போகர் சப்தகாண்டம் 3941 - 3945 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3941. தானான பிரம்மமொடு வயிந்திரபேதம் தாக்கான வைகிருது யொக்கத்தானும்
பானான யோகமது இருபத்தேழும் பாகமுடன் பாலித்தார் சீடருக்கு 
கோனான தன்வந்திரி பகவான்தானும் குவலயத்தில் சீடர்மேல் பட்சம்வைத்து
தேனான யோகமென்ற மார்க்கந்தன்னை தெளிவுடனே தாமுரைத்தார் தன்வந்திரியாமே

விளக்கவுரை :


3942. அமேதான் பலமுடனே பாவமுந்தானும் வப்பனே கெவனமுடன் கைதுளையுமாகும்
வேமேதான் காசியுடன் வனசிவமுமாகும் வெட்டவெளி பத்திரையாம் சகுனியிடமாகும்
தாமேதான் சதுடரதம் நாகலமுமாகும் தாக்கான கிமஸ்துவுடன் கரணமாகும்
போமேதான் கரணமது பதினொன்றாகும் பேர்காண போகத்துக்கு உறுதியாச்சே 

விளக்கவுரை :

[ads-post]

3943. ஆச்சப்பா ராசியது சொல்வேன்பாரு வப்பனே மேடமுடன் ரிஷபமாகும்
மாச்சலுடன் மிதுனமது கடகந்தானும் மகத்தான சிங்கமது கன்னியாகும்
வீச்சப்பா துலாவுடனே விருச்சிகந்தான் விரைவான தனுசுடன் மகரமாகும்
பாச்சலுடன் கும்பமது மீனமாகும் பாங்கான ராசியது பனிரண்டுமாமே

விளக்கவுரை :


3944. ரெண்டுடனே துலாராசி மெத்தநன்று எழிலுடனே கன்னிசிங்கமிருந்தால்நன்று
பண்டான சாத்திரங்கள் யாவுமல்லோ பாங்குடனே கண்டறிந்து சித்துயோகன்
கண்டாலும் விடுவார்கள் சித்துதான் காசினியில் தன்னோடே சேர்த்துக்கொள்வார்
உண்டான பொருளெல்லாம் அவர்க்கேயோதி வுத்தமனே சீடர்களாய்ச் செய்வார்தானே

விளக்கவுரை :


3945. செய்தாரே தன்வந்திரி பகவான்தானும் செயலான பாக்கியமும் நூலுந்தந்தார்
உய்யவே சீஷவர்க்கங்கண்டாராய்ந்து வுத்தமனே தேடினதோர் ஆயிரம்பேர்
கையவே சீஷவர்க்கமாயிரம்பேர் நலமுடனே விட்டகுறை யுள்ளபேர்கள்
துய்யவே தேர்ந்தெடுத்தோர் இவர்களாகும் துரைராஜ சுந்தரனே சொல்வேன்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3936 - 3940 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3936. அறியவே அகஸ்தியனார் செய்தநூலாம் அகண்டமெனும் பெருங்கடலுக்கொப்பதாகும்
முறியாமல் தன்வந்திரி செய்தநூலை மூன்றுலட்சங் கிரந்தமென வகுக்கலாகும்
சரியொத்த நூல்களுமே பாடிவைத்தார் சரியாக வகத்தியரும் அருபோற்சொன்னார்
தெரியவே லோகாதிமாண்பருக்கு தோற்றமுடன் பாடிவைத்தார் நூல்கள்தாமே

விளக்கவுரை :


3937. பாடிவைத்த மூன்றுலட்சங் கிரந்தந்தன்னை பாரினிலே வெகுகோடி சித்தர்தாமும்
நாடியே மிகப்பார்த்துக் கண்டாராய்ந்து நலமுடனே பதினெண்பேர் சித்தரெல்லாம்
கூடியே வெகுநூல்கள் செய்தார்பாரு குவலயத்தில் எவராலும் சொல்லப்போமோ
தேடியே தன்வந்திரி பகவான்தானும் தீர்க்கமுடன் சமாதிக்கு எண்ணினாரே

