போகர் சப்தகாண்டம் 3486 - 3490 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3486 - 3490 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3486. உரிக்குமடல் தாரமதை கன்னத்துள்ளே ஒருமூன்று சாமமதை யெரித்துவாங்கி
முருக்கிலையுங் கரிசாலைப் பழச்சார்விட்டு மெழுகுபட அரைத்து பழந்துணியிலூட்டு
அருக்கனிட காய்ந்தகழி வெண்டிலேறி அங்கியிட்டுப் புகைவாங்கி முக்கால்போக
கருக்கவே மறைப்பணமும் பிடிக்கவேதான் சுவாசமொடு மந்தாரக்காசம்போமே

விளக்கவுரை :


3487. சிறுகீரை வேர்தூக்கு பதக்குப்பில்லும் சேர்தரைத்து வடித்தாவின் படிநெய்விட்டு
அரைத்தூக்கு சக்கரையும் மிளகுஞ்சேரு அரைப்படிவந்தினையோர் நிறமாயாவி
மறைக்காமல் அரைப்பலமோர் பொழுதுவுண்ண மார்புவுண்மை பதினெட்டு வாதம்நீங்கி
சுருக்கோடே கழந்துநீ சிரங்குமேகஞ் சுகமாகுங் கைகண்ட தொழிலுமாமே

விளக்கவுரை :

[ads-post]

3488. உள்ளியுடன் மிளகுசுக்கு கல்லுப்போடு ஒருநூறு வெற்றிலையின் காம்புக்கூட்டி
கள்ளியின்சார் விட்டரைத்து சார்ந்துநிம்மக்கயளவுரு நேரமஞ்சுநாளும்
கொள்ளுமிதை யிருபுரமு மிருத்துகொண்டு குத்தலிட்டு அடிவயிறு அண்டம்வீங்கில்
வுள்ளிருமல் வலிவீக்கம் வாங்குமென்று முன்னவர்கள் சொன்னதுண்மை மொழியிதாமே

விளக்கவுரை :


3489. காட்டினிட ஆமணக்கின் எண்ணைவாங்கி கசடகற்றி வச்சிரத்தின்பாலைவிட்டு
நீட்டுமென நீர்க்கட்டு மலக்கட்டுத்தான் நேராக மெத்தவுந்தான் பேதியாகில்
வாட்டிடுவாய் ஆவின்பால் தனையேவுண்ண வகைக்குணமாம் பேதியது வடிந்துநிற்கும்
கூட்டிவே மலக்கட்டி விதுவேயாதி குணமாக போகரிஷி குறித்தார்தானே

விளக்கவுரை :


3490. ஆமென்ற தவமுறுதிச் சின்னமொன்று அன்பாக்ச் சொல்லுகிறோம் நன்றாய்க்கேளு
நாமென்ற சொல்லகத்தி பூமிநாதம் நன்றானநாதமடா சத்திசத்தி
தாமென்ற பிரிதிவியாந் தன்னோடொக்க தயவான கெவுரியுடன் சிலையுங்கூட்டி
ஊமென்ற நாகரசங்கூட்டிச்சேர்த்து ஓர்நிரையாய் கல்வமதில் நன்றாயாட்டே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar