3521. ஆச்சென்று பிரிதிவியோ
டொக்கச்சேர்ந்து அப்பனே மண்கூடு தானுமாச்சு
மூச்சடங்கி தேகமது
போகும்பாரு மூதுலகில் ஒருவருந்தான் இருந்ததில்லை
மாச்சலுடன் வீராதிவீரர்
தாமும் மகாபத்திரகாளியென்றும் வர்ணித்தார்கள்
பாச்சலுடன் தேகமது பாழதாகி
பாரினிலே மடிந்தார்கக் கோடியாமே
விளக்கவுரை :
3522. கோடியாமின்னமொரு
கூத்துகேளிர் கூறுகிறேன் மானிடர்கள் அறியவென்று
நாடியே கிருஷ்ணாவதாரனப்பா
நலமான துவாரகையிற் பிறந்தார் கண்டீர்
தேடியே லோகத்து மங்கைமாரை
தேற்றமுடன் சிறையதுதா னெடுத்தானென்றும்
பாடியே பன்னீரு ஆயிரம்பேர்
பட்சமுடன் வலதழித்தக் கதைகேட்டோமே
விளக்கவுரை :
[ads-post]
3523. கதையான மாந்தர்களை
சிறையெடுத்து காசினியில் லீலாவினோதஞ்செய்து
கெதையுடனே
சத்துருசங்காரஞ்செய்து கெவனமுடன் லீலாவி குளிகைகொண்டு
சிதைவுபட தாரணியில்
அனந்தம்பேரை சீரழித்து கெடுத்துவிட்ட கோபாலன்தான்
வதைச்செய்யும் கோபாலன்
வடிவைப்பற்றி வையகத்து மாந்தரெல்லாம் மயங்கினாரே
விளக்கவுரை :
3524. மயங்கினார் கோடான
கோடிபெண்கள் மண்டலத்தில் கருஷ்ணாவதாரனுக்கு
தியங்கியே கற்பழிந்து
தேகந்தன்னை திகழுடனே தத்தமக்காய் செய்துகொண்டார்
பயங்கமுடன் புராணங்கள்
இதிகாசங்கள் பலபலவாங் கிருஷ்ணனது காதைதன்னை
புயங்கமுடன் புலவரெல்லாம்
புகழ்ந்துபாடி பூதலத்தில் கதையுமுண்டாக்கினாரே
விளக்கவுரை :
3525. உண்டான சாத்திரத்தில் இன்னஞ்சொல்வோம் உத்தமனார் பஞ்சபாண்டவர்கூத்துதானும்
கொண்டாநரவிகளு
மிகவாய்ச்செய்து கொற்றவனா மருச்சுனனார் தன்தமக்கு
பண்டான மைத்துனராய்
பேர்படைத்து பண்புடனே தங்கைதனை தானளித்து
திண்டான திரவியங்கள்
உதவிசெய்து தீரமுடன் பார்தனுக்குத் துணையானாரே
விளக்கவுரை :