விளக்கவுரை :

[ads-post]

3938. எண்ணினார் காயாதிகற்பங்கொண்டு எழிலாகத் தாமிருந்தார் வுலகுதன்னில்
நண்ணமுடன் சீஷவர்க்க மனேகம்பேர்கள் நாடினார் தன்வந்திரி பகவான்தன்னை
வண்ணமுடன் வெகுகால மிருந்தசித்து வளமையுடன் சதுராதி மார்க்கமெல்லாம்
கண்ணபிரான் தானறிந்த சொரூபசித்து காசினியில் அவர்போலுஞ் சொல்லப்போமோ

விளக்கவுரை :


3939. சொல்லவே சீடருக்கு ஞானமார்க்கம் செப்பினார் சரிகைகிரி யோகமெல்லாம்
வெல்லவே விடகம்பம் பிரிதிமார்க்கம் வேதாந்த ஆகடியம் சௌபாக்கியந்தான்
புல்லவே சோபனமா மதிசண்டமார்க்கம் புகழான சுககர்மம் திரிதிபாதை
மெல்லவே சூலமொடு கண்டபத்திரம் மேதினியில் நேர்மையுடன் யிரைத்தார்பாரே

விளக்கவுரை :


3940. பாரேதான் விருத்தியுடன் துரூபம்யாவும் பாங்கான வியாகர்தம் அரிஷ்ணவேதம்
சீரேதான் வச்சிரமாஞ் சித்தியோகம் சிறப்பான விதியாக மனந்தங்கோடி
நேரேதான் விரியாகம்பதிகம்யாவும் நேர்மையுடன் சிவகண்டஞ்சித்தபோதம்
தீரேதான் யாத்திரங்கள் சுவாணகர்மம் சித்தமுடன் சிவசுப்பிமம் பிரம்மம்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3931 - 3935 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3931. போகின்றேன் தேரைமுனி சித்துகேளும் பொங்கமுடன் வையகத்தை யான்மறந்தேன்
சாகின்ற சடலமது யிருந்துமென்ன சதாகாலம் நேமநிஷ்டை கொண்டுமென்ன
தாகின்ற பொன்மணியின் ஜோதிபோலுஞ் சதாகாலம் எப்போதும் துலங்கவேண்டும்
வேகின்ற நெஞ்சமதை யிதங்கவைத்து வேகமுடன் சதாநித்தம் பணியநன்றே

விளக்கவுரை :


3932. பணியவே பதாம்புயத்தை நண்ணவேண்டும் பாங்கான மோட்சமதைக் கருதவேண்டும்
அணியவே மறுபடியுஞ் சமாதிக்காக வப்பனே யான்கொண்ட வுறுதிதன்னை
துணிவுடனே என்சீஷர் சித்துபாலா துனையாக நீயிருந்து செல்லுமட்டும்
கணிவுடனே வுபதேசம் பெற்றுமல்லோ காசினியில் இருப்பவனே சித்துவாமே

விளக்கவுரை :

[ads-post]

3933. சித்தான சித்துமுனி தேரையாகேள் சிறப்புடனே சமாதிக்குப் போறேனப்பா
புத்தான மண்மீதில் வருவதில்லை புகழான தேகமதை மறந்துவிட்டேன்
சத்தமது தானடங்கி மண்ணாப்போறேன் சாகின்ற தேகமது விழலாய்ப்போச்சே
பத்தியுடன் வுகுவரை முடிவுநாளில் பாலகனே எந்தனையுங் காணலாமே

விளக்கவுரை :


