போகர் சப்தகாண்டம் 3526 - 3530 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3526 - 3530 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3526. துணையாக சத்தசாகரங்கடந்து துப்புறவாய் லோகவதிசயங்களெல்லாம்
பிணையுடனே இருவருமாய் லோகஞ்சுத்தி பிரியமுடன் சத்தகன்னிகையைக்கண்டு
பணையயுடன் திரவியங்கள் இல்லாமற்றான் பாரினிலே வெகுதீரவானனாக
கணையோடு வூர்வனத்தைச் சுற்றிவந்து கன்னிகையை மாலையிட்டார் கண்டீர்பாரே

விளக்கவுரை :


3527. பாரேதான் வடிவமுள்ள கன்னிமாரைப்பார்த்தனென்னும் வடிவழகன் மாலையிட்டு
நேரேதான் கீர்த்திபிரதாபனாக நெடுங்காலந் தானிருந்தார் தவசிருந்தார்  
ஊரேதான் பதியிழந்து மண்ணிழந்து வுத்தமனார் துரியனுட தீங்குதன்னால்
போரேனாமென்றுரைத்துக் காட்டகத்தில் பொங்கமுடன் பரணைதனிலிருந்தார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

3528. இருந்தாரே திரௌபதியும் ஐவர்தாமும் எழிலான காட்டகத்தில் நெடுங்காலம்தான்
பொருந்தாமல் வனவனமாய்த்தான் திரிந்து பொங்கமுடன் வெகுபாடு மிகவும்பட்டு
குருந்தமுடன் நற்சுகத்தை விட்டிழந்து குவலயத்தில் குடிவாழ்க்கை செய்துகொண்டு
வருந்தியே வவரவர்கள் பட்டபாடுதன்னை வைகுந்த கிருஷ்ணனவர் பார்த்திட்டாரே

விளக்கவுரை :


3529. பார்த்திட்ட கிருஷ்ணனவர் தெய்வமானால் பாருலகில் புஞ்சவரை ரட்சித்தாரோ
தீர்த்திட்ட தேசமது மனிதஜென்மம் திரளான சேனைகளு மிருந்துமென்ன 
கார்த்திடவே கிருஷ்ணனவர் வல்லபத்தால் காசினியில் வெகுகோடி ஜெனங்கள்தம்மை
பூர்த்திட்டமாகவல்லோ புனிதபாலன் புகழுடனே ரட்சிக்க முடியார்தாமே

விளக்கவுரை :


3530. முடியாது கோபாலர்தன்னாலப்பா மூதுலகில் வல்லமைகள் இருந்துமென்ன
நெடிதான பாவத்துக்காளுமாகி நெடுங்காலந் தாமிருந்தார் பூலோகத்தில் 
வடிவான தேகமது மடிந்துபோச்சு மண்டலத்தில் கிருஷ்ணனென்னும் பேரும்போச்சு
முடியான முடிவேந்த ரெல்லாருந்தான் முனையான தெய்வமென்று தொழுதார்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar