போகர் சப்தகாண்டம் 3536 - 3540 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3536. வைத்தபின்பு தனித்தகண்வாய்சேரும்பானை வகையேது ரெண்டுகொண்டுவந்து அதிலேவொன்றில்
மெய்த்திடவே கொடிவேலிப் பொடிபாதியிட்டு மேலாக சாதிலிங்கப் பொடிதனையே பரப்பி
சித்தாக வதின்மேலும் கொடிவேலி வேர்பொடியைச் சிறப்பாக நிறப்பிப்பின் மறுபானை தனக்கு
கைத்திடா வாழப்பழத்தினிலையுடனே கானமா முருக்கையிலையுங் கைகோர்த்துப்பிடியே

விளக்கவுரை :


3537. பிடித்து இருவகையிலையுந் தனிச்சாறாயெடுத்து யிதமாகமேல்பாளை தூரிலேதடவி
வடிதந்த பானைகொண்டுவாய்ச்சேர்த்துமூடி வகையாகச் சந்துவாய் ஏழுசிலைமண்ணும்
மடித்துநீ வுணர்த்தியதில் வெடித்தயிடந்தனக்கு பின்னுமந்த மண்தடவி யுணர்த்திவலுசெய்து
படித்ததொரு வஞ்செழுத்தால் முன்னவனைப்பணிந்து பாங்கான வுபதேசஞ் செய்தடுப்பிலேற்றே

விளக்கவுரை :

[ads-post]

3538. ஏத்தியனற் கமலம்போல் முப்பதுநாழிக்குள் யெரியிட்டு சத்தியதை எடுத்துநீகுருக்கே
பாத்தியலரெய்வதைத் தந்தச்சீலைமண் திறந்துபார்க்கவே மேல்பானைதூரிலேயிரதம்
வேற்றுமையாயிருக்குமதைப் பன்றிமுடியதனால் மெதுவாகத்துடைத்தெடுத்து விரும்பி வைத்துக் கொண்டால்
நாற்றிசையும் பார்க்கவே எடுத்தவகைக்கெல்லாம் நன்றாகக்கூடும் அதில்வகை சொல்லினாட்டே

விளக்கவுரை :


3539. நாட்டுவேன் திருநாமம் நீலகண்டவாலை நந்தியுரைப்படி யரைத்துசேர்க்கும் வகைக்கேளு
கூட்டுவேன் கண்டங்கத்திரியின் பழத்தைக்கொண்டுவந்து யிடித்ததனைத் தனிச்சாராயெடுத்து
வீட்டுவைத்துக்கொண்டதற்கு முன்னமேயெடுத்த வேதாந்த சாதிலிங்க யிரத்தைநிறுத்து
ஊட்டுநீ களஞ்சிக்காய் படிசாரளந்து யுறையுறைய விட்டதனை வைத்தமட்டுமறையே

விளக்கவுரை :


3540. அரைத்தெடுத்து ஒன்றிலே யடைத்துவைத்துக்கொண்டு அன்பாக சிவகாமிபூசைசெய்து
உரைத்துஅறவைத்த வெள்ளித்தகடாக்கி யிதிலேயுறவாக நீலகண்வாலைப்பூசி
யிரைத்து வளர்ந்திடும் கோழிப்புடம் போட்டெடுத்தால் யிடுந்தங்கம் போலமாத்துப் பத்தரையுங்காணும்
வரைத்தாறவைத்த செம்புத்தகட்டிலேபூசி வளர்க்கோழி புடம்போட மாற்றமாறரையாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3531 - 3535 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3531. தொழுதாரோ ராஜாதிராஜரெல்லாம் தொல்லுலகில் மாந்தர்முதல் அனேகங்கோடி
அழுதாரே தெய்வமென்று காலாகாலம் அவனியிலே யவருமல்லோ மண்ணாய்ப்போனார்
பழுதுவராதென்றுரைத்த தேகந்தானும் பாரினிலே மண்ணோடே மடியலாச்சு
முழுதுமே யிவர்தேகம் அழியாதென்று முனையான சாத்திரங்கள் சொல்லலாச்சே

விளக்கவுரை :


