போகர் சப்தகாண்டம் 3661 - 3665 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3661. நின்றாரே குன்றருகே மலையினோரம் நீடான சுனையுண்டு வுதகமுண்டு
குன்றான மலையோரங் குத்துக்கல்லுண்டு கூரான மண்டபமும ங்கொன்றுண்டு
வன்றான கானாறு தீர்த்தமுண்டு வகையான புலியுதங்கும் விடுதியுண்டு
தன்றான தடாகமது யிருக்கும்பாரு தண்மையுள்ள சமாதியொன்று கண்டார்பாரே

விளக்கவுரை :


3662. பார்த்துமே கொங்கணவர் முனிவர்தாமும் பரிவுடனே சமாதியிட மருகிற்சென்றார்
தீர்த்தமுடன் தடாகமது மூழ்கியேதான் திருப்பணிக்கு புட்பமது கையிலேந்தி
நார்கமலப் பட்டுடுத்தி வினையம்பூண்டு நமஸ்கார மஞ்சலிகள் மிகவுஞ்செய்து
ஏர்க்கமுடன் சமாதிக்கி முன்னேநின்று எழிலான கொங்கணரு மர்ச்சிப்பாரே

விளக்கவுரை :

[ads-post]

3663. அர்ச்சித்து கொங்கணவ முனிவர்தாமும் அஷ்டாங்க பூசையது மிகவுஞ்செய்து
உர்ச்சிதமாய் சிரங்குனிந்து கரங்குவித்து வுற்பனமாம் வட்சரத்தை யோதும்போது
தர்ப்பரனார் கௌதமரிஷியார்தாமும் தண்மையுடன் வுள்ளிருந்து சமாதிதானும்
கற்பதிந்த பாறையது வெடிக்கவேதான் கைலாச கௌதமரும் வெளிவந்தாரே

விளக்கவுரை :


3664. வந்தாரே ஜோதிரிஷி போலேயப்பா மகத்தான கௌதமரிஷியார்தாமும்
சொந்தமுடன் கொங்கணரைச் சீஷனென்று சோர்ந்துமே மனதுவந்து பட்சம்வைத்து
எந்தவிதந் தனிலப்பா யிந்தநாடு எழிலான காவனத்தே வந்ததென்ன
அந்தமுட னெந்தனுக்குச் சொல்லுமென்று அபயாஸ்தம்தான்கொடுத்தார் ரிஷியார்தாமே

விளக்கவுரை :


3665. கொடுத்தாரே வபயமது தந்தபின்பு கொப்பெனவே கொங்கணருங் கூறலுற்றார்
அடுத்தேனே சமாதியிடம் அடியேன்றானும் அய்யனே பள்ளிகொண்ட பாறைமீதில்
படுத்தேனே சடுச்சாம வேளைதன்னில் பராபரியைத்தானினைத்து ஏங்கும்போது
எடுத்ததொரு கோஷ்டங்கள் வாத்தியங்கள் எழிலாகச் செவிதனக்கு கேட்கலாச்சே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3656 - 3660 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3656. போனாரே வெகுகோடி மாந்தர்தாமும் பொங்கமுடன் கொங்கணவர் நூல்கள்தன்னில்
ஆனாரே கருவிகாணாதியெல்லாம் அப்பனே மறைத்துவைத்தார் என்றுசொல்லி
ஏனோதான் மதிமோசந்தானுமாகி எழிலான சாஸ்திரத்தில் குற்றஞ்சொன்னார்
மானேகேள் மதிகெட்டு இப்படியே நூலில் மகாதோஷஞ்சொன்னாரே மாந்தர்காணே

விளக்கவுரை :


3657. காணவே கொங்கணவ சித்துதாமும் கருவான முக்காண்டம் பாடிக்கொண்டு
நாணவே நாதாக்கள் முனிவர்தாமும் நாணிலத்தில் நடுக்கமுடன் திடுக்கிட்டேங்க
வேணபடி நூலுக்குப் பலமுங்கூட்டி வேகமுடன் கொண்டுமல்லோ வுருகும்போது
தோணவே மகாமேருதன் னிற்பக்கம் தொடர்ந்தாரே கொங்கணவ முனிவர்தானே

