போகர் சப்தகாண்டம் 3436 - 3440 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3436. சாற்றவென்றால் சதாவேரி சேரதாகும் சார்பான முசுமுசுக்கை சேரதாகும்
கூற்றனென்னும் குதம்பைசார் சேரதாகும் குணமான மாதளையுஞ் சேரதாகும்
மாற்றலென்ற வாவிநெய் சேரதாகும் மகத்தான தேனதுவும் சேரதாகும்
சீற்றமுடன் கடைசரக்கு செப்பக்கேளு சிறப்புடனே சேர்க்கும்வகை செப்பக்கேளே

விளக்கவுரை :


3437. கேளேதான் திப்பிலியும் விசுவாசிதானும் கெடியான சுக்குடனே ஓமந்தானும்
வீளேதான் கூகைநீர் பரங்கிதானும் வுத்தமனே கருவாயின் பட்டைதானும்
பாளேதான் போகாமல் மதுரந்தானும் பாங்குடனே நில்வாகை சிவதைவேறும்
தானேதான் வகைக்கு ஒருபலமதாக சற்பனையாய்ப் போட்டுமிகக் காய்ச்சிடாயே

விளக்கவுரை :

[ads-post]

3438. காய்ச்சிகையில் கஸ்தூரி குங்குமப்பூ கருவான ரோசனையும் களஞ்சிசேர்த்து
காய்ச்சலுடன் மெழுகுபதந் தானிறக்கி மன்னவனே வடிகட்டி எடுத்துக்கொண்டு
பாச்சலுடன் வாரடித்துக் கிரண்டுமுறைதானும் பாங்குடனே யந்திசந்தி கொண்டாயானால்
மேச்சலெனும் ரோகமது கலன்றுபோகும் மேதினியில் எந்நாளும் இருக்கலாமே

விளக்கவுரை :


3439. இருக்கலாம் கற்பாந்த காலம்மட்டும் எழிலுடனே வாசியோகங்கொள்ளலாகும்
பொருக்கலாம் சிவயோகந்தன்னிற்சென்று பொங்கமுடன் வாசியைத்தான் மடக்கிக்கீழால்
சுருக்கவே கர்மேந்திரியம் அனைத்தும்போக்கி சதாகாலஞ் சின்மயத்திலிருந்துகொண்டு
வெருப்புடனே மாயாது ரட்சைதன்னை வெறுப்பதுவே யுத்தமர்க்கு புனிதமாமே

விளக்கவுரை :


3440. புனிதமாம் நெய்யதனைக் கொண்டபோது புகழான கசரோகமகன்றுபோகும்
வனிதமுடன் வாயுவென்ற தென்பதும்போம் வாகான பித்தமென்ற நாற்பதும்போம்
துனிதமுள்ள சூலைபதினெட்டும்போகும் துலையாத குன்மமென்ற ரோகம்போகும்
புனிதமுடன் பாரிசாமம் வாயுபோகும் பறக்குமடா தேகத்தில் ரோகம்போமே   

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3431 - 3435 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3431. காணாரே நெய்யதனை யார்தான்கண்டார் காசினியில் ரிஷிகள்முனி சித்தர்வேதை
தோணவே காயகற்பரோகநெய்யாம் தொல்லுலகில் சீனபதிதேசத்தார்க்கு
வேணவே காலாங்கிநாதர் தாமும் விருப்பமுடன் செப்பவென்ற நெய்யுமாச்சு
பூணவே யறிவுள்ளான் செய்துபார்த்து பொங்கமுடன் நேமித்தகாயமாமே

விளக்கவுரை :


3432. காயமாமிந்தநெய் வதீதங்கேளு காயாதிகற்பங்களுண்டபேர்க்கு
நேயமுடன் வாரத்துக் கிரண்டுமார்க்கம் நேர்மையுடன் வந்திசந்திக் கொள்ளவேண்டும்
மாயமெனுங் கள்ளாசை நீக்கவேண்டும் மதுபான் விரும்பினால் காயமில்லை
தூயமுடன் நெய்யதனைக் கொண்டபோது துடியான ரோகமெல்லந் துலைந்துபோமே

