3861. விதியான வுபதேசஞ்
சொல்லுவார்கள் விண்ணுலகு வதிசயங்கள் மிகவுரைப்பார்
மதிபோன்ற எந்தனிட போகநாதா
வையகத்தில் நீர்காணும் புத்திமானாய்
துதியுடனே காலாங்கிசீஷனென்று
துப்புரவாய் நீயுரைத்தபோதேயப்பா
கதிபெறவே யுந்தனுக்கு
யாவுஞ்சொல்லி கருவான போகரென்று கருதுவாரே
விளக்கவுரை :
3862. கருதவே குளிகைகொண்டு போகநாதா
கடலேழுஞ்சுத்திவருங் காலந்தன்னில்
நிருதமுள்ள ரிஷிகூட்டங்
காணும்போது நித்திலங்கும் பூமுடியா சொல்வேன்கேளு
விருதுடைய குளிகைதனை
பயர்த்தபோது விண்ணுலகு சித்தனென்று மனதிலெண்ணி
துரிதமுடன் குளிகைதனை
பறிப்பதற்கு சூதுமுறை செய்வார்கள் சித்துதானே
விளக்கவுரை :
[ads-post]
3863. சித்தான முனிவருட
சூதுபார்த்து சீருள்ள கண்மணியே போகநாதா
பத்தியுட னெந்தனையும்
நினைத்தபோது பட்சமுடன் உந்தனுக்கு முதலாய்நின்று
வெத்தியுடன் மேதினியில்
வாழ்வதற்கு வேதாந்தத் தாயினது கடாட்சத்தாலே
சத்தியமாய்
பாதுகாப்பேனென்றுசொல்லி சமாதிக்குள் சத்தியங்கள் கூறினாரே
விளக்கவுரை :
3864. கூறவே யின்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் குவலயத்தில் எந்தனது குருவாநாதர்
தேறவே காலாங்கிநாதர் தாமும்
தெளிவுடனே எந்தனுக்கு வுரைத்தவண்ணம்
மாறவே ராமரென்னும்
பெயர்தான்கொண்ட மகத்தான யோக்கோபு சித்துதாமும்
ஆறவே சிலகாலம் பூமிதன்னில்
அனேகவண்ணம் அதிசயங்கள் செய்திட்டாரே
விளக்கவுரை :
3865. செய்திட்டார் என்றலுமே எனக்குரைத்த தெளிவான வதிசயத்தை சொல்வேன்பாரே
வையகத்தில் வேங்கைதனில்
வீற்றிஔருக்கும் வளமான புலிப்பாணி சித்தேகேளும்
தய்யநல்ல யாக்கோபு
ரிஷியார்தாமும் துன்பசாகரமென்னும் மாய்கைதன்னை
பையவே விட்டொழித்து
பாருமப்பா பாங்குடனே மக்காவுக்கேகினாரே
விளக்கவுரை :