போகர் சப்தகாண்டம் 3866 - 3870 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3866. ஏகினார் யாக்கோபு முனிவர்தாமும் எழிலான மக்காபுரி தன்னைக்கண்டார்
யூகிகாமதிமந்திரி யோகவானாம் வுத்தமனா ரங்கொருவர் தானிருந்தார்
யஓகியாஞ் சின்மயத்தில் சேர்ந்தசித்து யொளிவான ரிஷியொருவர் அங்கிருந்தார்
சாகினியாம் யாக்கோபு நாதர்தாமும் சட்டமுடன் உபதேசம் செய்தார்பாரே
விளக்கவுரை :


3867. பாறான யாக்கோபு நாதர்தாமும் பண்புடனே சித்தொளிக்கு யுபதேசித்து
நேறான தனக்குகந்த சீஷனாக்கி நேர்மையுடன் தான்கற்ற கல்வியெல்லாம்
சீரான சித்துமுனி ரிஷியாருக்கு சிறப்புடனே வையகத்து மார்க்கமெல்லாம்
நூரான மந்திரமாம் ஞானவர்க்கம் துறையோடும் முறையோடும் ஓதினாரே

விளக்கவுரை :

[ads-post]

3868. ஓதியே சிலகால மங்கிருந்து வுத்தமனார் யாக்கோபு முனிவர்தாமும்
நீதியுடன் சமாதிக்குப் போகவெண்ணி நித்திலங்குஞ் சீடனைத்தான் மனதுநோக்கி
சாதியுடன் மறப்புள்ளோரெல்லாம் தம்மை சட்டமுடன் தான்மறந்து சமாதிக்கேக
ஜோதியுட பரவொளியைக்காணவென்று சுத்தமுடன் மனந்தனிலே எண்ணினாரே

விளக்கவுரை :


3869. எண்ணியே தனக்குகந்த சீடனுக்கு எழிலாகத் தாமுரைப்பார் யாக்கோபாரும்
தண்ணமுடன் சமுசார வாழ்க்கையற்றேன் தகமையுள்ள மைந்தர்களை யான்மறந்து
நண்ணியே இல்லறத்தை துறந்துமல்லோ நாதாந்தப் பேரொளியை காண்பதற்கு
வண்ணமுடன் சமாதிதனி லிறங்கவென்று வையகத்து வாசையெல்லாம் மறந்திட்டாரே

விளக்கவுரை :


3870. மறந்தாரே பூலோக வாசையெல்லாம் மார்க்கமுடன் சின்மயத்தின் ஒளிவுகாண
துறந்தாரே மூவாசையற்றேனென்றார் துறவிக்கு வேந்தரெல்லாந் துரும்பேயென்பார்
சிறந்ததொரு வஷ்டபாக்கிய மறந்தேன் செயலான நீதிகளெல்லாம் விட்டொழிந்தேன்
இறந்தாரே தேகத்தை விட்டொழித்து எழிலான சமாதிதனி லிறங்கிட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3861 - 3865 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3861. விதியான வுபதேசஞ் சொல்லுவார்கள் விண்ணுலகு வதிசயங்கள் மிகவுரைப்பார்
மதிபோன்ற எந்தனிட போகநாதா வையகத்தில் நீர்காணும் புத்திமானாய்
துதியுடனே காலாங்கிசீஷனென்று துப்புரவாய் நீயுரைத்தபோதேயப்பா
கதிபெறவே யுந்தனுக்கு யாவுஞ்சொல்லி கருவான போகரென்று கருதுவாரே

விளக்கவுரை :


3862. கருதவே குளிகைகொண்டு போகநாதா கடலேழுஞ்சுத்திவருங் காலந்தன்னில்
நிருதமுள்ள ரிஷிகூட்டங் காணும்போது நித்திலங்கும் பூமுடியா சொல்வேன்கேளு
விருதுடைய குளிகைதனை பயர்த்தபோது விண்ணுலகு சித்தனென்று மனதிலெண்ணி
துரிதமுடன் குளிகைதனை பறிப்பதற்கு சூதுமுறை செய்வார்கள் சித்துதானே

விளக்கவுரை :

[ads-post]

3863. சித்தான முனிவருட சூதுபார்த்து சீருள்ள கண்மணியே போகநாதா
பத்தியுட னெந்தனையும் நினைத்தபோது பட்சமுடன் உந்தனுக்கு முதலாய்நின்று
வெத்தியுடன் மேதினியில் வாழ்வதற்கு வேதாந்தத் தாயினது கடாட்சத்தாலே
சத்தியமாய் பாதுகாப்பேனென்றுசொல்லி சமாதிக்குள் சத்தியங்கள் கூறினாரே

விளக்கவுரை :


3864. கூறவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் குவலயத்தில் எந்தனது குருவாநாதர்
தேறவே காலாங்கிநாதர் தாமும் தெளிவுடனே எந்தனுக்கு வுரைத்தவண்ணம்
மாறவே ராமரென்னும் பெயர்தான்கொண்ட மகத்தான யோக்கோபு சித்துதாமும்
ஆறவே சிலகாலம் பூமிதன்னில் அனேகவண்ணம் அதிசயங்கள் செய்திட்டாரே

விளக்கவுரை :


