போகர் சப்தகாண்டம் 3481 - 3485 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3481. நல்லறிவா முபசரங்கள் நவலோகங்கள் நாடதிலே பாஷாணஞ் சாரங்காரம்
சொல்லுமுன்னே சூதமுதல் செந்தூரிக்க சுருதிபெற மால்தேவி சிலைதான்கெந்தி
கல்லான கெவுரிகெவுரியப்பிரகந் துத்தநாகம் கடிதான வெடியுப்பு யிவைகள்சேரில்
உல்லாசமாக யிதுசேர்தானாகில் உண்மையெல்லாஞ் சிவந்துவிடும் என்தாய்சொன்னாளே

விளக்கவுரை :


3482. சாயமனஞ் சரக்கதுதான் சாற்றக்கேளு தடையற்ற வுப்பினொடு நாகந்தங்கம்  
வாயமதா யிரும்போடு நிமிளைசூதம் வடிவுபெற்ற சுவரியுடன் வர்ணமாகும்
நாயமாரிதைப்பிரித்து சொன்னாரப்போ நான்பார்த்து உங்களுக்கு நடத்தச்சொன்னோம்
காயமது நிலையில்லை கண்டுமுன்னே கணக்காக சிந்தூர முண்டுதேரே

விளக்கவுரை :

[ads-post]

3483. எச்சரக்கும் கட்டவொரு சேதிகேளு இனியவெடிச்சுன்னத்தால் சரக்குகட்டும்
தற்செயலாந் தயிலத்தால் சரக்குகட்டுந் தடையற்ற திராவகத்தால் சரக்குகட்டும்
இச்சைபட செயநீராற் சரக்குகட்டும் இதமான மெழுகாலே சரக்குகட்டும்
நற்சரவா மூலிகையில் சரக்குகட்டா நாகரிக யரிதேவர் நலஞ்சொன்னாரே 

விளக்கவுரை :


3484. அங்குசமும் பலம்பத்து அயமுநேரா யதையரைத்து கையானாற் புடமுமிட்டால்
இங்கிதமாற் சிவந்துவிடும் சத்திசூத மிதமாக முன்கண்டயெடைக்குப்பாதி   
தங்காமல் அரைத்துமுன்னீர் தன்னைவிட்டு தக்கதொரு குடத்திலிட்டு மேலேமூடி
பங்கம்வாரா தெரித்தெடுக்க சிவந்துபோகும் பதிவான களிக்கூத்து பலன்சொன்னாரே

விளக்கவுரை :


3485. தட்டியிட்டு வகாம்மட்டி வித்தெடுத்து தாட்டிகமாய்க் கர்திவிரை யிடையேசேர்த்து
மொந்தைதனிலடை நிறையதூரில் பொத்துமுக்கியமாய்க் குழித்தயிலம் வாங்கிச்சட்டி
சட்டமதாய் அடைத்து கரங்காசுவிட்டுச் சரியான மஞ்சளது பொடித்துவுண்ண
வட்டவனை மாதவிடாய்த் தன்னிலுண்ண வையகத்தில் பாலனதுவுண்டாம்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3476 - 3480 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3476. பதங்கலிங்க பற்பமது பலமூநாலு பதியவெடு கொம்புமிளகோடுகூட்டி
விதம்பெறவே தந்திவிரை சுத்திபண்ணி வீதமிடு நெல்லிமுள்ளி கடிக்காயநேராம்
அதம்படவே கையானீர் அரைத்துச்சாமம் அதையெடுத்து குடுக்கைதனிலெடுத்துக் கொண்டு
இதம்படவே பணவிடைநாள் கொள்ளச்செல்ல எந்தமகோதரமும்போம் இதமதாமே

விளக்கவுரை :


