3286. நாலான சாமமது வரைத்தபோது
நயமுடனே வெண்ணையது போலேயாகும்
பாலகனே வெண்ணையது
இதற்கொவ்வாது பாலகனே சித்தர்முகம் வேதையாச்சு
சேலான வனமூலிதன்னையப்பா
செம்மையுடன் தான்கூட்டியரைத்தபோது
மாலான சத்தெல்லாம்
மடிந்துமேதான் மகத்தான செந்தூரம் மடியலாச்சே
விளக்கவுரை :
3287. ஆச்சென்று விடுகாதே
மைந்தாகேளு வப்பனே பில்லையது தட்டியேதான்
காச்சலென்ற ரவிதனிலே
காயப்போடு கருவான ஓட்டிலிட்டுச் சீலைசெய்து
பாச்சலுடன்
கெஜபுமாய்போட்டுத்தீரு பாலகனே யாறியபின் எடுத்துப்பாரு
மூச்சடங்கலிப் புடமதுதான்
வெந்துதானால் மோசமில்லை வாராதன்றே
விளக்கவுரை :
[ads-post]
3288. வாராது தோஷமது நேராதல்லோ
வகுப்பான செந்தூர முறுதிகாணும்
நேரான செந்தூரந் தனையெடுத்து
நேர்மையுடன் கல்வமதிலிட்டுபின்னும்
சேரான பொன்னினாவாரை
மூலிசேரவேதான் விட்டுவரைத்துமேதான்
நீரான மைபோலரைத்துமல்லோ
நிஷ்களமாய்ப் பில்லையது தட்டிப்போடே
விளக்கவுரை :
3289. போடவே ரவிதனிலே காய்ந்தபின்பு பொங்கமுடன் ஓட்டிலிட்டுச் சீலைசெய்து
நீடவே கெஜபுடமாய்
போட்டாயானால் நீரான செந்துரமென்னசொல்வேன்
கூடவே இப்படியாய் ஐந்துபத்து
கொற்றவனே புடமதுதான் தீர்ந்தாயானால்
நாடவே செந்தூர மென்னசொல்வேன்
நாதாக்கள் கைமறைப்பு கண்டுபாரே
விளக்கவுரை :
3290. பாரேதான் சித்தர்முனி
ரிஷிகள்தாமும் பாருலகில் செய்வதுதான் அதீதமார்க்கம்
நேரேதான் பலநூலுங்
கண்டாராய்ந்து சிறப்புடனே அனேகவித காயகற்பம்
சீரேதான் தான்முடித்தார்
லக்கோயில்லை
வேரேதான் வனேகநூல்
யானுங்கண்டேன் வுற்பனத்தை யுளவறிந்து சொல்லார்தாமே
விளக்கவுரை :