3866. ஏகினார் யாக்கோபு
முனிவர்தாமும் எழிலான மக்காபுரி தன்னைக்கண்டார்
யூகிகாமதிமந்திரி யோகவானாம்
வுத்தமனா ரங்கொருவர் தானிருந்தார்
யஓகியாஞ் சின்மயத்தில்
சேர்ந்தசித்து யொளிவான ரிஷியொருவர் அங்கிருந்தார்
சாகினியாம் யாக்கோபு
நாதர்தாமும் சட்டமுடன் உபதேசம் செய்தார்பாரே
விளக்கவுரை :
3867. பாறான யாக்கோபு நாதர்தாமும்
பண்புடனே சித்தொளிக்கு யுபதேசித்து
நேறான தனக்குகந்த சீஷனாக்கி
நேர்மையுடன் தான்கற்ற கல்வியெல்லாம்
சீரான சித்துமுனி
ரிஷியாருக்கு சிறப்புடனே வையகத்து மார்க்கமெல்லாம்
நூரான மந்திரமாம்
ஞானவர்க்கம் துறையோடும் முறையோடும் ஓதினாரே
விளக்கவுரை :
[ads-post]
3868. ஓதியே சிலகால மங்கிருந்து
வுத்தமனார் யாக்கோபு முனிவர்தாமும்
நீதியுடன் சமாதிக்குப்
போகவெண்ணி நித்திலங்குஞ் சீடனைத்தான் மனதுநோக்கி
சாதியுடன்
மறப்புள்ளோரெல்லாம் தம்மை சட்டமுடன் தான்மறந்து சமாதிக்கேக
ஜோதியுட பரவொளியைக்காணவென்று
சுத்தமுடன் மனந்தனிலே எண்ணினாரே
விளக்கவுரை :
3869. எண்ணியே தனக்குகந்த
சீடனுக்கு எழிலாகத் தாமுரைப்பார் யாக்கோபாரும்
தண்ணமுடன் சமுசார
வாழ்க்கையற்றேன் தகமையுள்ள மைந்தர்களை யான்மறந்து
நண்ணியே இல்லறத்தை
துறந்துமல்லோ நாதாந்தப் பேரொளியை காண்பதற்கு
வண்ணமுடன் சமாதிதனி
லிறங்கவென்று வையகத்து வாசையெல்லாம் மறந்திட்டாரே
விளக்கவுரை :
3870. மறந்தாரே பூலோக வாசையெல்லாம்
மார்க்கமுடன் சின்மயத்தின் ஒளிவுகாண
துறந்தாரே
மூவாசையற்றேனென்றார் துறவிக்கு வேந்தரெல்லாந் துரும்பேயென்பார்
சிறந்ததொரு வஷ்டபாக்கிய
மறந்தேன் செயலான நீதிகளெல்லாம் விட்டொழிந்தேன்
இறந்தாரே தேகத்தை
விட்டொழித்து எழிலான சமாதிதனி லிறங்கிட்டாரே
விளக்கவுரை :