3934. காணலா மின்னமொரு மார்க்கம்சொல்வேன் காசினியில் தன்வந்திரியென்றசித்து
நீணவே கிரேதாயினுகத்திலப்பா நீடான விஷ்ணுவவதாரங்கொண்ட
பூணவே தன்வந்திரியான சித்து புகழான மகாவிஷ்ணுவவதாரத்தால்
வேணவே மேதினியில் சித்துமாகி வேதாந்த தன்வந்திரியென்னலாச்சே

விளக்கவுரை :


3935. என்னவே தன்வந்திரி யென்றசித்து எழிலான காயாதிகற்பங்கொண்டு
தென்பொதிகை தனிற்சென்று மேறுதன்னில் தேற்றமுடன் அகத்தியனார் தன்னைகண்டு
வண்பான சாத்திரங்களுள்ளாராய்ந்து அவர்கள்மீதில் பட்சம்வைத்து வன்புகூர்ந்து
சொன்னமொழி தப்பாமல் நயங்கள்பேசி சூட்சாதி சூசமெல்லா மறிந்தார்தாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3926 - 3930 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3926. வருகவே சித்துவரும் நாளுமாகி வாகுடனே புலஸ்தியரும் வந்துமேதான்
பெருகவே புலஸ்தியரும் வந்தபோது பேரான தேரையர் முனிவர்தாமும்
திருதலுடன் புலஸ்தியரைக் கண்டபோது தீர்க்கமுடன் நமஸ்கார மஞ்சலித்து
தருகவென வாசீர்மஞ் கொண்டனைத்து தக்கபடி மனுமுறைகள் கேட்டிட்டாரே

விளக்கவுரை :


3927. கேட்டவுடன் புலஸ்தியரும் மகிழ்ந்துமேதான் கெடியான வார்த்தையது மிகவுங்கூறி
நீட்டமுடன் லோகவதிசயங்களெல்லாம் நேர்மையுடன் தானுரைத்தார் சீஷனுக்கு
வாட்டமுடன் பூலோக வதிசயங்கள் யன்னமையுடன் போச்சுதென்று மனதிலுன்னி
தாட்டிகமாய்த் தேரைமுனிவர்தாமும் தமியேனைக் காக்கவென்று பணிந்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

3928. பணிந்துமே தேரையர்சித்துதாமும் பாங்குடனே குருபதத்தை தாள்பணிந்து
துணிவுடனே சொன்னதொரு மொழிகளெல்லாந் துரைராஜ சுந்தரனே நடந்துபோச்சு
அணியணியாய் சமாதியிடம் பக்கம்வந்து வன்புடனே காத்திருந்தார் சீஷவர்க்கம்
கனிவுடனே ஜெகஜோதி வருநாளாச்சு கர்த்தனே பதியைவிட்டு யேகினாரே

விளக்கவுரை :


3929. ஏகவே யதிசயங்களெல்லாங்கண்டு எழிலான பரமகுரு சித்துதாமும்
போகருட குருவர்க்கங் காலாங்கிநாதர் பொங்கமுடன் செய்ததொரு வதிசயம்போல
வேகமுடன் அகஸ்தியனார் சீடர்தாமும் வேதாந்தப் புலஸ்தியனார் செய்தார்கண்டீர்
சாகமுடன் சித்தரெல்லாம் பிரமித்தேங்கி சட்டமுடன் அவர்பதிக்கு போனார்தாமே

விளக்கவுரை :


3930. போனாரே சித்தர்கள்தான் சென்றபின்பு பொங்கமுடன் தேரையமுனிவருக்கு
தேனான புலஸ்தியரும் இன்னஞ்சொல்வார் தெளிவானன என்சீடர்மைந்தகேளு
கோனான குவலயத்திலிருந்துமென்ன கொப்பெனவே தேகமது நிற்பதில்லை
மானான வையகத்தின் ஆசைவிட்டேன் மன்னவனே சமாதிக்குப் போரேன்தானே

விளக்கவுரை :


Powered by Blogger.