விளக்கவுரை :

[ads-post]

3658. தானான கொங்கணவ முனிவர்தாமும் தாக்கான மேருவிடந் தன்னிற்சென்று  
மானான மலைபக்கல் குகையிற்சென்று மயக்கமுடன் சமாதிக்கி யிடமுந்தேட  
பானான பரமமுனி மனதிலெண்ணி பட்சமுடன் சமாதிதனி லிறங்கவென்று   
கோனான கொங்கணரும் எண்ணியல்லோ கொப்பெனவே பாறைமேல் படுத்தார்தானே

விளக்கவுரை :


3659. படுத்துமே பாறையின்மேல் நித்திரைசங்கம் பரிவாகப் பராபரியைநினைத்துக்கொண்டு
அடுத்துமே சுழுத்தியிலே சொப்பனமுங்கொண்டு ஆண்டவனார் தேகமதை மறந்துவிட்டு
தொடுத்துமே பூரணத்தை மனதிலெண்ணி தோற்றாமல் வாசியோகஞ்செய்துகொண்டு
விடுத்துமே நித்திரைகள் நீங்கியேதான் விருத்தமுடன் கண்விழித்துப் பார்த்தானே  

விளக்கவுரை :


3660. பார்க்கையிலே பலபலவாந் தோற்றங்காணும் பாரினிலே வதிசயங்கள் மிகவாய்த்தோற்றும்
ஏர்க்கையிலே குன்றருகி சப்தங்காணும் எழிலான வாத்தியங்கள் மிகவேகேட்கும்
தீர்க்கமுடன் தேவதா கோஷ்டந்தானும் தீரமுடன் செவிதனிலே கேட்கும்பாரு   
ஆர்க்கவே கொங்கணரு மிகவேகேட்டு அப்பனே மதிமயங்கி நின்றார்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3651 - 3655 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3651. இல்லையே சித்துமுனி பாலன்தானும் எழிலான மண்ணுக்கு இறையேயானார்
அல்லல்மிக பட்டுமல்லோ அவனிதன்னில் அப்பனே அவருமல்லோ மாண்டுபோனார்
கல்லான தேகமிது என்றிருந்தார் காசினியில் அவர்தேகம் மண்ணாய்ப்போச்சு
புல்லான புல்லோடே புழுதியாகி பூதலத்தில் புலிப்பாணி மாண்டார்பாரே

விளக்கவுரை :


3652. பாரேதான் வுலகமிதில் சித்துயாவும் பாங்காகக் கற்றறிந்து யிருந்துமென்ன
நேரான சிவயோகந்தன்னில்நின்று நிஷ்டையிலே தானிருந்து பலனுமென்ன
கூரான குறிப்பறிந்து குவலயத்தில் கொற்றவனே காயகற்பம் கொண்டுமென்ன
வீரான தேகமது விழலாய்ப்போச்சு விருத்தமுட னிப்படியே மாண்டார்தானே

விளக்கவுரை :

[ads-post]

3653. மாண்டாரே வின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் மகத்தான சித்தொளியின் வண்மைகேளும்
தாண்டவம்போல் கொங்கணவ சித்துதாமும் தாரிணியில் ஒருமுனிவர் இருந்தாரப்பா
ஆண்டகையாம் எனதையர் காலாங்கிநாதர் அவனியிலே சித்தொருவ ரிருந்தாருண்டு
பூண்டமனதுருதியினால் சித்துதாமும் பொங்கமுடன் பொங்கமுடன் வெகுகால மிருந்தார்தாமே

விளக்கவுரை :


