போகர் சப்தகாண்டம் 3851 - 3855 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3851 - 3855 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3851. கேளேதான் சீனபதி மார்க்கந்தன்னில் கெவனமுடன் குளிகையது கொண்டுநீயும்
நாளடா கோட்டையது காவல்தாண்டி நலமுடனே தான்போகும் வழியிலப்பா
கேளடா சித்தர்முனி யதிககூட்டங்கும்பல் கும்பலாகவல்லோ கூடியிருப்பார்  
வீளடா குளிகைகொண்டு போகும்போது விண்ணுலகு சித்தனென்று சபிப்பார்பாரே

விளக்கவுரை :


3852. பாரான சித்தர்முனி சபிப்பாரப்பா பாரினிலே மகிமையுள்ளசித்தருண்டு
தீரமுடன் எந்தனையும் பாராமற்றான் தீர்க்கமுடன் சபிப்பதற்கு வருவாரப்பா
கோரமுடன் ரிஷிமுனிவர் வந்தபோது கோபத்தை யடக்கியல்லோ யிதையுஞ்சொல்லி
சோரமது வுன்பேரில் நேராமற்றான் சொற்சோர்வு நேராமல் துணிவாய்நில்லே

விளக்கவுரை :

[ads-post]

3853. நிற்கையிலே சித்துமுனி யாரென்றாலே நீதியுள்ள காலாங்கி சீஷனென்று சொற்பமுள்ள
போகரிஷி நான்தானென்று சூட்சமுடந் தலைகுனிந்து வணக்கஞ்சொல்லி
அற்முள்ள எந்தனையும் ஆதரிக்க ஆண்டவனே யன்னைவிட குருதானுண்டோ
துப்புறவாய் அவர்பாதந் தொழுதிட்டாக்கால் தொல்லுலகில் வெகுகால மிருக்கலாமே

விளக்கவுரை :


3854. இருக்கலாம் கோடிவரை இருக்கலாகும் எழிலான கண்ணியனே போகநாதா
பொருக்கவே எந்தனுக்கு ஞானோபதேசம் பொருமையுடன் கொடுக்கவென்று வரமுங்கேளு
அருக்கனே என்தேவர் காலாங்கிநாதர் அவர்தானே நீயென்று தாள்பணிந்து
பெருக்கமுடன் கரங்குவித்து பதம்பணிந்து பேரான வுபதேசம் செய்குவீரே

விளக்கவுரை :


3855. செய்யவென்று கேட்கையிலே போகநாதா சேர்வைதர யுந்தன்மேல்கிருபைவைத்து
வுய்யதொரு கருவிகரணாதியெல்லாம் உத்தமனே வுந்தனுக்கு தத்தஞ்செய்வார்
மைவிழியார் தன்னாசையகற்றியேதான்மானிலத்தில் சமுசாரவாழ்க்கையற்று
பெய்யவே யுந்தனுக்கு மனதுவந்து பேரான வுபதேசம் போதித்தாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar