போகர் சப்தகாண்டம் 3401 - 3405 of 7000 பாடல்கள்
3401. ஆதியாம் பூமியிட நாகத்தாலே
அப்பனே தங்கமது பற்பமாகும்
ஜொதியாம் தங்கமென்ற
வெண்ணைதன்னை சுருதியுடன் பில்லையது லகுவாய்த்தட்டி
வாதிகள் செய்பாகம் போல
மனதிலுன்னி மயங்காமல் ரவிதனிலே காயவைத்து
சாதியாம் ஓரெருவிற்
புடத்தைப்போடு தப்பாது கெஜபுடத்தில் நீறுமாமே
விளக்கவுரை :
3402. நீறியதோர் பற்பமதை
பின்னுங்கேளு நேர்மையுடன் தானெடுத்து கல்வமிட்டு
கூறியதோர் வாக்கதுவும்
பிசகாமற்றான் குணமாகத் தானரைப்பாய் செயநீர்தன்னால்
மாறியதோர் சாரமென்ற
கெந்திநீறு மார்க்கமுடன் தானரைப்பாய் மைபோலாக
மீறியே போகாமல் வெண்ணையாக்கி
மிதியுடன் பில்லைதட்டிக் காயப்போடே
விளக்கவுரை :
[ads-post]
3403. போடேதான் ரவிதனிலே காயவைத்து
பொங்கமுடன் வோட்டிலிட்டுச் சீலைசெய்து
நாடேதான் குழிவெட்டிப்
புடத்தைப்போடு நலமுடனெ கெஜபுடத்தில் தீரும்பாரு
கூடேதான் புடமதுவைத்
திறந்துபார்க்க குணமான பற்பமது தவளம்போலாம்
தேடேதான் பற்பமதைத்
பதனம்பண்ணு தேசத்தில் கிட்டாது சிவயோகிக்கே
விளக்கவுரை :
3404. கிட்டாது பாவிகட்கும்
கருமிகட்கும் கீர்த்தியுள்ள யுத்தமர்க்குகப் பலிக்கும்பாரு
எட்டாத பொருளெல்லாம் இதிலே
தேற்றும் எழிலான உடலாவிப் பொருள்களெல்லாம்
விட்டாலும்
விடுகுறைகளெல்லாம் காணும் எழிலான விதியிருந்தால் லபிக்கும்பாரு
முட்டாளாயிருக்காமல்
முடிமன்னாநீ முறையோடே செய்துமல்லோ முடிவுகாணே
விளக்கவுரை :
3405. காணவென்றால் பற்பமதை
வுண்ணக்கேளு கருவான லேகியங்கள் கிரதமாகும்
தோணவே நெய்தேனும்
வெண்ணையாகும் தோற்றமுடன் இஞ்சிரசம் முலைப்பாலாகும்
பூணவே இந்தவித வனுபானங்கள்
புகட்டினால் காயகற்பமாகும்
நாணவே கைபாகம் செய்பாகங்கள்
நலமுடனே தாமறிந்து வுண்ணுவீரே
விளக்கவுரை :