3532. ஆச்சென்ற தேகமது அழியலாச்சு அப்பனே சாத்திரமும் பொய்யுமாச்சு
வீச்சலுடன் கிருஷ்ணாவதாரந்தானும் விண்ணுலகில் மடியவென்ற நாளுமாச்சு
பாச்சலுடன் தேகமது பொய்யேவாழ்வு பாரினிலே இருந்தவர்கள் ஒருவருமில்லை
ஏச்சலுடன் இவர்களெல்லாம் மனதரல்லால் எழிலான தெய்வமென்று சொல்லொணாதே

விளக்கவுரை :

[ads-post]

3533. சொல்லவென்றால் இன்னமொரு கருமானங்கேள் சூட்சாதி சூட்சமுடன் செப்பக்கேளும்
வெல்லவே காலாங்கிநாதர்பாதம் விருப்பமுடன் தாள்பணிந்து விரித்துசொல்வேன்
மெல்லவே என்முன்னாய்நந்திதாமும் மேதினியில் சூதமுனி சித்தருக்கு
புல்லவே வுபதேசஞ் செய்தார்பாரில் பூவுலகில் சித்துமுனி நந்திதாமே

விளக்கவுரை :


3534. நந்தீசர் வேதமுனி சூதமுனி இவர்கள்நாதனடிபோற்றிசெய்து மகிழ்ந்திருக்கும்வேளை
யிந்திவொலக்க மெனவாதவித்தை செய்யயேதுவகை அருள்வேத முனிதான்கேட்க
தந்திமுகனைப் பணிந்து வுரைத்திடுவார்நந்தி தாரினியிலுள்ளவர்க்குச்சாகாதவரமும்
மந்திரத்தால் சத்திசித்தியாகும் வரலாறு மாத்ததிக மகுத்துவத்தில் வளமாதிபவர்வாமே

விளக்கவுரை :


3535. ஆதியானார் உமையாள் தன்னுடனே யன்பாயன் அருளியசொல் வேதமுனிக் கறிவித்தார்நந்தி
சாதிலிங்கந் தன்னிலிருப்பது களஞ்சிவாங்கித் தாமாக சிறுபயறுபோலநறுக்கி
நீதிசெறி யெலுமிச்சம் பழச்சாற்றிலிட்டு நேராக ஒருசாமம் வெயிலில் வைத்தெடுத்து
சூதில்லா கொடிவேலி வேரலனைக்கொண்டுதூளாக யிடித்ததையும் வேறுவைத்துக் கொள்ளே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3526 - 3530 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3526. துணையாக சத்தசாகரங்கடந்து துப்புறவாய் லோகவதிசயங்களெல்லாம்
பிணையுடனே இருவருமாய் லோகஞ்சுத்தி பிரியமுடன் சத்தகன்னிகையைக்கண்டு
பணையயுடன் திரவியங்கள் இல்லாமற்றான் பாரினிலே வெகுதீரவானனாக
கணையோடு வூர்வனத்தைச் சுற்றிவந்து கன்னிகையை மாலையிட்டார் கண்டீர்பாரே

விளக்கவுரை :


3527. பாரேதான் வடிவமுள்ள கன்னிமாரைப்பார்த்தனென்னும் வடிவழகன் மாலையிட்டு
நேரேதான் கீர்த்திபிரதாபனாக நெடுங்காலந் தானிருந்தார் தவசிருந்தார்  
ஊரேதான் பதியிழந்து மண்ணிழந்து வுத்தமனார் துரியனுட தீங்குதன்னால்
போரேனாமென்றுரைத்துக் காட்டகத்தில் பொங்கமுடன் பரணைதனிலிருந்தார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

3528. இருந்தாரே திரௌபதியும் ஐவர்தாமும் எழிலான காட்டகத்தில் நெடுங்காலம்தான்
பொருந்தாமல் வனவனமாய்த்தான் திரிந்து பொங்கமுடன் வெகுபாடு மிகவும்பட்டு
குருந்தமுடன் நற்சுகத்தை விட்டிழந்து குவலயத்தில் குடிவாழ்க்கை செய்துகொண்டு
வருந்தியே வவரவர்கள் பட்டபாடுதன்னை வைகுந்த கிருஷ்ணனவர் பார்த்திட்டாரே

