3281. தேடயிலே செந்தூரம் ஐம்பதாகும் தேற்றமுடன் புடிமதுவும் அதிகங்கொண்டால்
கூடயிலே செந்தூரங்காரமேறி
குறிப்புடனே காயாதிக்குறுதியாச்சு
நீடயிலே இப்படியே
தீர்ந்தாயானால் நீனிலத்தில் நீயுமொரு சித்தனாவாய் பாடயிலே
ஒருவருந்தான் சொல்லவில்லை
பாரினிலே இந்நூல்போல் ஒருநூலுண்டோ
விளக்கவுரை :
3282. உண்டேதான் வையகத்தில்
பலநூலுண்டு உத்தமனே சாத்திரங்கள் கோடியுண்டு
கண்டேனே நானும்வெகு
நூல்கள்தன்னை கவடமற்ற நூலிதுதான் மெய்நூலாகும்
திண்டான வேதமுனி
நூல்கள்சொன்னார் திகழுடனே காசினியி லனேகமுண்டு
கொண்டான கொண்டபடி
வினோதஞ்சொன்னார் குவலயத்தில் இந்நூல்போலில்லைதாமே
விளக்கவுரை :
[ads-post]
3283. தானான செந்தூரஞ் சாற்றக்கேளு
தகமையுடன் புளியாரைச் சாற்றினாலே
பானான செந்தூர மறைத்துமேதான்
பதமுடனே பில்லைதட்டிக் காயவைத்து
வேனான வோட்டிலிட்டுச்
சீலைசெய்து விருப்பமுடன் கெஜபுடத்தில் போட்டாயானால்
கோனான குருநாதர் சொன்னவாக்கு
குவலயத்தில் பொய்யாது மெய்யாம்பாரே
விளக்கவுரை :
3284. பாரேதான் செந்தூரங் காரமேறி
பாகமுடன் காயாதிகற்பமாகும்
வேரேதான் வைத்து
பத்துபுடமேபோடு நெறியான புடமதுவுந் தப்பாவண்ணம்
கூரேதான் சொன்னபடி
செந்தூரிக்கும் கூர்பான காரமது சொல்லப்போமோ
வேரேதா னின்னமொரு
மார்க்கம்சொல்வோம் வேதாந்தத் தாயினது வருள்தான்காணே
விளக்கவுரை :
3285. காணவென்றால் இன்னமொரு
மார்க்கம்பாரு கருவான செந்தூரப்போக்குசொல்வேன்
தோணவே செந்தூரந் தனையெடுத்து
துறையுடனே கல்வமதிலிட்டு மைந்தா
பூணவே பூநீறு
முப்புச்சுண்ணம் புகழாகத் தான்போட்டு எட்டிலொன்று
வேணவே பொன்னினாவாரையாலே
விருப்பமுடன் தானரைப்பாய் சாமம்நாலே
விளக்கவுரை :