3531. தொழுதாரோ ராஜாதிராஜரெல்லாம்
தொல்லுலகில் மாந்தர்முதல் அனேகங்கோடி
அழுதாரே தெய்வமென்று
காலாகாலம் அவனியிலே யவருமல்லோ மண்ணாய்ப்போனார்
பழுதுவராதென்றுரைத்த
தேகந்தானும் பாரினிலே மண்ணோடே மடியலாச்சு
முழுதுமே யிவர்தேகம்
அழியாதென்று முனையான சாத்திரங்கள் சொல்லலாச்சே
விளக்கவுரை :
3532. ஆச்சென்ற தேகமது அழியலாச்சு
அப்பனே சாத்திரமும் பொய்யுமாச்சு
வீச்சலுடன்
கிருஷ்ணாவதாரந்தானும் விண்ணுலகில் மடியவென்ற நாளுமாச்சு
பாச்சலுடன் தேகமது
பொய்யேவாழ்வு பாரினிலே இருந்தவர்கள் ஒருவருமில்லை
ஏச்சலுடன் இவர்களெல்லாம் மனதரல்லால்
எழிலான தெய்வமென்று சொல்லொணாதே
விளக்கவுரை :
[ads-post]
3533. சொல்லவென்றால் இன்னமொரு கருமானங்கேள் சூட்சாதி சூட்சமுடன் செப்பக்கேளும்
வெல்லவே காலாங்கிநாதர்பாதம்
விருப்பமுடன் தாள்பணிந்து விரித்துசொல்வேன்
மெல்லவே
என்முன்னாய்நந்திதாமும் மேதினியில் சூதமுனி சித்தருக்கு
புல்லவே வுபதேசஞ்
செய்தார்பாரில் பூவுலகில் சித்துமுனி நந்திதாமே
விளக்கவுரை :
3534. நந்தீசர் வேதமுனி சூதமுனி
இவர்கள்நாதனடிபோற்றிசெய்து மகிழ்ந்திருக்கும்வேளை
யிந்திவொலக்க மெனவாதவித்தை
செய்யயேதுவகை அருள்வேத முனிதான்கேட்க
தந்திமுகனைப் பணிந்து வுரைத்திடுவார்நந்தி
தாரினியிலுள்ளவர்க்குச்சாகாதவரமும்
மந்திரத்தால்
சத்திசித்தியாகும் வரலாறு மாத்ததிக மகுத்துவத்தில் வளமாதிபவர்வாமே
விளக்கவுரை :
3535. ஆதியானார் உமையாள் தன்னுடனே
யன்பாயன் அருளியசொல் வேதமுனிக் கறிவித்தார்நந்தி
சாதிலிங்கந் தன்னிலிருப்பது
களஞ்சிவாங்கித் தாமாக சிறுபயறுபோலநறுக்கி
நீதிசெறி யெலுமிச்சம்
பழச்சாற்றிலிட்டு நேராக ஒருசாமம் வெயிலில் வைத்தெடுத்து
சூதில்லா கொடிவேலி
வேரலனைக்கொண்டுதூளாக யிடித்ததையும் வேறுவைத்துக் கொள்ளே
விளக்கவுரை :