விளக்கவுரை :


3529. பார்த்திட்ட கிருஷ்ணனவர் தெய்வமானால் பாருலகில் புஞ்சவரை ரட்சித்தாரோ
தீர்த்திட்ட தேசமது மனிதஜென்மம் திரளான சேனைகளு மிருந்துமென்ன 
கார்த்திடவே கிருஷ்ணனவர் வல்லபத்தால் காசினியில் வெகுகோடி ஜெனங்கள்தம்மை
பூர்த்திட்டமாகவல்லோ புனிதபாலன் புகழுடனே ரட்சிக்க முடியார்தாமே

விளக்கவுரை :


3530. முடியாது கோபாலர்தன்னாலப்பா மூதுலகில் வல்லமைகள் இருந்துமென்ன
நெடிதான பாவத்துக்காளுமாகி நெடுங்காலந் தாமிருந்தார் பூலோகத்தில் 
வடிவான தேகமது மடிந்துபோச்சு மண்டலத்தில் கிருஷ்ணனென்னும் பேரும்போச்சு
முடியான முடிவேந்த ரெல்லாருந்தான் முனையான தெய்வமென்று தொழுதார்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3521 - 3525 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3521. ஆச்சென்று பிரிதிவியோ டொக்கச்சேர்ந்து அப்பனே மண்கூடு தானுமாச்சு
மூச்சடங்கி தேகமது போகும்பாரு மூதுலகில் ஒருவருந்தான் இருந்ததில்லை
மாச்சலுடன் வீராதிவீரர் தாமும் மகாபத்திரகாளியென்றும் வர்ணித்தார்கள்
பாச்சலுடன் தேகமது பாழதாகி பாரினிலே மடிந்தார்கக் கோடியாமே

விளக்கவுரை :


3522. கோடியாமின்னமொரு கூத்துகேளிர் கூறுகிறேன் மானிடர்கள் அறியவென்று
நாடியே கிருஷ்ணாவதாரனப்பா நலமான துவாரகையிற் பிறந்தார் கண்டீர்
தேடியே லோகத்து மங்கைமாரை தேற்றமுடன் சிறையதுதா னெடுத்தானென்றும்
பாடியே பன்னீரு ஆயிரம்பேர் பட்சமுடன் வலதழித்தக் கதைகேட்டோமே

விளக்கவுரை :

[ads-post]

3523. கதையான மாந்தர்களை சிறையெடுத்து காசினியில் லீலாவினோதஞ்செய்து
கெதையுடனே சத்துருசங்காரஞ்செய்து கெவனமுடன் லீலாவி குளிகைகொண்டு
சிதைவுபட தாரணியில் அனந்தம்பேரை சீரழித்து கெடுத்துவிட்ட கோபாலன்தான்
வதைச்செய்யும் கோபாலன் வடிவைப்பற்றி வையகத்து மாந்தரெல்லாம் மயங்கினாரே

விளக்கவுரை :


3524. மயங்கினார் கோடான கோடிபெண்கள் மண்டலத்தில் கருஷ்ணாவதாரனுக்கு
தியங்கியே கற்பழிந்து தேகந்தன்னை திகழுடனே தத்தமக்காய் செய்துகொண்டார்
பயங்கமுடன் புராணங்கள் இதிகாசங்கள் பலபலவாங் கிருஷ்ணனது காதைதன்னை
புயங்கமுடன் புலவரெல்லாம் புகழ்ந்துபாடி பூதலத்தில் கதையுமுண்டாக்கினாரே

விளக்கவுரை :


3525. உண்டான சாத்திரத்தில் இன்னஞ்சொல்வோம் உத்தமனார் பஞ்சபாண்டவர்கூத்துதானும்
கொண்டாநரவிகளு மிகவாய்ச்செய்து கொற்றவனா மருச்சுனனார் தன்தமக்கு  
பண்டான மைத்துனராய் பேர்படைத்து பண்புடனே தங்கைதனை தானளித்து
திண்டான திரவியங்கள் உதவிசெய்து தீரமுடன் பார்தனுக்குத் துணையானாரே

விளக்கவுரை :


Powered by Blogger.