3477. சூலைமகோதரமும் போகுமாம் பற்கட்டி துடர்ந்துபித்தம் மகோதரமும் சொல்லாதோடும்
வேலைதனிற் போய்விடுங் கானாம்பற கட்டிவிடுபடுஞ் சாண்சிலேட்டும் மகோதரமும்போம்
ஆலஐதனிற் கரும்பாகு முப்பைத்தள்ளு ஆறுநாள் சென்றபின்பு ஸ்நாணம்பண்ணி
காலைநேரமெல்லாமும் கூட்டிக்கொள்ளு கருத்துரைத்தார் போகரிஷி கருணைபாரே

விளக்கவுரை :

[ads-post]

3478. பாரமுடன் தங்கபற்பம் பலமுநாலு பதமிடை மிளகுசுக்கு கெந்திகூட்டி
பாரமுள நெல்லி முள்ளிக் கடுக்காய் நேராய்ப் பார்த்து அரைபடி நீராற்சாமம்ரெண்டு
கோரமுள வுத்தியளவாகவுண்டை கொடுத்துவிடும் மகோதரங்கள் முப்பத்தொன்றும்
நேரமிலை யோடிவிடும் நிமிஷந்தன்னில் நிச்சயமாய் போகரிஷி நேர்சொன்னாரே

விளக்கவுரை :


3479. சூதபற்பம் கெந்திவெங்காரநேரே தூக்கியரை தேள்கொடுக்கு குமரியாலும்
வீதமொரு நாளரைப்பின் னெடுத்துருட்டி வியாதியறிந்து அனுபானத்திலீய
வாதமுதல் கணரோகம் ருத்திரவாயு மார்வலியுங் குன்மவகை சூலையாறும்
சீசமதைக் கொண்டுவரு மாந்தர்காசம் செல்லுமது இம்மருந்தின் திறமையாமே

விளக்கவுரை :


3480. நாகப்பழம் போலாகும் களங்குதானும் நற்சிவப்பு செந்தூரம் அலரிப்பூப்போல்
பாகமது சுன்னந்தான் மல்லிகைப்பூப்போல் பதிவான மெழுகதுதான் இலக்குமாகும்
தாகமது தயிலந்தான் இறக்கறப்பு தாட்டிகமாய் நிறங்களறி மருந்துதன்னை
யோகமது வந்திடுங் காண்பாகமாகுமித்தொழிலை யரிந்தபதஞ் சொன்னவாறே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3471 - 3475 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3471. காணவென்றால் மண்ணுக்கு இறையுமானார் காசினியில் சித்துமுனி ரிஷிகள்தாமும்
மாணவே கோடிவரை திரவியங்கள் மகாகோடி நிதிகளெல்லாம் தேடிவைத்து
நாணமுடன் பிழைப்பதற்கு வழியுங்கெட்டு நாதாக்கள் காண்பதுவும் அருமையாகும்
தோணவே தொல்லுலகில் சாத்திரத்தில் துறைகோடி முறைகளெல்லாம் மறைத்தார்பாரே

விளக்கவுரை :


3472. மறைந்ததொரு பொருளதனை மானிலத்தில் மாளாமல் சேர்த்துவைத்து மாண்டுபோனார்
திரைப்புடனே சாத்திரங்களதிகங்கற்று தீராத பலவினையைக்கட்டறுத்து  
முறைப்படியே ஞானவரம் பெற்றேனென்று மூர்க்கமுடன் கோபமதை மறுத்தேனென்றும்
குறைப்படியே குவலயத்திலெந்தநாளும் மானிடர்கள் கெட்டார்தந்தே

விளக்கவுரை :

[ads-post]

3473. தந்திவிரை தட்டியெடு பலமுரண்டு தக்கதோர் மிளகிரண்டு கொம்பிரண்டு
முந்தியெடு கடுக்காயும் பலமுமெட்டு முனைந்து நெல்லி முள்ளியடை முன்னிடையுங்கூட்டி
பந்தமுடன் சிந்தூரத் தாதிநீராற் பதமாக அறைத்து மைபோற் கதிரில்வைத்து
சுந்தரமாய்ப்பொடியாக்கி வைத்துக்கொள்ளு சுருதிதனை யாய்ந்துணர்ந்த யாதிச் சொன்னார்

விளக்கவுரை :


