போகர் சப்தகாண்டம் 3501 - 3505 of 7000 பாடல்கள்
3501. தாமான சமுசார வாழ்க்கையற்று
தகமையுள்ள பேரின்ப வாழ்வுபெற்று
சாமான மானதொரு வுலகவாழ்வை
சர்ச்சனர்க்கு வுபயோக விருத்தியோகம்
நாமான சாத்திரங்கட்
குயிராய்நின்று நமஸ்கரித்து கணபதியாங் கணேசரென்றும்
தாமான நூலுக்கு முதற்காப்பாக
தாரிணியில் மானிடர்க்கு சத்திதானே
விளக்கவுரை :
3502. தானான சத்திக்கு
முதல்வன்காப்பு தாக்கான ஈஸ்வரிக்கு முதல்வன்காப்பு
பானான திரிமூர்த்தி
முதல்வன்காப்பு பாங்குபெற மானிலத்தில் செய்தவேதம்
கோனான ரிஷிமுனிவர்
சித்துதாமும் கோடான கோடிநூல் செய்தார்பாரு
தேனான நூலுக்கு
முதலாய்நின்று தேர்ந்தபிள்ளை வாருமென்ற பேருமாச்சே
விளக்கவுரை :
[ads-post]
3503. ஆச்சென்ற நூல்களுக்கு
இவரேயாதி அரிவோம் நமசிவயமிதற்குள்ளாகும்
பாச்சலென்ற ஓங்கார
மிதற்குள்ளாகும் பாருலகில் வேதமெல்லாம் இதற்குள்ளாகும்
மாச்சலென்ற கவிவாணர்
நூலுக்காதி மகுடமுடி மன்னவர்க்கு மிவரேயாதி
கூச்சலென்ற வேதமகா
கோஷ்டத்தார்க்கும் குவலயத்தில் விநாயகரும் முதலாம்பாரே
விளக்கவுரை :
3504. பாரேதான் விநாயகரைக்
காப்பேடாக்கி பாரினிலே நூலெல்லாம் பாடினார்கள்
நேரேதான் சர்வகோடி பாடலுக்கு
நேர்மையுடன் விநாயகரை முதல்வனாக்கி
சீரேதான் காவியங்கள்
பாவினங்கள் சிறப்பான வசனமென்ற ரூபந்தானும்
கூரேதான் எழுத்தாணிந்
தைரூபத்தால் கோடான கோடிநூல் எழுதலாச்சே
விளக்கவுரை :
3505. எழுதவென்றால் நூலுரையோன்
சொல்லும்நீதி எழிலான ஆக்கியொன்றான் பகரும்நீதி
பழுதறவே எழுத்தாணிக்
கைபிடித்து பாங்குபெற கணபதியைக் காப்புமிட்டு
தொழுதுமே சிரங்குனிந்து
கைகுவித்து தொல்லுலகில் வாணரெல்லாம் காப்பிட்டார்கள்
உழுதுபயிரிடுங்
குடியானர்தாமும் வுத்தமர்கள் மானிலத்தில் தொழுவார்பாரே
விளக்கவுரை :