போகர் சப்தகாண்டம் 3856 - 3860 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3856 - 3860 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3856. போதிப்பார் காலாங்கி நாதர்தாமும் பொன்னான கண்மணியே புகலக்கேளு
ஆதித்தன்போல யுதித்தபோகநாதா வன்புடைய சீஷனே யின்னங்கேளு
ஜோதியென்னும் மகமேரு பர்வதத்தில் சுந்தரா குளிகைகொண்டு போகும்போது
பாரிமதி சடையணிந்த தம்பிரான்போல் பாலகனே வேடமது பூணுவாயே

விளக்கவுரை :


3857. பூணுவாய் குளிகையது மிகவேபூண்டு புகழுடனே மேருகிரி தன்னிற்சென்று
காணுதற்கு நீயுமங்கே போவாயானால் கனமான சித்தொளிவு யனேகமுண்டு
வேணவுபசாரமு மிகவறிந்து வேகமுடன் குளிகைகொண்டு செல்லும்போரது
மூணுயேழுவரைதனையே காணவென்று முனையாகப் போம்போது வரிசைகேளே

விளக்கவுரை :

[ads-post]

3858. வரிசையுடன் ஒவ்வொருவரைகள்தோறும் வன்மையுடன் சித்தர்முனி ரிஷிகள்கூட்டம்
பரிவுடனே யாரென்று கேட்பாரப்பா பாலகனே யுந்தனையுமெங்கேவந்தாய்
சரியான பித்தனைபோல் குளிகைகொண்டு சட்டமுடன் மேருதனில் வந்தானென்று
மரியாதைத் தனையுமாறி வரம்புமீறி மகமேறிவந்தவன் நீயாரென்பாரே

விளக்கவுரை :


3859. ஆரென்று கேட்டுமல்லோ யுனைமிரட்டி வப்பனே கண்மணியே போகநாதா
பேரென்னவென்றுரைத்து யுன்னைக்கேட்டு பேரான மலைதனிலே வந்தவன்யார்
ஊரென்ன பதியென்ன யவர்தானப்பா வுத்தமனே குளிகைகொண்டு வந்ததென்ன
நீரென்ன வலுவல்கொண்டு யிங்குவந்தீர் நிட்சயமாய் சொல்லுமென வினவுவீரே

விளக்கவுரை :


3860. வினவியே கேட்கையிலே போகநாதா விருப்பமுடன் மனதுவந்து சொல்லக்கேளும்
தினகரன் தன்னொளிவீசும் காலாங்கிநாதர் திகழ்வேந்த சித்தொளிவின் சீஷனென்று
மனதுவந்து நீர்தானே சொல்வீரானால் மன்னவனே யுன்மீது கிருபைவைத்து
சினமதுவை விட்டொழித்து சித்தர்தாமும் சிறப்புடனே யுந்தனுக்கு விதிசொல்வாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar