போகர் சப்தகாண்டம் 3641 - 3645 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3641. பாரேதான் சித்தொளிவு சப்தம்கேட்டு பாருலகில் மெத்தமதிசயந்தானப்பா
நேரேதான் சமாதிக்கு முன்னேநிற்க நேறான சமாதியது திறந்துமங்கே   
சீரேதான் நாதாந்த சித்துதாமும் சிறப்புடனே வெளிப்பட்டார் ஜோதியாக
கூரேதான் யவர்தன்னைக்கண்டபோது கொற்றவனார் திடுக்கிட்டு பயந்திட்டாரே

விளக்கவுரை :


3642. பயந்திட்ட புலிப்பாணி முனிவர்தாமும் பாரினிலே சித்தொளிவைக்கண்டபோது
நயந்திட்ட நமஸ்கார வஞ்சலிகள்செய்து நலமுடனே சித்தர்தாமும் எதிரேநின்று
சயந்திட்ட மனதோடு வுபதேசங்கள் சாங்கமுடன் பெறுவதற்கு மனதிலெண்ணி
வயங்கவே சித்தருகில் வந்துநின்று வன்மையுடன் கேள்விக்கு முன்னின்றாரே

விளக்கவுரை :

[ads-post]

3643. முன்னின்ற புலிப்பாணி தன்னைநோக்கி முன்யுகத்தில் சமாதிதனிலிருந்த சித்து
தன்முகமாம் நின்றதொரு புலிப்பாணிதம்மை தகமையுடன் சித்துமுனி யாரென்றென்ன
சொன்னமொழிகள் தனையேகேட்ட பாணிசொரூபமென்ற சித்துக்குக்கூறலுற்றார்
மன்னவனார் முன்னாளில் விறந்தசித்து கைலாசபோகரிஷி சீஷனானே

விளக்கவுரை :


3644. நானேதான் போகரிஷி சீஷனென்றால் நன்மையுடன் சித்துமுனி மனதுவந்து
தானேதான் புலிப்பாணி தம்மைநோக்கி சட்டமுடன் திருவாக்கு கூறலுற்றார்
வானோர்கள் துதிக்குமந்த போகர்தன்னின் வளமான சீஷனென்று சொன்னதாலே
ஞானோபதேசமது செய்வேனென்று வன்மையுடன் தாமுரைத்தார் சித்துதாமே

விளக்கவுரை :


3645. தாமான சித்தொளிவு நாதர்தாமும் தன்மையுடன் புலிப்பாணிநாதருக்கு
வாமேதான் சொன்னபடி உபசாரங்கள் நலமுடனே செய்துமல்லோ ஆசிர்மித்து
போமேதான் முன்யுகத்தில் பிரம்மாவுக்கும் பொங்கமுடன் வரசனுக்கு நடந்தசாபம்
வேமேதான் மேதினியில் எல்லாருந்தான் எழிலாகக் கண்டிருப்பார் முனிவர்தாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3636 - 3640 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3636. காண்டமா மிந்நூல்தான் சத்தகாண்டம் கருவான சித்தருட மரபுமார்க்கம்
ஆண்டவனார் நாதாந்த சித்தனென்றும் வவனியிலே பொய்ஞானி மெய்ஞானியென்றும்
தூண்டியே கருவிகாணாதியென்றும் துரையான சமாதியுட பீடந்தானும்
வேண்டியே சித்தருட சொரூபம்யாவும் வினையமுடன் பாடினதோர் காண்டமாமே

விளக்கவுரை :


3637. காண்டமா மிக்காண்டம் நான்காம்காண்டம் காசினியிலி லிருந்ததொரு சித்துதாமும்
வேண்டியதோர் அற்புதங்கள் மகிமையாவும் மேன்மையுடன் பாடிவைத்தேன் இக்காண்டத்துள்
தாண்டவம் இன்னம்வெகு சித்துமார்க்கம் சாற்றுகிறேன் காலாங்கி நாதர்தம்மால்
மாண்டதோர் மானிடர்கள் சித்துதாமும் மார்க்கமுடன் அறியலாமிதற்குள்தானே

விளக்கவுரை :

[ads-post]

3638. மானான யின்னமொரு மார்க்கம்பாரு தன்மையுள்ள என்சீஷன் ஒருவனப்பா
தேனான புலிப்பாணி யென்னுஞ்சித்தன் தேசத்தில் வேங்கையதை வாகனமாக்கி
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் தன்னிடத்தில் சென்றுமேதான்
மானான வுபதேசம் பெற்றுக்கொண்டு மானிலத்தில் செய்ததொரு வன்மைபாரே

விளக்கவுரை :


3639. வண்மையுடன் வெகுகாலம் லோகந்தன்னில் வளமையுடன் வேங்கையின் மேலேறிக்கொண்டு
திண்மையுடன் வலசாரியா இடசாரியாக திறமுடனே சுத்திவந்த சித்தனப்பா
கண்மையாய் சிலகாலம் வுபதேசம்பெற்று காலாங்கிநாதருட கிருபையாலே
உண்மையாய் சமாதிக்கு ஏகவென்று வுத்தமனும் மனவுறுதி கொண்டான்காணே

விளக்கவுரை :


3640. காணவே காடுமலை சுத்திவந்து கடிதான கிக்கிந்தா மலையினோரம்    
பூணவே சமாதிக்கு இடமுந்தேட புண்ணியனார் போகுமந்த காலந்தன்னில்
வேணபடி சித்துவொரு சமாதிகண்டார் விருப்பமுடன் சமாதிக்கு வருகேசென்று
சாணளவு தூரமது நிற்கும்போது சப்தமொன்று கேட்கலுற்றார் சித்துபாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3631 - 3635 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3631. காணவே வதிசயங்கள் சொல்லியேதான் காசினியில் வெளிப்பட்டார் யூகிதாமும்
பூணவே காயகற்பமுண்டுமல்லோ புகழாகச் சமாதிதனிலிருந்துவந்தார்
வேணபடி வுபசாரமதிகமாகி மேதினியில் தாமிருந்தார்கோடிகாலம்
தோணவே கூடுவிட்டு கூடுபாய்ந்தார் தோறாமல் தேகமது வேறாய்த்தானே

