3481. நல்லறிவா முபசரங்கள்
நவலோகங்கள் நாடதிலே பாஷாணஞ் சாரங்காரம்
சொல்லுமுன்னே சூதமுதல்
செந்தூரிக்க சுருதிபெற மால்தேவி சிலைதான்கெந்தி
கல்லான
கெவுரிகெவுரியப்பிரகந் துத்தநாகம் கடிதான வெடியுப்பு யிவைகள்சேரில்
உல்லாசமாக யிதுசேர்தானாகில்
உண்மையெல்லாஞ் சிவந்துவிடும் என்தாய்சொன்னாளே
விளக்கவுரை :
3482. சாயமனஞ் சரக்கதுதான் சாற்றக்கேளு தடையற்ற வுப்பினொடு நாகந்தங்கம்
வாயமதா யிரும்போடு
நிமிளைசூதம் வடிவுபெற்ற சுவரியுடன் வர்ணமாகும்
நாயமாரிதைப்பிரித்து
சொன்னாரப்போ நான்பார்த்து உங்களுக்கு நடத்தச்சொன்னோம்
காயமது நிலையில்லை
கண்டுமுன்னே கணக்காக சிந்தூர முண்டுதேரே
விளக்கவுரை :
[ads-post]
3483. எச்சரக்கும் கட்டவொரு
சேதிகேளு இனியவெடிச்சுன்னத்தால் சரக்குகட்டும்
தற்செயலாந் தயிலத்தால்
சரக்குகட்டுந் தடையற்ற திராவகத்தால் சரக்குகட்டும்
இச்சைபட செயநீராற்
சரக்குகட்டும் இதமான மெழுகாலே சரக்குகட்டும்
நற்சரவா மூலிகையில்
சரக்குகட்டா நாகரிக யரிதேவர் நலஞ்சொன்னாரே
விளக்கவுரை :
3484. அங்குசமும் பலம்பத்து
அயமுநேரா யதையரைத்து கையானாற் புடமுமிட்டால்
இங்கிதமாற் சிவந்துவிடும்
சத்திசூத மிதமாக முன்கண்டயெடைக்குப்பாதி
தங்காமல் அரைத்துமுன்னீர்
தன்னைவிட்டு தக்கதொரு குடத்திலிட்டு மேலேமூடி
பங்கம்வாரா தெரித்தெடுக்க
சிவந்துபோகும் பதிவான களிக்கூத்து பலன்சொன்னாரே
விளக்கவுரை :
3485. தட்டியிட்டு வகாம்மட்டி
வித்தெடுத்து தாட்டிகமாய்க் கர்திவிரை யிடையேசேர்த்து
மொந்தைதனிலடை நிறையதூரில்
பொத்துமுக்கியமாய்க் குழித்தயிலம் வாங்கிச்சட்டி
சட்டமதாய் அடைத்து
கரங்காசுவிட்டுச் சரியான மஞ்சளது பொடித்துவுண்ண
வட்டவனை மாதவிடாய்த்
தன்னிலுண்ண வையகத்தில் பாலனதுவுண்டாம்பாரே
விளக்கவுரை :