3654. தாமான கொங்கணவமுனிவர்தாமும் தாரிணியில் சிலநூல்கள் செய்தாரென்றும்
நாமான கொங்கணவர் முக்காண்டமப்பா நாட்டினிலே செய்துவைத்த தண்மைதன்னை
பாமானமாகவல்லோ பாடிவைத்த பளிங்கான காண்டமென்னுஞ் சாத்திரத்தை
பூமானகள் எல்லவரும் பாராமற்றான் புகழாக சாஸ்திரத்தில் மறைப்பென்றாரே

விளக்கவுரை :


3655. மறைந்தாரே கொங்கணவர் சாஸ்திரத்தை மார்க்கமுடன் கருவெல்லாம் தெரியாமற்றான்
திறப்புடனே கொங்கணவர் காண்டந்தன்னை தீராத சங்கைபிரமாண்டமென்றார்
முறைப்படியே முழுமக்கள் பாராமற்றான் முனிசொன்ன நூதைனை சங்கையென்றார்
குறையகற்றி வுட்கருவை யறிவதற்கு குவலயத்தில் யுத்தியில்லா மதிபோனாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3646 - 3650 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3646. தானான சாபமது தீர்வதற்கு தனியான ரிஷியொருவர் அங்கிருந்தார் 
கோனான பிரமருக்கு தேவேந்திரபட்டம் கொடுத்துமே சாபமதை தீர்த்துவிட்டார்
பானான பராபரியாள் ஆசிர்மத்தால் பாருலகில் நீருமென்னைக் கண்டீரிங்கே
கோனான வுன்பாட்டன் காலாங்கிநாதர் கொற்றவனார் பேருரைத்தீர் புண்ணியவானே

விளக்கவுரை :


3647. புண்ணயனே பேர்சொன்னபடியாலப்பா பூதலத்தில் உந்தனுக்குவேங்கைசாபம்
திண்ணமுடன் தீர்த்துமல்லோ யுந்தனுக்கு தீரமுட னுபதேசம் செய்வேனென்றார்
வண்ணமுடன் உபதேசம் பெற்றுமல்லோ வானுலகில் எமனுக்கு இடமில்லாமல்
கண்ணபிரான் தன்னைப்போல் வாழும்பெற்று காசினியில் வெகுகால மிருவென்றாரே

விளக்கவுரை :

[ads-post]

3648. இருவென்ற போதையிலே முனிவர்தாமும் வாகுடனே யுலகுதனில் வதிசயங்கள்
தந்திட்டார் லோகத்துமாந்தருக்கு தாரிணியில் வெகுகோடி சித்துசெய்தார்   
முந்திட்ட சாஸ்திரத்தில் சொல்லாதெல்லாம் முனையாகப் பாடிவைத்தா ரிந்நூலுக்குள்
தொந்திட்ட மானதொரு வித்தைமார்க்கம் தொழிலெல்லா மிப்புவியி லாடலாச்சே

விளக்கவுரை :


3649. வந்திட்ட போதையிலே முனிவர்தாமும் வாகுடனே யுலகுதனிலதிசயங்கள்  
தந்திட்டார் லோகத்து மாந்தருக்கு தாரிணியில் வெகுகோடி சித்துசெய்தார்   
முந்திட்ட சாத்திரத்தில் சொல்லாதெல்லாம் முனையாகப் பாடிவைத்தார் இந்நூலுக்குள்
தொந்திட்ட மானதொரு வித்தைமார்க்கம் தொழிலெல்லா மிப்புவியி லாடலாச்சே

விளக்கவுரை :


3650. ஆடினார் கோடான கோடிவித்தை அப்பனே யிப்புவியி லாடலாச்சு
கோடான கோடியுகம் இருக்கவென்று கொப்பெனவே காயாதி கற்பங்கொண்டார்
காடாண்மையாகவேதான் சித்துதாமும் வெகுகோடி ஜாலஞ்செய்தார் 
கூடான கூடுவிட்டு பாய்ந்துமேதான் குவலயத்தில் சித்துமுனி இல்லைதானே

விளக்கவுரை :


Powered by Blogger.