விளக்கவுரை :


3632. வேறாகத் தானிருந்த வன்மைசொல்வேன் வேண்டியே கைவேறாய்க் கால்வேறாய்
நேறாக வுடல்வேறாய் தலைவேறாய் நேர்மையுடன் பூமிதனிலிருந்துதித்து
சீராக லோகமதில் அனேகங்கூத்துகள் சிறப்புடனே யாடினதுமெத்தவுண்டு
பாராமல் கேட்டவரும் பார்த்தோருண்டு பாரினிலே வதிசயங்கள் மெத்ததானே

விளக்கவுரை :

[ads-post]

3633. தானான வதிசயங்கள் சாற்றக்கேளும் தகமையுள்ள குருபரனார் வித்தைதேடி
தேனான நூல்கள்முதல் யாவுந்தேர்ந்து தெளிவறவே யோகமுதல் வுளவுகற்று
கோனானயெனதையர் காலாங்கிநாதர் குருபரனார் அருளுடனே பாஷங்கொண்டார்
வேனான வெகுசித்து சொரூபசித்து வெளியான நாதவொளி யதீதமாமே

விளக்கவுரை :


3634. அதீதமாம் வதிசயங்கள் மெத்தசெய்து அவனியிலே யிருந்தவர்கள் வுண்டோசொல்லும்
தீதமுடன் மண்கூறாய்ப் போனாரப்பா துரைராஜர் வுலகுதனி லிருந்ததுண்டோ
கதீதமுள்ள தேகமது நிலைநில்லாது காசினியில் யாரேனும் இருப்பாருண்டோ
பதீதமுள்ள பொய்வாழ்வு யெனலாம் பாரினிலே யெல்லாமிப்படியேபாரே
விளக்கவுரை :


3635. பார்க்கையிலே தேகமது நிலைநில்லாது பார்லோகமெல்லாம் இப்படிதானாகும்
தீர்க்கமுடன் தேகத்தை நம்பியல்லோ திறமைகெட்டு மாண்டவர்கள்கோடாகோடி
ஊக்கமுடன் சித்ததமைக் கடவுளென்று உத்தமர்கள் சோடித்தார் பலருமப்பா
நோக்கமலம் வீற்றிருக்கும் வாணிபாதம் நேர்மையுடன் பாடிவைஃத்தகாண்டமாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3626 - 3630 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3626. கண்டாரே சித்தொளிவைக் கண்டபோது கண்காணா ஜோதிமயம்மென்னசொல்வோம்
அண்டசராசரங்களெல்லாம் கிடுகிடுத்து அங்ஙனவே ஒளிதனிலே மயங்கிபோனார்
தெண்டமுடன் கண்திறந்துபார்க்கும்போது தெளிவான ஸ்ரீசம்பாரனையுமப்பா
பாண்டுமிகப்பிரகாயந்தான் பாரினிலே தோற்றமது காணலாச்சே

விளக்கவுரை :


3627. காணவே யூகிமுனி சித்துபாலன் கண்டாரே ஸ்ரீசம்பாரனையர்தன்னை
தோணவே யவர்பாதம் தொட்டுமேதான் தொல்லுலகில் கீர்த்தியுடன் அடிபணிந்து
வேணதொரு வரமெனக்குத் தருகவென்று விருப்பமுடன் அஞ்சலிகள் செய்துகொண்டார்
பூணவே ரிஷியாரு முனியாருக்குப் புகழாக ஞானோபதேசம் செய்தார்பாரே

விளக்கவுரை :

[ads-post]

3628. பாரேதான் ஞானோபதேசம்பெற்று பாலகனும் சமாதிக்கு முன்னதாக
கூரேதான் சிலகாலமிருக்கவென்று கொற்றவனும் வுறுதியது மிகவுமாகி
தேரேதான் லட்சணங்கள் விதியேற்பாடு தெளிவான முறையோடு சமாதிக்கேக
நேரேதான் யூகிமுனி சித்துதாமும் நெடுங்கால சமாதிதனி லிருந்தார்தாமே

விளக்கவுரை :


3629. இருக்கவே யூகிமுனி சிலதுகாலம் எண்ணமுற்று சமாதிக்குப்போகும்போது
உருக்கலென்ற கல்லின்மேல் வரைந்தரூபம் வுத்தமனே சொல்லுகிறேன் மைந்தாகேளு
பொருக்கவே சிலகாலம் சமாதிருந்து புவிமீதில்வரும்போது வடையாளந்தான்
கருக்கலாய் பாலிரவு மிரண்டுமொன்றாய் பாருலகமிருக்குமென்று எழுதலாச்சே  

விளக்கவுரை :


3630. எழுதவே சீஷவர்க்கந் தன்னைக்கேட்டு ஏற்றமுடன் சமாதிதனி லருகிருந்தார்
தொழுதுமே சிலகாலமிருந்தாரங்கே தோற்றமுடன் சப்தமது கேட்கலாச்சு
பழுதுபடா தேகமது என்னசொல்வேன் பாரினிலே வெகுகால மிருந்துமேதான்
விழுதுபோல் ரோமங்கள் மிகவளர்ந்து விருப்பமுடன் மேதினியில் வந்தார்காணே

விளக்கவுரை :


Powered by Blogger.