விளக்கவுரை :

[ads-post]

3433. துலைந்துவிடுங் கரப்பனென்ற ரோகக்போகும் துறையான மதுமேகம் விட்டேயாடும்
அலைந்துகெட்ட கசரோகம் அகன்றுபோகும் அப்பனே வரையாப்பு மேகம்போகும்
தலைவலி மண்டையிடி சண்ணல்போகும் சண்டாள வயிற்றுவலி தாவியோடும்
கலைந்துவிடும் காதுநோய் கண்ணோய்போகும் கால்வலியும் மேல்வலியும் தகைத்துபோமே

விளக்கவுரை :


3434. தகைத்துமே வாய்ப்புண்ணு வாய்நாற்றம்போம் தாரிணியில் வாதமென்ற ரோகம்போகும்
திகைத்துமே குன்மவலி குன்மரோகம் தீராத கவுசியென்ற மகோதரங்கள்
பகைப்புடனே பீசத்தின் வாயுவீக்கம் பாங்கான குடைச்சல்முதல் வலிப்பஉதீரும்
நகைப்புடைய மாதருட ரோகம்போகும் நாடாது பிணிமூப்பு நாடாதன்றே

விளக்கவுரை :


3435. நாடாது காயகற்பம் கொண்டபேர்க்கு நலமான நெய்யதுதான் கொள்ளவேண்டும்
தேடான காயத்துக் கிந்தநெய்தான் தேற்றமுடன் வாரத்திற் கிரண்டுமுறையப்பா
வீடான தேகத்துக் குறுதிநெய்யாம் விருப்பமுடன் பாடிவைத்தேன் போகர்தாமும்
தாடான சதாவேரிச் சமூலங்கொண்டு தளர்ச்சியுடன் சார்பிழிந்து சாற்றக்கேளே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3426 - 3430 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3426. கொள்ளவே யாவிநெய் சரியதாக கொற்றவனே தான்சேர்த்துக் காய்ச்சிக்கொண்டு
மெள்ளவே மெழுகுபதம் வடித்துக்கொண்டு மேன்மையுடன் மண்டலந்தான் கொண்டுவந்தால்
கள்ளமெனும் கோழையது எங்கேபோச்சு கடிதான சயரோகம் தியங்கலாச்சு
உள்ளபடி மேகமென்ற ரோகம்போகும் வுத்தமனே சில்விஷங்களற்றுப்போமே

விளக்கவுரை :


3427. அற்றதொரு வரையாப்பு பரைகள்போகும் அப்பனே கண்டத்தின்மாலைதீரும்
உற்றதொரு வகுவையென்ற கட்டிதீரும் வுளமாந்தை குன்ம முதலகன்றுவோடும்
பெற்றதொரு மாதுக்கு வயத்தில்ரோகம் பேசாமல் வோடுமடா யின்னங்கேளு
மற்றதொரு மேகங்கள் கசரோகங்கள் மானிடத்தில் நிற்காது திண்ணந்தானே

விளக்கவுரை :

[ads-post]

3428. திண்ணமாம் இன்னமொரு கற்பம்பாரு திறலான வல்லாரை பெரியாவாரை
நண்ணமுடன் மூலிதான் சேர்தானாழி நலமுடனே கொண்டுவந்து செப்பக்கேளு
வண்ணமுடன் திப்பிலியுங் கோஷ்டந்தானும் வளமான மிளகுடனே மதுரந்தானும்
எண்ணமுடன் சுக்குடனே கூகைநீரும் எழிலான கிராம்புடனே சாதிக்காயே

விளக்கவுரை :


