3476. பதங்கலிங்க பற்பமது பலமூநாலு
பதியவெடு கொம்புமிளகோடுகூட்டி
விதம்பெறவே தந்திவிரை
சுத்திபண்ணி வீதமிடு நெல்லிமுள்ளி கடிக்காயநேராம்
அதம்படவே கையானீர்
அரைத்துச்சாமம் அதையெடுத்து குடுக்கைதனிலெடுத்துக் கொண்டு
இதம்படவே பணவிடைநாள்
கொள்ளச்செல்ல எந்தமகோதரமும்போம் இதமதாமே
விளக்கவுரை :
3477. சூலைமகோதரமும் போகுமாம்
பற்கட்டி துடர்ந்துபித்தம் மகோதரமும் சொல்லாதோடும்
வேலைதனிற் போய்விடுங்
கானாம்பற கட்டிவிடுபடுஞ் சாண்சிலேட்டும் மகோதரமும்போம்
ஆலஐதனிற் கரும்பாகு
முப்பைத்தள்ளு ஆறுநாள் சென்றபின்பு ஸ்நாணம்பண்ணி
காலைநேரமெல்லாமும்
கூட்டிக்கொள்ளு கருத்துரைத்தார் போகரிஷி கருணைபாரே
விளக்கவுரை :
[ads-post]
3478. பாரமுடன் தங்கபற்பம்
பலமுநாலு பதமிடை மிளகுசுக்கு கெந்திகூட்டி
பாரமுள நெல்லி முள்ளிக்
கடுக்காய் நேராய்ப் பார்த்து அரைபடி நீராற்சாமம்ரெண்டு
கோரமுள வுத்தியளவாகவுண்டை
கொடுத்துவிடும் மகோதரங்கள் முப்பத்தொன்றும்
நேரமிலை யோடிவிடும்
நிமிஷந்தன்னில் நிச்சயமாய் போகரிஷி நேர்சொன்னாரே
விளக்கவுரை :
3479. சூதபற்பம் கெந்திவெங்காரநேரே
தூக்கியரை தேள்கொடுக்கு குமரியாலும்
வீதமொரு நாளரைப்பின்
னெடுத்துருட்டி வியாதியறிந்து அனுபானத்திலீய
வாதமுதல் கணரோகம்
ருத்திரவாயு மார்வலியுங் குன்மவகை சூலையாறும்
சீசமதைக் கொண்டுவரு
மாந்தர்காசம் செல்லுமது இம்மருந்தின் திறமையாமே
விளக்கவுரை :
3480. நாகப்பழம் போலாகும்
களங்குதானும் நற்சிவப்பு செந்தூரம் அலரிப்பூப்போல்
பாகமது சுன்னந்தான்
மல்லிகைப்பூப்போல் பதிவான மெழுகதுதான் இலக்குமாகும்
தாகமது தயிலந்தான்
இறக்கறப்பு தாட்டிகமாய் நிறங்களறி மருந்துதன்னை
யோகமது வந்திடுங்
காண்பாகமாகுமித்தொழிலை யரிந்தபதஞ் சொன்னவாறே
விளக்கவுரை :