போகர் சப்தகாண்டம் 3791 - 3795 of 7000 பாடல்கள்
3791. பாரேதான்
சீஷவர்க்கந்தனையழைத்து பாங்குடனே கமலமுனி கூறும்வண்ணம்
நேரேதான் தேகமதை மறந்தேனப்பா
நேர்மையுடன் பாசபந்த மற்றேனென்றார்
சீருடனே
வுயிர்த்தோழனிழந்தேனென்றார் சிறப்பான சீஷவர்க்கமறந்தேனென்றார்
தஈரேதான் பாருலகு
மறந்தேனென்றார் தீரமுடன் மூவாசை யற்றேன்தானே
விளக்கவுரை :
3792. தானான பேரின்ப
நிலையில்நின்று சார்பான சிற்றின்ப நிலைமறந்தேன்
தேனான எனதையர் புஜண்டரப்பா
குருவினதுவாக்கு பிசகாதுவண்ணம்
பானான மனோன்மணியை மனதிலுண்ணி
பாருலகில் வாக்குமுறை கூறலுற்றார்
தேனான என்குருவே புஜண்டநாதர்
தேற்றமுடன் சமாதிக்குப் போரென்றானே
விளக்கவுரை :
[ads-post]
3793. போகின்றேன்ன
யகத்தையான்மறந்து பொங்கமுடன் சமாதிதனிலிறங்கவேதான்
சாகின்ற சமாதியது
யடியேன்தானும் சட்டமுடன் சிலாகாலமிருப்பதற்கு
நோகின்றேன் எனதையர்
புஜண்டநாதர் நோக்கமுடன் அடியேனுஞ்சமாதிபூண
யாகின்ற யடியேனும்
நினைக்குங்காலம் பட்சசுடன் ஆதரிக்க வேண்டும்பாரே
விளக்கவுரை :
3794. வேண்டியே கமலமுனி
சித்துதாமும் வேதாந்த புஜண்டரைத்தான் நினைத்துமல்லோ
கூண்டுடனே காயமது
யழியாமற்றான் கொப்பெனவே சமாதிதனி லிறங்கும்போது
தூண்டியே சீஷர்களை தாமழைத்து
துப்புறவாய் கூறலுற்றார் கமலர்தாமும்
மாண்டுமே சீனபதிதன்னிலப்பா
மகத்தான சமாதிதனி லிறங்கிட்டேனே
விளக்கவுரை :
3795. இட்டேனே நெடுங்கால
மிருபதாண்டு எழிலான சமாதிதனிலிருப்பேனென்று
சட்டமுடன் அசரீரி
வாக்குண்டாச்சு சதானந்த சீஷரெல்லாங் காதில்கேட்டார்
திட்டமுடன் இருபதாண்டு
பின்பு தீரமுடன் மேதினியில் வருவேனென்று
கட்டான வாக்கியமும்
பிறக்கலாச்சு கருவான சீஷரெல்லாம் பயந்திட்டாரே
விளக்கவுரை :