3865. செய்திட்டார் என்றலுமே எனக்குரைத்த தெளிவான வதிசயத்தை சொல்வேன்பாரே
வையகத்தில் வேங்கைதனில் வீற்றிஔருக்கும் வளமான புலிப்பாணி சித்தேகேளும்
தய்யநல்ல யாக்கோபு ரிஷியார்தாமும் துன்பசாகரமென்னும் மாய்கைதன்னை
பையவே விட்டொழித்து பாருமப்பா பாங்குடனே மக்காவுக்கேகினாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3856 - 3860 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3856. போதிப்பார் காலாங்கி நாதர்தாமும் பொன்னான கண்மணியே புகலக்கேளு
ஆதித்தன்போல யுதித்தபோகநாதா வன்புடைய சீஷனே யின்னங்கேளு
ஜோதியென்னும் மகமேரு பர்வதத்தில் சுந்தரா குளிகைகொண்டு போகும்போது
பாரிமதி சடையணிந்த தம்பிரான்போல் பாலகனே வேடமது பூணுவாயே

விளக்கவுரை :


3857. பூணுவாய் குளிகையது மிகவேபூண்டு புகழுடனே மேருகிரி தன்னிற்சென்று
காணுதற்கு நீயுமங்கே போவாயானால் கனமான சித்தொளிவு யனேகமுண்டு
வேணவுபசாரமு மிகவறிந்து வேகமுடன் குளிகைகொண்டு செல்லும்போரது
மூணுயேழுவரைதனையே காணவென்று முனையாகப் போம்போது வரிசைகேளே

விளக்கவுரை :

[ads-post]

3858. வரிசையுடன் ஒவ்வொருவரைகள்தோறும் வன்மையுடன் சித்தர்முனி ரிஷிகள்கூட்டம்
பரிவுடனே யாரென்று கேட்பாரப்பா பாலகனே யுந்தனையுமெங்கேவந்தாய்
சரியான பித்தனைபோல் குளிகைகொண்டு சட்டமுடன் மேருதனில் வந்தானென்று
மரியாதைத் தனையுமாறி வரம்புமீறி மகமேறிவந்தவன் நீயாரென்பாரே

விளக்கவுரை :


3859. ஆரென்று கேட்டுமல்லோ யுனைமிரட்டி வப்பனே கண்மணியே போகநாதா
பேரென்னவென்றுரைத்து யுன்னைக்கேட்டு பேரான மலைதனிலே வந்தவன்யார்
ஊரென்ன பதியென்ன யவர்தானப்பா வுத்தமனே குளிகைகொண்டு வந்ததென்ன
நீரென்ன வலுவல்கொண்டு யிங்குவந்தீர் நிட்சயமாய் சொல்லுமென வினவுவீரே

விளக்கவுரை :


3860. வினவியே கேட்கையிலே போகநாதா விருப்பமுடன் மனதுவந்து சொல்லக்கேளும்
தினகரன் தன்னொளிவீசும் காலாங்கிநாதர் திகழ்வேந்த சித்தொளிவின் சீஷனென்று
மனதுவந்து நீர்தானே சொல்வீரானால் மன்னவனே யுன்மீது கிருபைவைத்து
சினமதுவை விட்டொழித்து சித்தர்தாமும் சிறப்புடனே யுந்தனுக்கு விதிசொல்வாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3851 - 3855 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3851. கேளேதான் சீனபதி மார்க்கந்தன்னில் கெவனமுடன் குளிகையது கொண்டுநீயும்
நாளடா கோட்டையது காவல்தாண்டி நலமுடனே தான்போகும் வழியிலப்பா
கேளடா சித்தர்முனி யதிககூட்டங்கும்பல் கும்பலாகவல்லோ கூடியிருப்பார்  
வீளடா குளிகைகொண்டு போகும்போது விண்ணுலகு சித்தனென்று சபிப்பார்பாரே

விளக்கவுரை :


3852. பாரான சித்தர்முனி சபிப்பாரப்பா பாரினிலே மகிமையுள்ளசித்தருண்டு
தீரமுடன் எந்தனையும் பாராமற்றான் தீர்க்கமுடன் சபிப்பதற்கு வருவாரப்பா
கோரமுடன் ரிஷிமுனிவர் வந்தபோது கோபத்தை யடக்கியல்லோ யிதையுஞ்சொல்லி
சோரமது வுன்பேரில் நேராமற்றான் சொற்சோர்வு நேராமல் துணிவாய்நில்லே

விளக்கவுரை :

[ads-post]

3853. நிற்கையிலே சித்துமுனி யாரென்றாலே நீதியுள்ள காலாங்கி சீஷனென்று சொற்பமுள்ள
போகரிஷி நான்தானென்று சூட்சமுடந் தலைகுனிந்து வணக்கஞ்சொல்லி
அற்முள்ள எந்தனையும் ஆதரிக்க ஆண்டவனே யன்னைவிட குருதானுண்டோ
துப்புறவாய் அவர்பாதந் தொழுதிட்டாக்கால் தொல்லுலகில் வெகுகால மிருக்கலாமே

விளக்கவுரை :


3854. இருக்கலாம் கோடிவரை இருக்கலாகும் எழிலான கண்ணியனே போகநாதா
பொருக்கவே எந்தனுக்கு ஞானோபதேசம் பொருமையுடன் கொடுக்கவென்று வரமுங்கேளு
அருக்கனே என்தேவர் காலாங்கிநாதர் அவர்தானே நீயென்று தாள்பணிந்து
பெருக்கமுடன் கரங்குவித்து பதம்பணிந்து பேரான வுபதேசம் செய்குவீரே

விளக்கவுரை :


3855. செய்யவென்று கேட்கையிலே போகநாதா சேர்வைதர யுந்தன்மேல்கிருபைவைத்து
வுய்யதொரு கருவிகரணாதியெல்லாம் உத்தமனே வுந்தனுக்கு தத்தஞ்செய்வார்
மைவிழியார் தன்னாசையகற்றியேதான்மானிலத்தில் சமுசாரவாழ்க்கையற்று
பெய்யவே யுந்தனுக்கு மனதுவந்து பேரான வுபதேசம் போதித்தாரே

விளக்கவுரை :


Powered by Blogger.