3429. காயான வாள்மிளகு கூடச்சேர்த்து கருத்துடனே சாதிபத்திரி சரியதாக
மாயான வலம்புரியு மிடம்புரியுஞ்சேர்த்து மன்னவனே மயங்காமல் குங்குமப்பூ
தாயான கஸ்தூரி கோரோசனைத்தானும் தகமையுடன் வகைக்கொரு களஞ்சதாக
தோயாத பாலுடனே இத்தனையும்போட்டு துப்புரவாய் தானரைப்பாய் செப்பக்கேளே

விளக்கவுரை :


3430. செப்பவென்றால் நெய்யதுவும் சேர்தான்பாதி செம்மையுடன் ஒன்றாகக் காச்சியேதான்
ஒப்புடனே கடுகுபதந்தானிறக்கி வுத்தமனே கணபதிக்குப் பூசைசெய்து
தப்பிதங்கள் நேராமல் மைந்தாநீயும் தண்மையுடன் வடிபணிந்து சிரங்குவித்து
மைப்பதுவே சீஷாவிற் பதனம்பண்ணு மகத்தான நெய்யதுவும் காணார்தாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3421 - 3425 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3421. தானான பூதமது ததைசுழற்றி தாரிணியில் நின்றுவிளையாடும்பாரு
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் தன்பாதம் வணங்கியல்லோ
தேனான மனோன்மணியை தாபித்தேதான் தேற்றமுடன் சக்கரத்தில் குந்தவைத்தால்
மானான வேதாளம் பிரமராட்சன் மண்மீதிலிருந்துகொண்டு வாடும்பாரே

விளக்கவுரை :


3422. ஆடுமே கைதாளமதிகம்போடும் அப்பனே வேணுமென்ற வஸ்துகேட்கும்
பாடுமே கொண்டாட்டம் மிகவடிக்கும் பார்த்தவரைக் கண்ணாலே மிகமயக்கும்
ஓடுமே பஞ்சாட்சர மேலேபட்டால் வுத்தமனே சிரித்து விளையாடும்பாரு  
கேடும் கெடுதிகளும் மிகவேபேசும் கேட்டதொரு கேள்விக்கு எதிர்சொல்லாமே

விளக்கவுரை :

[ads-post]

3423. சொல்லாதே பலபலவாம் வார்தைபேசி துரைமுகத்திலிருந்துகொண்டு கூத்துமாடும்
புல்லவே கருவாலே யனேகம்வித்தை பூதலத்தில் வெகுசாக யாட்டலாகும்
கொள்ளவே பூதமது வினோதவித்தைக் கூறினார் பலபலவாம் சாத்திரத்தில்
வெல்லவே நம்முடைய நூல்கள் யாவும் வெளிப்படையாய்க் காட்டினோ முலகத்தோர்க்கே

விளக்கவுரை :


3424. உலகத்தோர் பிழைக்கவென்று யின்னஞ்சொல்வோம் உத்தமனே உருதிமனங் கொண்டுதேரு
பலவகையாஞ் சாத்திரங்கள் பலவும்பார்த்து பாரினிலே கெட்டவர்கள் கோடாகோடி
நிலவுபோல் ஏழைகள்பிழைக்கவென்று நீணிலத்தில் போகர்யாம் பாடிவைத்தோம்
சிலகதைகள் வீணென்று சொல்லிவிட்டாலும் சிறப்புடன் வுட்கருவை விடான்தான்பாரே

விளக்கவுரை :


3425. பார்கையிலே பெருங்கொடுப்பை கொண்டுவந்து பாலகனே சார்பிழிந்து சாற்றக்கேளு
தீர்த்தமுடன் சேரதுதான் எடுத்துமைந்தா திறமுடனே சுக்கதுவும் சீரந்தானும்
சேர்க்கவே திப்பிலியுங் கோஷ்டத்தோடு செம்மையுடன் கஸ்தூரிக்கூடச்சேர்த்து
ஆர்க்கமுடன் கூகைநீர் தன்னோடொக்க அப்பனே நெடைகாலாய் எடுத்துக்கொள்ளே

விளக்கவுரை :


Powered by Blogger.