போகர் சப்தகாண்டம் 3981 - 3985 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3981. நிற்கவே சுந்தரானந்தர்தாமும் நெடிதான வசரீரிவாக்குசொல்வார்
விற்பனமாங்கொண்டதொரு சீஷர்தாமும் விண்ணுலகில் எல்லவருங்கேட்டிருங்கள்
சொற்படியே தான்நடக்கும் சுந்தரன்சொல் தொல்லுலகில் பொய்யாது மெய்யேயாகும்
கற்புதைத்த பாறையது வெடிக்கும்போது கைலாச சுந்தரரும் வருவன்தானே

விளக்கவுரை :


3982. தானான சுந்தரரும் வருகும்போது தாரிணியில் வெகுகோடி வதிசயங்கள்
பானான பராபரியும் முன்னேநிற்பாள் பாருலகந்தத்தளிக்கும் ஜோதிகாணும்
மானான வையகங்களிருண்டுபோகும் மகத்தான நாதாக்கள் நடுங்குவார்கள்
கூனான மொண்டிசப்பானியெல்லாம் குரைநீங்கி பிணிநீங்கி யெதிர்நிற்பாரே

விளக்கவுரை :

[ads-post]

3983. எதிரான சூரியனும் மங்கிநிற்பான் யெழுகடலுந்திசைமாறி பொங்கிநிற்கும்
சதிரான நாலுயுக வதிசயங்கள் சார்புடனே எக்காலுங் காணலாகும்
மதிபோன்ற சந்திரனும் எதிரேநிற்பான் மாசற்ற வருந்துதியும் நடுங்கும்பாரு
துதியான வஞ்சலிகள் மிகவே செய்வார் தொல்லுலகந் தத்தளிக்கக் காணலாமே

விளக்கவுரை :


3984. காணலாங் கைலாசமேருதானும் கண்ணுக்குத் தோற்றுமே கடினமில்லை
வேணபடி வுபசாரமிகநடக்கும் மேதினியில் சுந்தரனார் வாக்குபொய்யா
தோணவே யித்தியாதி வதிசயங்கள் தொல்லுலகில் தானடக்கும் சத்தியசத்தியம்
நீணவே எந்தனது சமாதிபாறை நெடியதொரு வதிசயங்கள் யின்னங்கேளே

விளக்கவுரை :


3985. கேளப்பா யான்வருகுங் காலந்தன்னில் கெனிதமுடன் பாறையதுமீதிலப்பா
நாளப்பா வருகுநாலெழுதலாகும் நாதாக்கள் புத்தியுள்ளோர் காணுவீர்கள்
ஆளப்பா வாசகத்தை கண்டபோது வப்பனே சமாதியுள் சிலம்பினோசை  
வீளப்பா செவிதனிலே கேட்கும்பாரு விட்டகுறை யிருந்தோர்க்கு லபிக்குந்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3976 - 3980 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3976. பொய்யான வுலகத்தில் மாந்தரப்பா பொங்கமுடன் கருமிகளு மெத்தவுண்டு
மெய்யாக வவர்களிடம் வாய்பேசாதே வேதாந்த நுட்பமதைக் காட்டவேண்டாம்
துய்யதொரு காயாதிகற்பந்தன்னை சூட்சத்து துறையதனைக் கூறவேண்டாம்
வையவே வுறவுகண்டு விடையுங்கேட்பார் பகராதே ஒருயக்காலும் மகிழ்ந்திடாதே

விளக்கவுரை :


3977. மகிழவே யுந்தனுக்கு யிதவுசொல்லி மாராட்டமாகவல்லோ கும்பல்கூடி  
நெகிழவே ஞானத்துக் குறுதிகேட்டார் நெடிதான பாலமுர்த போதையுண்டு
மகிழவே தடுமாட்ட மிகவேகூறி தருக்கமது செய்துமல்லோ கருவிகேட்பார்
அகிழவே கருவதனால் உன்னைக்கொல்ல வப்பனே கபடுதந்திரஞ் செய்வார்பாரே

விளக்கவுரை :

[ads-post]

3978. பாரேதான் முழுமக்கள் கருமியோடு பகராதே வுன்னுக்குள் மருமவித்தை
தீரமுடன் சிவயோக நிலையிற்சென்று தீர்க்கமுடன் சதாநித்தம் பருவமாகி
நேரேதான் தீவழியை விட்டுநீங்கி நேர்மையுடன் நல்வழிக்கு யாளதாகி  
கூரேதான் குவலயத்தில் அடக்கங்கொண்டு கொற்றவனே வாழ்குவது புத்தியாமே

விளக்கவுரை :


3979. புத்தியாம் இன்னம்வெகு மார்க்கஞ்சொல்வேன் புகழான கண்ணிமையே புகலக்கேளும்
சத்தியத்துக் கொருநாளும் குறைவராது தாரிணியில் நீயுமொரு சித்தனாவாய்
வெத்தியுண்டு விசுவாசமருளுமுண்டு வேதாந்தப் பெருங்கடலை வெல்லலாகும்
எத்திசையும் உந்தனையே புகழ்வார்பாரு எழிலான சீஷவர்க்க முதலவனாமே

விளக்கவுரை :