3474. மூவிரற்றுள் எடுத்துவைத்து முன்சிந்தூர முற்றினதோர் இலந்தை விரையளவுவைத்து
தேவர்தலையிடுந்தயிலங்குழைத்து வுண்ணச்செப்பமிடத் திரிநாளா மறுநாள்தன்னில்
காவிமுத்தின் எண்ணைவிட்டு மூழ்குமுன்னே கருத்தில்நினை புளிதள்ளு மோர் சாருண்டால்
தாவிவரு நாளெல்லாந் தானேபோகும் தாஷ்டிகமாய் பித்தமருந் தன்மைதானே 

விளக்கவுரை :


3475. பித்தவெட்டை பாண்டுமகோதரமும் தீரும் பின்புதான் சொரிசிரங்கு மேகவாயு
குத்தலண்ட சூலைமுதல் வெட்டைபோகும் கூறரிதி தன்குணங்கள் கொள்கைமெத்த
நித்தநித்தம் மயக்குகின்ற பித்தமாலை நீங்குமென்று போகரிஷி சொன்னநீதி
புத்தியுள்ள ரிஷிமார்கள் சொன்னநீதி புகட்டினேன் எட்டினுரை புகன்றவாறே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3466 - 3470 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3466. ஆச்சேதான் இன்னமொரு வயனஞ்சொல்வேன் அப்பனே ஜெபமுனியாம் ரிஷிகள்தாமும்
பேச்சேதான் பேசாமல் சிலதுகாலம் பேருலகில் மண்மீது இருந்திட்டாராம்
மூச்சடங்கி சிலகாலம் பிணம்போல்தாமும் மூர்ச்சையது போலிருந்தால் சித்துதாமும்
நேச்சலுடன் சமாதிதனிலிருந்தாரென்று நீணிலத்தில் பேராச்சு சிவயோகிக்கே

விளக்கவுரை :


3467. யோகத்தை சாதிக்க வெகுகாலந்தான் வுலகத்திலிருந்தாராம் தேகத்தோடே
தேகத்தை தான்மறந்து அவருமாண்டார் தேகமது மண்ணோடு மண்ணுமாச்சு
போகத்திலிருந்தவரு மாண்டுபோனார் பொங்கமுடன் தேகமது நிலையேயில்லை
யாகத்தை செய்துமல்லோ செயமுனிவர்தாமும் யாக்கதனை யொழித்தாரே வுலகில்தானே

விளக்கவுரை :

[ads-post]

3468. தானான யாகமது கூறப்போமோ தாரணியில் அற்புதங்கள் மிகவுஞ்செய்தார்
கோனான யெனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் தானிருக்குங்காலந்தன்னில்
பானான செயமுனியும் பாரிலேதான் பாடினார் வெகுகோடி கருக்கநூலாம்  
தேனான தேகமதை நிறுத்தவென்று செப்பினார் பலநூலும் பண்பதாமே

விளக்கவுரை :


3469. பண்பான நூல்களிலே தேகம்நிற்கும் பாரினிலே வெகுகால மிருக்கலாகும்
திண்பான சமுசார வாழ்க்கைதன்னில் திகழுடனே காயாதிகற்பகாலம்
நண்பான குடிவாழ்க்கை தனிலிருந்து நலமுடனே வெகுகால மாண்டார்தாமும்
பண்பான லோகத்தில் எல்லாம்பொய்யாம் காசினியில் மாண்டார்கள் இப்படியேதானே

விளக்கவுரை :


3470. தாமான கிரேதாயினுகத்திலப்பா தாரிணியில் அஷ்டபாலரிருந்திட்டாராம்
கோமானாம் கிரேதாயின் ராசன்தானும் கொற்றவனும் ராஜ்ஜியத்தை யாண்டபோது
பாமான வஷ்டபாலர் எட்டுபேரும் பாரினிலே சாகாத வரங்கொண்டார்போல்  
நாமான மிருந்தவரை யநேகம்பார்த்தோம் நலமுடனே ஒருவருந்தான் இல்லைகாணே

விளக்கவுரை :


Powered by Blogger.