3471. காணவென்றால் மண்ணுக்கு
இறையுமானார் காசினியில் சித்துமுனி ரிஷிகள்தாமும்
மாணவே கோடிவரை திரவியங்கள்
மகாகோடி நிதிகளெல்லாம் தேடிவைத்து
நாணமுடன் பிழைப்பதற்கு
வழியுங்கெட்டு நாதாக்கள் காண்பதுவும் அருமையாகும்
தோணவே தொல்லுலகில்
சாத்திரத்தில் துறைகோடி முறைகளெல்லாம் மறைத்தார்பாரே
விளக்கவுரை :
3472. மறைந்ததொரு பொருளதனை
மானிலத்தில் மாளாமல் சேர்த்துவைத்து மாண்டுபோனார்
திரைப்புடனே
சாத்திரங்களதிகங்கற்று தீராத பலவினையைக்கட்டறுத்து
முறைப்படியே ஞானவரம்
பெற்றேனென்று மூர்க்கமுடன் கோபமதை மறுத்தேனென்றும்
குறைப்படியே
குவலயத்திலெந்தநாளும் மானிடர்கள் கெட்டார்தந்தே
விளக்கவுரை :
[ads-post]
3473. தந்திவிரை தட்டியெடு
பலமுரண்டு தக்கதோர் மிளகிரண்டு கொம்பிரண்டு
முந்தியெடு கடுக்காயும்
பலமுமெட்டு முனைந்து நெல்லி முள்ளியடை முன்னிடையுங்கூட்டி
பந்தமுடன் சிந்தூரத்
தாதிநீராற் பதமாக அறைத்து மைபோற் கதிரில்வைத்து
சுந்தரமாய்ப்பொடியாக்கி
வைத்துக்கொள்ளு சுருதிதனை யாய்ந்துணர்ந்த யாதிச் சொன்னார்
விளக்கவுரை :
3474. மூவிரற்றுள் எடுத்துவைத்து முன்சிந்தூர முற்றினதோர் இலந்தை விரையளவுவைத்து
தேவர்தலையிடுந்தயிலங்குழைத்து
வுண்ணச்செப்பமிடத் திரிநாளா மறுநாள்தன்னில்
காவிமுத்தின் எண்ணைவிட்டு
மூழ்குமுன்னே கருத்தில்நினை புளிதள்ளு மோர் சாருண்டால்
தாவிவரு நாளெல்லாந்
தானேபோகும் தாஷ்டிகமாய் பித்தமருந் தன்மைதானே
விளக்கவுரை :
3475. பித்தவெட்டை பாண்டுமகோதரமும்
தீரும் பின்புதான் சொரிசிரங்கு மேகவாயு
குத்தலண்ட சூலைமுதல்
வெட்டைபோகும் கூறரிதி தன்குணங்கள் கொள்கைமெத்த
நித்தநித்தம் மயக்குகின்ற
பித்தமாலை நீங்குமென்று போகரிஷி சொன்னநீதி
புத்தியுள்ள ரிஷிமார்கள்
சொன்னநீதி புகட்டினேன் எட்டினுரை புகன்றவாறே
விளக்கவுரை :