3980. ஆமேதான் அறிவுள்ள டமறானந்தர் வவனியிலே நீயுமொரு புத்திவானாய்
தாமேதான் யான்வருங்காலமட்டும் தன்மையுடன் சமாதியிட பக்கல்நின்று
நாமேதான் சொன்னபடி விதியின்மார்க்கம் நாட்டமுடன் தானிருந்துபத்திகொண்டு
போமேதான் வீண்காலங்கழியாமற்றான் பொங்கமுடன் சமாதியிடம் நிற்பீர்தாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3971 - 3975 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3971. தானான மண்டபந்தான் லட்சங்காலாம் தாக்கான வாய்க்கால் நடுமையத்தில்
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் சொற்படிக்கிக் கண்டேன்யானும்
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேசமெல்லாஞ் சுத்திவந்த சொரூபசித்து
வானான வையகத்திலிருந்த சித்து வளமுடனே காலாங்கி யென்னும்பாரே
விளக்கவுரை :


3972. பாரான சுந்தரானந்தசித்து பெருமையுடன் வுலகுதனில் வாழ்ந்தசித்து
சீரான சுந்தராநாதர்தாமும் சிறப்புடனே சமாதிக்கு செல்லவெண்ணி
கூரான சீஷவர்க்கக்கூட்டத்தோடு கொடுமுடி கைலாசர்போலேதானும்
சேரான வருங்கடலைத் தேடியல்லோ சேனையுடன் வந்தாரே சித்துகாணே

விளக்கவுரை :

[ads-post]

3973. சித்தான சொரூபமென்ற சித்துதாமும் செழுமையுடன் சிலகாலமிருந்துமேதான்
முத்தான பவக்கடலை யொழித்துமல்லோ மூதுலகில் சமாதிக்குப்போகவென்று
பத்தியாய் சீஷருடன் பரமநாதா பாருலகுவாசல்தனைவிட்டொழித்து
நித்தியமு தானதொரு கடவுதன்னை நிட்களமாய் தானினைத்து துதித்திட்டாரே

விளக்கவுரை :


3974. துதித்துமே ஐராவதத்தின் பக்கல் துறையான வாற்றோரந் தன்னிற்சென்று
மதிப்பான சங்கநிதி பதுமநிதிதன்னை மார்க்கமுடன் கண்டல்லோசித்துதாமும்
விதிப்படியே சமாதிக்கு யிடமுந்தேடி விருப்பமுடன் தானழைத்து சீஷர்தம்மை
ததியான மாண்பர்களே பின்னுங்கேளும் தன்மையுடன் சமாதிக்குச் செல்வேன்பாரே

விளக்கவுரை :


3975. பாரப்பா சமாதிதன்னி லிரங்கியல்லோ பத்தாண்டு முடிவுவரையிருப்பேனென்றும்
சீரப்பா சிலகாலஞ்சென்றபின்பு சிறப்புடனே வையகத்தில் வருவேனென்றும்
காரப்பா சமாதியிடம் வீற்றிருங்கள் காசினியில் வெகுகோடிவதிசயங்கள்
நேரப்பா வதிசயங்கள் காணப்போரீர் நேர்மையுடன் சித்தனது வுரைபொய்யாதே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3966 - 3970 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3966. ஆச்சப்பா சீஷவர்க்கஞ் சொல்லக்கேளும் வப்பனே பின்னுமல்லோ சமாதிசொல்வேன்
மூச்சடங்கி சமாதிதனில் இருப்பேனென்றும் மூதுலகில் மறுபடியும் வருவதில்லை
மாச்சலுடன் வுகமது முடிவுகாலம் மகிழ்ச்சியுடன் சீடர்களைக் காணலாகும்
வாச்சுதே விட்டகுறை நேருமானால் வளமான சீஷரெல்லாங் காண்பேன்பாரே

விளக்கவுரை :


3967. பாரேதான் என்றலுமே பகவான்தானும் பாரின்மிசை யாசையது விட்டொழித்து
நேரேதான் சமாதிக்கு சென்றாரங்கே நேர்மையுடன் பகவானும் மண்ணிற்சென்று
போரேன்யான் பொன்னுலகப் பதியைத்தேடி பொங்கமுடன் எந்தனது வாசையற்று
சீராக தானிருங்கள் சீஷவர்க்கம் சிற்பரனார் பதிபோரேன் என்றார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

3968. தாமான யின்னமொரு சூட்சங்கேளு தகமையுள்ள சுந்தரானந்தசித்து
காமான சித்தினுட பெருமைசொல்வேன் காசினியில் இவர்போலும் சித்துமுண்டோ
வேமான மானதொரு சித்துதாமும் வெகுகோடி காலம்வரைதாமிருந்தார்
நாமான மென்றதொரு காயகற்பம் நாதாந்த சித்துமுனி கொண்டார்தாமே

விளக்கவுரை :


3969. கொண்டதொரு சுந்தரானந்தர் தாமும் குவலயத்தில் வெகுமாண்பர்சித்தருக்கு
அண்டமுடியானதொரு சாத்திரங்கள் வனேகமாய்க் கற்பித்தார் சித்தர்தாமும்
கண்டறிந்த சித்துவர்க்கமாயிரம்பேர் கருவாளி கூடிருந்தார்சித்துதாமும்
தொண்டரெனும் சித்துமுனி சீஷவர்க்கம் துரைராஜ சுந்தரனை சூழ்ந்தார்பாரே

விளக்கவுரை :


3970. பாரேதான் சுந்தரானந்த சித்து பாரினிலே இருந்தசுகம் போதுமென்று
நேரேதான் வடக்குமுகந் தன்னிலப்பா நெடுந்தூரமான வயிராவதந்தான்
சீரேதான் யெண்ணூறு காதமப்பா சிறப்பான வயிராவதமலைதானாகும்
ஆரொன்று மலையோரந் தன்னிலுண்டு வழகான மண்டபந்தா னிருக்குந்தானே

விளக்கவுரை :


Powered by Blogger.