பில்லையது
காய்ந்தபின்பு தேற்றமுடன் வோட்டிலிட்டுச் சீலைசெய்து
குறுப்பான கெஜபுடத்தில்
போட்டாயானால் கொற்றவனே செந்தூரமாகுந்தானே
விளக்கவுரை :
3272. தானான செந்தூரஞ் சிவப்பதற்கு
தன்மையுள்ள புடமதுவு மைம்பதாகும்
கோனான யெமதையர்
காலாங்கிநாதர் குருசொன்னபடியாக புடமேபோடு
மானான புடமதுவும் அம்பதானால்
மகத்தான செந்தூரஞ் சிவப்புமெத்த
தேனான செந்தூரந் தனையெடுத்து
செப்புகிறேன் பின்னுமொரு பாகங்கேளே
விளக்கவுரை :
[ads-post]
3273. பாகம்போம் எண்ணாதே கெந்திதாரம் பகருமந்த செந்தூரம் நாலுக்கொன்று
வேகமுடன் சரக்கதனை ஒன்றாய்ச்
சேர்த்து விருப்பமுடன் சூதமது எட்டிலொன்று
சாகமுடன் சரக்கெல்லாம்
ஒன்றாய்ச்சேர்த்து சட்டமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
நேசமுடன் பொடுதலையின்
சாற்றினாலே நேர்ப்பாகத் தானரைத்து பில்லைதட்டே
விளக்கவுரை :
3274. தட்டியே ரவிதனிலே காயவைத்து
தகமையுடன் வோட்டிலிட்டு சீலைசெய்து
சட்டமுடன் கெஜபுடமாய்
போட்டாயானால் சார்பான செந்தூரம் சிவப்புகாணும்
நட்டமில்லா புடமதுவும்
ஐம்பதாகும் நயமுடனே பாகமது தவிறிடாமல்
இட்டமுடன் பும்போடச் செந்தூரிக்கும்
எழிலான செந்தூரஞ் சொல்லொணாதே
விளக்கவுரை :
3275. சொல்லவென்றால் நாவில்லைப்
பாவுமில்லை சுந்தரனே சித்தர்செய்யும் வேதையாச்சு
வெல்லவே செந்தூர
மார்க்கந்தன்னை விருப்பமுடன் காரமது கொள்வதற்கு
புல்லவே யின்னமொரு பாகங்கேளு
புகழான செந்தூரஞ் சிவப்புகாண
கொல்லவே விலாரியின்
தயிலத்தாலே கொற்றவனே தானரைப்பாய் சாமமெட்டே
விளக்கவுரை :