3276. எட்டான சாமமது வரைத்தபோது
எழிலான செந்தூரம் மெழுகுபோலாகும்
திட்டமுடன் தானரைத்து
பில்லைதட்டி தீர்க்கமுடன் ரவிதனிலே காயப்போடு
சூட்டமது பில்லையாய்
தட்டியேதான் குறிப்புடனே சீலைசெய்ய வகையைக்கேளு
வட்டமென்ற வோட்டிலிட்டுச்
சீலைசெய்து வளமைபெற கெஜபுடமாய் போட்டுத்தீரே
விளக்கவுரை :
3277. தீரவென்றால் புடமாறி
யெடுத்துப்பாரு திறலான செந்தூரஞ் சொல்லப்போமோ
சாரவே செந்தூரந் தனையெடுத்து
சாங்கமுடன் விராலியிட தயிலத்தாலே
பாரமுடன் தானரைப்பாய்
நாலுசாமம் பதராமல் மெழுகதுபோலவேதான்
நேரமுடன் பில்லையது
லகுவாய்தட்டி நேர்புடனே ரவிதனிலே காயப்போடே
விளக்கவுரை :
[ads-post]
3278. போடவே வோட்டிலிட்டு
சீலைசெய்து பொங்கமுடன் கெஜபுடமாய் போட்டுத்தீரு
நீடவே இப்படியே ஐந்துபத்து
நினைவாகப் புடம்போடச் செந்தூரிக்கும்
தேடவே செந்தூரம்
எடுத்துப்பாரு தேசிகனே காரமது கூரொண்ணாது
பாடவே இன்னம்வெகு
மூலிசொல்வேன் பாலகனே நீயறியாய் பண்பாய்த்தானே
விளக்கவுரை :
3279. பண்பான மூலிகைதான்
சொல்லக்கேளு பாரினிலே மெத்தவுண்டு காயகல்பம்
திண்பான மூலிகை
வல்லாரைகற்பம் திறமான மூலியது சார்பிழிந்து
நண்பான செந்தூரங்கல்வமிட்டு
நயம்பெறவே மூலியிட சாற்றாலாட்டி
வண்பாக நாற்சாம மரைத்தபோது
வளமாக மெழுகதுபோலாகும்பாரே
விளக்கவுரை :
3280. பாரேதான் மெழுகதனை
பில்லைதட்டி பாகமுடன் ரவிதனிலே காயப்போடு
சீரேதான் வோட்டிலிட்டுச்
சீலைசெய்து சிறப்பான கெஜபுடந்தான் போட்டுத்தீரு
நேரேதான் செந்தூரங்காரமேறி
நெறியான காயகற்ப குருவுமாச்சு
தீரேதான் பின்னுமந்த
செந்தூரத்தை தீர்க்கமுடன் புடம்போட வகையைத்தேடே
விளக்கவுரை :