போகர் சப்தகாண்டம் 3716 - 3720 of 7000 பாடல்கள்
3716. சித்தான கபிலமுனி
சொன்னவாக்கு சிறப்புடனே சமாதிக்குச் சென்றபின்பு
முத்தான வதிசயங்கள்
என்னவென்றால் மூதுலகில் யான்வரும்வேளைதன்னில்
பத்தியுடன் பாறைமேல்
எழுதும்பண்ணம் பாரினிலே இருளதுவும் மிகவுண்டாகி
சுத்தியே சூரியனார்
கண்மறைத்து துப்புறவாய் மூன்றுநாளிருக்கும்பாரே
விளக்கவுரை :
3717. பாரேதான் இருளதுவும் மிகவுமாகி பாரினிலே சத்தவொளி மிஞ்சலாகி
நேரேதான் வானுலகில்
தன்னிற்றோற்றும் நேரான தேவரெல்லாங் காணலாகும்
சீரேதான் கிறிஸ்துவிட
நாளைப்போல தேசமெல்லாம் விருளாகி வதீதங்காட்டும்
ஊரேதான் காண்பதுவு
மில்லையப்பா வுத்தாரப்படியாக நடக்குந்தானே
விளக்கவுரை :
[ads-post]
3718. தானான
சமாதிக்குப்பின்னாலப்பா பட்சமுடன் தூதாட்கள் நாலுபேர்கள்
கோனான குருசொன்ன வாக்குபோல
கொற்றவர்கள் எந்தனுக்கு முன்னதாக
பானான பராபரத்தின்
உத்தாரந்தான் பதமுடனே முந்நிற்பார் தேவர்வாக்கு
தேனான மனோன்மணியாள்
சித்தரூபி தேற்றமுடன் எதிர்நிற்பாள் திண்ணமாமே
விளக்கவுரை :
3719. திண்ணமுடன் சமாதியது
வெடித்தபின்பு திறமுடனே யடியேனும் வெளியில்வந்து
வண்ணமுடன் வதிசயங்கள்
மிகவுண்டாகும் வாகுடனே சிலகால மிருந்துமேதான்
நண்ணமுடன் வரும்போது
லோகமெல்லாம் நளினமுடன் வதிசயங்கள் தானடக்கும்
குண்ணமுடன் நமனாரும்
என்னைவந்து கூப்பிட்டுப் போவாரென்று உரைத்தார்தாமே
விளக்கவுரை :
3720. என்றபடி தாமுரைத்த வண்ணம்போல
எழிலாகத் தானடைந்து சிலதுகாலம்
வென்றிடவே கபிலமுனி
சித்துதாமும் வேகமுடன் மண்ணுக்கே இரையுமானார்
தென்றிசையில் சதுரகிரி
பக்கலாக தேற்றமுடன் சமாதிக்கு இடமுங்கண்டு
அன்றிடமாம் சமாதியது
மிகவும்பூண்டு அங்ஙனமே மண்ணாகப் போனார்தாமே
விளக்கவுரை :